Thursday, 24 December 2009

அக்னிக்குஞ்சு --பாகம் 3

அன்னையை பிரிந்த மழலையாய் வாடினான்..பிரவின்..சுவற்றில் கடிகாரம் மணி 8 என்று சொல்லிக்கொண்டிருந்தது..ஐய்யோ இப்பவே மணி 8 ஆச்சே.. 10 மணிக்கு கடைசி ட்ரெயின்..அதை விட்டா நாளைக்கு தானே இருக்கு.. நினைக்கும் போதே உடம்பில் இரத்தம் அதி வேகமாக ஓடுவதுப்போல இருந்தது அவனுக்கு.,,உடனே தன் நண்பனுக்கு போன் செய்தான் டேய் சக்தி நான் உடனே சென்னை போகனும் 10 மணிக்கு இருக்கிற மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணு பிளிஸ்டா.. ஹேய் என்னடா ஆச்சு...ஏன் டென்சனா இருக்க..??பிரவின் சொன்னது கேட்டு என்னடா நீ இப்படி பண்ணிட்டா..சரி பயப்படாதே ..பாரதிக்கு ஒண்ணும் ஆகாது..அவ புத்திசாலி பொண்ணுடா..கவலைப்படாதே நான் டிக்கெட் புக் பண்ணிட்டு உன்னை வந்து கூட்டிட்டு போறேன் ஓகே.. ஓகேடா..தொலைப்பேசி சக்தி இழந்தது..

என்ன செய்வது என்று தோன்றவில்லை பிரவீனுக்கு..அப்படியே படுக்கையில் விழுந்தான்.. கட்டில் அருகே இருந்த புகைப்படத்தில் அவன் பிறந்த நாளைக்கு தனக்கு கேக் ஊட்டியப்படி இருந்த பாரதியின் புன்னகை இவனது மனதில் இன்னும் வழியை ஏற்படுத்தியது.அழுதான்.. பாரதி என்னை மன்னிச்சுடு என்னை விட்டு போய்டாதே... நீ இல்லனா நானும் இல்லை...

வீட்டின் முன்னே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு எழுந்தவன் சன்னல் வழியே பார்த்தான் சக்தி காரிலிருந்து வெளியே இறங்கினான். முகத்தை துடைத்துவிட்டு கதவை திறந்தான். என்னடா நீ இன்னும் புறப்படலையா இப்போ மணி 9 ஆகுது.. 10 மணிக்கு ட்ரெயின்..இதோ இப்போ ரெடி ஆகிடுறேன்.. சரி நீ போய் முகம் கழுவிட்டு ரெடி ஆகு நான் உன் திங்ஸ்லாம் எடுத்து வைக்கிறேன்..

தென்றலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ..... செல்போன் பாடியது..சக்தி எடுத்து ஹேலோ...யாருங்க .. நான் தான் பாரதியோட அப்பா பேசுறேன் ...ஓ.. நீங்களா..பாரதி எப்படி இருக்கா அப்பா.. நான் தான் சக்தி பேசுறேன்... அவர் சொன்னது கேட்டு அதிர்ந்து போனான்.சக்தி.
பிரவின் தயாராகி வந்துக்கொண்டிருந்தான். யாருடா ?? பாரதியோட அப்பாடா.. என்னாச்சு அவளுக்கு என்ன சொன்னார்? இல்ல நீ புறப்பட்டாச்சானு கேட்டார்டா...இன்னும் 3 மணி நேரத்தில் அங்கே இருப்போம்னு சொன்னேன்.. வேறு எதும் சொல்லலையா ??இல்லடா ஓகே போலாமா??சரிடா...


ரெயில் நிலையம் வரை இருவரிடம் மொளனமே நிலவியது. பயணிகள் கவனத்திற்கு சென்னை வழியே மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் தடம் எண் 3 நோக்கி
வந்துகொண்டிருக்கிறது. அழகான குரல் அறிவித்துகொண்டிருந்தது. நல்ல வேளை சரியான நேரத்திற்கு வந்தோம். பிரவின் தனக்கு பதிவு செய்த இருக்கையில் போய் இருந்தான். சக்தியும் அவனருகே போய் இருந்தான்.
ரொம்ப நன்றிடா சக்தி நீ இல்லைனா இன்னைக்கு நான் போகமுடியாது.ஹேய் என்னடா நீ நன்றிலாம் சொல்லிகிட்டு.ட்ரெயின் மெதுவாகா நகர்ந்தது..சரிடா நீ போ சக்தி ..ட்ரெயின் மூவ் ஆகுதுல... உன்னை இப்படி விட்டுட்டு எப்படிடா என்னால போக முடியும் எனக்கும் சேர்த்து தான் டிக்கெட் எடுத்தேன்.பிரவின் மொழியின்றி கண்ணில் நீர் தழும்ப சக்தியை பார்த்தான்..


என்னடா நீ சின்னப்புள்ளப் போல ..ஆபத்துல உன்கூட இல்லைனா நான் என்னடா ஃப்ரெண்ட்..கண்ணை துடைத்து தன் மேல் சாய்த்துக்கொண்டான்.. ட்ரெயின் வேகமாக சென்றுக்கொண்டிருந்த்து. பக்கத்து இருக்கையில் வயதான ஒருவர்..பகவத்க்கீதையில் கண்ணன் அர்ச்சுனன்னுக்கு வழங்கிய கீதா உபதேசம் படித்துக்கொண்டிருந்தார்.

பிரவின் இந்தா காபி சாப்பிடுடா..இல்லை வேண்டாம்டா.. நீ எதும் சாப்பிட்டு இருக்க மாட்டனு தெரியும் அதான் நானே அபிட்ட சொல்லி உனக்கு காபியும் ,தோசையும் செய்து கொண்டு வந்திருக்கேன்..சாப்பிடு..சக்தியின் வற்புறுத்தலில் காபி மட்டும் குடித்தான். உள்ளம் கொண்ட சோர்வு அவனை தூக்கதிற்கு அழைத்து சென்றிருந்தது அவனை எண்ணி வருந்தியவனாக மேலும் வற்புறுத்த விரும்பாமல் மொளனம் காத்தான்

ட்ரெயின் சென்னை ரெயில் நிலையத்தை அடைந்துகொண்டிருந்த்து..பிரவின் வா சென்னை வந்தாச்சு..அவனது படப்படப்பு இன்னும் அதிகமானது..ஏண்டா பாரதிக்கு எதாவது ஆகி இருக்குமா?? ஒண்ணும் இல்லை இப்போ தான் அவ அப்பாக்கு கால் பண்ணுனேன். அவர் இங்கே நம்மை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக கார் அனுப்பி இருக்கேனு சொன்னார்.

அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறினார்கள். ஒரு 20 நிமிடங்களில் G.K ஹாஸ்பிட்டல் முன்பு கார் ஒரு பெருமுச்சுவிட்டப்படி நின்றது. பாரதி இருக்கிறது நம்பர் 405 8வது மாடி நாம லிப்டில் போகலாம் சக்தி. ஓக்கே டா...லிப்டில் ஏறி 8வது மாடியை அடைந்து ரூம் நம்பர் 405 க்கு போனார்கள். அங்கே பாரதியின் அம்மா கண்கள்
கலங்கியப்படி நின்றுக் கொண்டிருந்தாள். என்னாச்சு அத்தை..பாரதி எங்கே??..வாப்பா...பிரவின் என்னை என்ன சொல்ல சொல்லுறிங்க ..இந்த பொண்ணு இப்படி ஒரு முடிவை எடுக்கும்னு யாரும் எதிர்ப்பார்க்கல....


( என்ன நண்பர்களே....அப்படி என்னத்தான் முடிவு எடுத்திருக்கும் அந்த பாரதி பொண்ணு??? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க....தெரியாதவர்களுக்கு விடைச்சொல்ல நாளை வருவாள் பாரதி....)
தொடரும்........

Wednesday, 23 December 2009

அக்னிக்குஞ்சு --பாகம் 2

அன்று மேகத்திற்கும் மனக்கவலை போலும் ப்ரவீனுடன் தானும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது . இன்றோடு இரண்டு நாள் ஆகிறதே ...ஏன் பாரதி ஒரு போன் கால் கூட பண்ணலையே... நான் பண்ணினாலும் போன் சுவிட்ச் ஆப் என்கிறதே ... ஒரு நாள் கூட இப்படி ஆனதில்லையே ...ஒரு வேளை என்னை நிஜமாவே விட்டு போய்விடுவாளோ ??
நான்தான் ஏதோ என்மீது கொண்ட வெறுப்பில் சொன்னேன் என்றால் நீயும் போய்விட்டாயே ...இல்லை நீ என்ன செய்வாய் நீயும் பெண்தானே ...எந்த பெண்ணுக்குத்தான் தான் தாயாகவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கும் . அதிலும் உனக்கு குழந்தைகள் என்றால் உயிராயிற்றே ... ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று இல்லாமல் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்வேன் என்று என்னிடம் அடிக்கடி சொல்வாயே

என்னால் ஒரு குழந்தைக்கூட தர இயலாது என்று டாக்டர் சொன்னது கேட்டு நான் உள்ளம் வெடித்து அழுதப்போது உன் கண்ணில் அரும்பிய ஏமாற்றத்தை உன் புன்னகையால் துடைத்து விட்டு உன்மடியில் எனை சாய்த்து சமாதனம் செய்தாயடி ... மீண்டும் தாய் அன்பை அன்று உன்னில் உணர்ந்தேனடி .. என்னை ஆறுதல் படுத்தி விட்டு நான் தூங்குகிறேன் என்று நினைத்து உன் தலையணையை கண்ணீரால் நனைத்ததும் நான் அறிவேன் .. என் நிலை அறிந்திருந்தும் உன்னை நான் ஏமாற்ற என் மனம் விரும்பவில்லை ...
ஒரு பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று வேறு மணம் புரிந்துகொள்ளும் ஆண்களை இந்த சமுதாயம் ஏற்று கொள்ளும் போது ஒரு ஆனால் குழந்தை பாக்கியம் தர இயலாது என்று அறிந்த பின் அந்த பெண் வேறு மணம் முடிப்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்..எவ்வாறு எண்ணியப்படியே சன்னல் வெளியே பார்வையை செலுத்தினான்
அங்கே ஒரு பெண் மழையில் நனைந்துக்கொண்டு குடையை தன் குழந்தைக்கு பிடித்தப்படி போய் கொண்டிருந்தாள்.. இந்த காட்சி அவனுக்கு மனதிற்கு இதமாக இருந்தது. அப்போது செல் போன் அழைக்கவே ..பாரதியாக தான் இருக்கும் என்று எண்ணி ஆசையுடன் பார்த்தான் .
அவளது போன் நம்பர் வந்ததும் இன்னும் மகிழ்ச்சியுடன் ஹேலொ...பாரதி என்றான். ஆனால் அவனுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. மறுப்பக்கம் பாரதியின் அப்பா நான் மாமா பேசுறேன்பா நம்ம பாரதிக்கு உடம்புக்கு கொஞ்சம் நீங்க உடனே கிளம்பி நம்ம GK Hospital க்கு வாங்க .என்னாச்சு மாமா பாரதிக்கு?? பயப்படுற மாதிரி ஒன்றும் பிரச்சனை இல்லப்பா நீங்க வாங்க .சரிங்க மாமா இப்பவே வாரென்.
மறுமுனையில் துண்டிக்கப்பட்ட்தும் என்னச்சு பாரதிக்கு எதாவது விபரீத முடிவு எடுத்திருப்பாளே...?? துடித்தான்
(தொடரும்)

Thursday, 17 December 2009

அக்னிக்குஞ்சு

காலை பொழுதின் சுறுசுறுப்பில் தொலைப்பேசியின் அழைப்பு ஒலிகளிலும்கணிணியின் தட்டச்சு ஒலிகளிலும் அலுவலகம் தனக்கே உரிய பரபரப்பில் நிரம்பி இருந்தது...அன்றய அலுவலக வேலையில் ஊறியவள் மனதில் திடீரென பிரவின் காலையில் தன்னிடம் சொல்லிய வார்த்தைகள் அலைமோதியது. பாரதி ... நல்ல யோச்சு பாரு....எனக்காக உன் வாழ்க்கையை கெடுத்துகாதே...இதுல எனக்கு வருத்தம் எதும் இல்லை நீ சந்தோஷமா இருக்கனும் அதுதான் உன்கிட்ட நான் வச்சிருக்கிற அன்பிற்க்கு அர்த்தம்னு இனிய அமில வார்த்தைகளை உதிர்த்து சென்ற பிரவினை எண்ணி கலங்கினாள்.....சில நொடிகளில் பட்டு விட்ட செடியில் துளிர்த்த இளம்தளிராய் எண்ணம் உதிக்க ஒரு முடிவுக்கு வந்தாள்..அன்றய வேலைகளை முடித்தவள் ரிப்பேர்ட்டுக்களை தன் மேனெஜரிடம்கொடுத்துவிட்டு அதனுடன் ஒரு காகிததையும் நீட்டினாள். என்ன பாரதி இது?? லீவு அப்பிளிக்கேசன் கொடுத்திருக்க..ஏதாவது பிரச்சனையா??வாட்ஸ் த பிராபளம் ???சிறு புன்னகை உதிர்த்தவள் ஸார் என் ஃபெமிலில ஒரு ப்ராபளம் ...கொஞ்சம் சிவியர்.. நான் கண்டிப்பா ஊருக்கு போய் ஆகனும்வில் யு ப்ளிஸ் அக்செப்ட் மை லீவ்.....ஓகே பட் ஒன்லி 15 டேய்ஸ் என்று கைஒப்பம் இட்டவரிடம் தேங்யூ ஸார் என்று துளிர்த்த கண்ணிரை மறைத்து கொண்டு இருக்கைக்கு விரைந்தாள்....வானம் கரிய உடை மாற்றி கொண்டிருந்தது ...அழைப்பொலியின் சத்தம் கேட்டு கதவை திறந்தவள் குழந்தை புன்முறுவல் உதிர்த்த பிரவினிடம் இருந்து லெப்டாபை வாங்கிகொண்டு என்ன இன்னைக்கும் டிராபிக் தானாஎன்று கிண்டலாக கேட்டு சிரித்த வாறு லெப்டாப்பை மேஜையில் வைத்தாள். அழகிய இள்ம் நீல உடைக்கு மாறி இருந்தான் பிரவீன்.சுவற்றில்மாட்டியிருந்த தொலைக்காட்சிப்பெட்டிக்கு உயிர்க்கொடுத்தவன் பாரதிக்கொடுத்த காபியை வாங்கினான்..என்ன பாரதி இன்னைக்கு ஆபிஸ்ல வேலை அதிகமா?? எப்பவும் போல தாங்க ..உங்களுக்கு எப்படி பிரவீன்?.இன்னைக்கு கொஞ்சம் அதிகம் தான்டா...காபியை உறிஞ்சி தொண்டைக்கு அனுப்பி விட்டு ..சரிமா...மறுபடி அதே பற்றி பேசுறென்னு நினைக்காதே..காலையில சொன்னதை பற்றி என்ன முடிவு எடுத்திருக்க ??? ஓ.அதுவா நான் கூட நல்லா யோசிச்சு பார்த்தேன்..எனக்கும் நிங்க சொல்லுறதுல நியாயம் தோனுது...சோ...நான் ஒரு நல்ல முடிவுக்கு வந்துடேன் ...என்ன முடிவுடா...உங்கள விட்டு உடனே பிரியனும்னா முடியாதுங்க...என் மனசு சரியில்ல பிரவீன்... நான் ஒரு இரண்டு மூனு நாளைக்கு என் வீட்டிற்கு போய்ட்டு வரட்டுமா... வந்தவுடன் இதுக்கு ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்... ஓகே டா.எதுப்பற்றியும் கவலைப்பாடாதே என்றான் நெஞ்சுக்குள் மரணித்தவாறு...... இரவில் தூங்காமல் ...புரண்டவன் அருகே தூங்கும் பாரதியைப் பார்த்தான்என்னை விட்டு போறியா பாரதி...கண்ணீர் துளிகள் நெஞ்சின் வலியை உணர்த்த அப்படியே துங்கினான்...அவள் எடுக்கவிருக்கும் உயிர் பதற வைக்கும் முடிவை அறியாமல்.....

( அது என்னவா இருக்கும் எதுக்கு முடிவு????தொடரும்.....)

Friday, 11 September 2009

ஸ்பரிசம்





சிறு குளிர் காற்றுடன் கலந்து வீசும்
வெளிர் மஞ்சள் நிற வெயில்.
பன்னீருடன் நறுமணபூக்கள் கொண்டு
அமைத்த மஞ்சம் இவை என்றும் எனக்கு
உணர்த்தவில்லை ஸ்பரிசத்தின் உணர்வை ....

ரோஜா மொட்டின் மென்மை நினைவுறும்
உன் சின்ன சிறு இதழ்கள் பதிய
நான் கொண்ட முதல் முத்தத்தின்
ஈரம் உணர்த்தியது ஸ்பரிசத்தின்
முதல் உணர்வை .... "
------------------------------------------------------------------------

http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=8,0,0,0" href="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=8,0,0,0" name=allowScriptAccess sweetim_wink.swf?ContentURL='http://cdn.content.sweetim.com/sim/cp/icons/00010954.swf&StageW=220&StageH=225&XScale=35&YScale=35&LPURL=http://www.sweetim.com/s.asp&LPVER=3&LPREF=14&StopFRM=20&Mode=2"' sim cdn.content.sweetim.com http: not-a-real-namespace value="sameDomain" >http://cdn.content.sweetim.com/sim/sweetim_wink.swf?ContentURL=http://cdn.content.sweetim.com/sim/cp/icons/00010954.swf&StageW=220&StageH=225&XScale=35&YScale=35&LPURL=http://www.sweetim.com/s.asp&LPVER=3&LPREF=14&StopFRM=20&Mode=2" />http://cdn.content.sweetim.com/sim/sweetim_wink.swf?ContentURL=http://cdn.content.sweetim.com/sim/cp/icons/00010954.swf&StageW=220&StageH=225&XScale=35&YScale=35&LPURL=http://www.sweetim.com/s.asp&LPVER=3&LPREF=14&StopFRM=20&Mode=2" loop="false" menu="false" quality="high" scale="exactfit" bgcolor="#ffffff" width="220" height="225" swLiveConnect=true id="wp" name="wp1" align="top" allowScriptAccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" >

Get yours at SweetIM.com

Monday, 7 September 2009

The Tag:1. A – Available/Single? single with mingle

2. B – Best friend? : Azeez

3. C – Cake or Pie?: cake

4. D – Drink of choice? : staberry Juice

5. E – Essential item you use every day? : calculator

6. F – Favorite color? : Black

7. G – Gummy Bears Or Worms?: ????????????

8. H – Hometown? - Nagercoil

9. J – January or February? Sorry i like both

10. K – Kids & their names? not yet

11. L – Life is incomplete without? – love

12. M – Marriage date?... Sorry I dont know your marriege date hehehehehehehe

13. N – Number of siblings? one younger sister and one elder brother

14. O – Oranges or Apples? Orange( now also iam eating orange )

15. P – Phobias/Fears? no noooooooooo
16. Q – Quote for today? : dont ignore anyone one who loves u

17. R – Reason to smile? Iam always smilings

18. S – Season? I love all seasons

19. T – Tag 4 People? Snehamudan shakthi, shakthi kumar,Iniya ,Viya

20. U – Unknown fact about me? ???

21. V – Vegetable you don't like? potato

22. W – Worst habit? angry

23. X – X-rays you've had? stomach

24. Y – Your favorite food? sambar saatham with variety of Veg kuttu

________________________________________________________________

Thanks for welcomeing me Bala

Thursday, 27 August 2009

நிழல் துறந்து நிஜம் நாடி.....

சுற்றிலும் சுகந்தம் நிறைந்த அறை
மனம் ஒத்தும் ஒப்பனைக்ககாவும்
வெளிவந்த சொந்தங்களின் கண்ணீர் துளிகள்
பேசதுடித்தும் முடியாமல் ஊமையாகிவிட்ட
வார்த்தைகளின் சுவடுகள் ..
வர்ணம் கலைந்த வானவில்லாய்
உருக்குலைந்து விட்ட என்னவளின்
வழிந்தொழுகும் உயிர் துளிகள்


இறுதியாய் அணிவிக்கப்பட்ட
புத்தம் புதிய வெண்ணிறாடை மட்டும்
உடைமையாய் கொண்டு இதோ ..
என் பயணம் புதிய உலகை நோக்கி
வழி நெடுகிலும் சுற்றார் உற்றாரும்
நண்பரும் பகைவரும் சூழ்ந்து வர
எழுத்அறிவித்து அறிவு புகட்டிய
பள்ளிகூடம்,நண்பர்களுடன் அரட்டை
அடித்த பசுமை நிறைந்த இடங்கள் ,
உயிர் அசைத்த என்னவளின் சிரிப்பலைகள்
நிறைந்த பேருந்துதடம் எல்லாம்
இன்று என்னை வழியனுப்பும் அமைதியாய்

இதோ வந்து விட்டது ஆண்டியும்
அரசனும் ஒன்று கலந்து விட்ட சமுத்துவபுறம் .
சுற்றிலும் இருள் சூழ தனிமையையே
சுவாசமாய் கொண்டு இருக்க
எனக்காய் எந்த ஒப்புதலும் இன்றி அளிக்கப்பட்ட
ஆறடி நிலம் ...மனதில் எதோ எதிர்பார்புடன்
அமைதியாய் என் நித்திரை ஆரம்பம் ....








Wednesday, 12 August 2009

என்னவளே வருவாயா?

கைகோர்த்து நீயும் நானும்
பள்ளி சென்ற போதும் ...
சிறு மண் வீடு கட்டி
கொட்டன்குச்சியில் வித விதமாக
சமைத்து விளையாடிட்ட போதும்

தேடி தேடி கவனமாய்
பட்டாம்பூச்சி பிடித்து மீண்டும்
பறக்க விட்டு ரசித்திட்ட போதும்
நீயும் நானும் நாம் என்று
இருந்தோமே என்னவளே....

புத்தம் புதிய தாவணி ,கஸ்துரி மஞ்சள் மணக்கும்
உன் முகம் நீ கொண்ட முதல் வெட்கம்
கன்னியென பதவி கொண்ட
அந்த நாளின் அனுபவங்கள் என்னிடம்
சொல்லி ரசித்திடஅந்த பொன்முகம்
இன்னும் அழிய வில்லையடி

கல்லூரி நாட்களில் வகுப்பில்
நீயும் நானும் படிப்பில் மட்டும் அல்லாது
நண்பர்களுடன் கேலி செய்து விளையாடி
களித்திட போதிலும் பிரிய வில்லையடி

ஊரார் கண் பட்டது போலும்
ஓசை இன்றி என்னிடம்
அறிவிப்பு ஒன்றும் இல்லாமல்
உன் உயிரை என்னுள் செலுத்தி
உடல் கொண்டு சென்றாயடி

காலமகள் கையில்
கலந்து கரைந்திட போதும்
நான் ராகம் இல்லா
வீணையாய் உன் நினைவு என்னும்
கம்பிகள் மட்டும் சுமந்து வாழ்கின்றேன்

நீ இன்றி .....
என் சந்தோசம் கூட வர்ணம் இல்லா
வான வில்லாய் சில துளிகள்
மட்டும் சுமக்கும் கரும் மேகமாய் தெரிகின்றது

என் உள்ளம் படித்த என்னவளே
உருகி வடிகின்ற மெழுகாய்
கொஞ்சம் கொஞ்சமாய் உருகும்
என் உயிரும் உன்னை காண்பது
எப்போது?
என் பெண்மை உணர்வுகள்
உன்னில் நான் பகிர்ந்து
கொள்ளவும் , கவலை கொண்ட
பொது சேயாய் மாறி உன் மடியில்
உறங்கிடவும் என்னவளே நீ
மீண்டும் வருவாயா???/



Tuesday, 28 July 2009

அர்த்தநாரியின் மனித வடிவங்கள்



அவனும் அவளுமாய் நிறைந்த உலகில்
அவனும் அவளும் ஒன்றாய் மாறிவிட்ட
அர்த்தநாரியின் மனித உருவங்கள்


கருணைகொண்டு அழைத்திடும் தாய் அன்பு

தொலைத்து தடுமாறும் மழலைகள் .

உணர்வுகள் மறுத்து உணர்ச்சிகளுக்கு
பலியாகும் பாவைகள் ..
இறைவன் படைப்பில் விளங்க முடியா
புதிரான புதிராய் மாறிவிட்ட

புதுமை மனிதர்கள் ..



சிறகுகள் தொலைத்து விட்டு

திசைகள் அற்ற உலகில் பாதை

தேடி பறந்திடும் வண்ண பறவைகள்

எந்த மொழி கொண்டும் கவி புனைந்து
நிரப்ப முடியா சோகம் சுமந்த

வெற்றிடங்கள்....

அன்பு மழை பொழிந்திட நாளும்
தவம் செய்யும் கரிசக் காடுகள்

மனிதம் மறந்த உருவங்களில்

மனிதம் தேடும் முயற்சியில் தன்னை

தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள் ...

(தொடரும் )





Sunday, 26 July 2009

HAPPY BIRTH DAY JAMAL ANNA





HAPPY BIRTHDAY JAMAL ANNA

MAY ALLAH GIVE U ALL HIS BLESSINGS

I WISH U A VERY HAPPY BIRTHDAY TO YOU ANNAAA...

I GIVE U A SPECIAL GIFT FOR U

YES THAT IS BLUE ROSE....

BLUE ROSE IS VERY RARE ...

BUT PRECIOUS ONE...

SO THAT I GIVE PRECIOUS FLOWER FOR MY BROTHER......
WISH YOU A HAPPYBIRTDAY TO U



Monday, 29 June 2009

சிரிக்கமட்டும்

இதுதாங்க தலைகீழ் தவம் என்கிறது ......எதுக்கு இந்த தவம்னு கேட்காதீங்க ..அது ரகசியம் ......

ஹீ ...ஹீ....ஹீ.... எனக்கு ஒரு முகம் இல்ல .....



அப்பா ....இங்கேதான் நிம்மதியா பேப்பர் படிக்க முடியுது ...

இது தான் புது ஹேர் ஸ்டைல் ...இது எப்படி இருக்கு ...ஹா //ஹா//ஹா//


வயிறு இல்ல இது ....வயிறு மாதிரி ஹா ஹா ஹா




அம்மா வரதுக்குள்ள முடிக்கும் ஹீ ஹீ ஹீ (கொஞ்சம் ரிலாக்ஸ் பா)
என்ன கொடுமை சாமி இது /???ஆனால் நான் நல்ல பையன்பா ...பாருங்க இந்த ஈ கூட தெரிஞ்சு வச்சிருக்கு நான் ஸ்வீட் பேபி என்கிறதை ...
azee நான் தனி ஆள் இல்ல என்னோட எட்டு முகத்தைத்தான் பார்த்திருக்க ஒன்பதாவது முகத்தை காட்டுவதுக்கு முன்னாடி நிப்பாட்டு ......








ஹைக்கூ ....


கர்ப்பிணி ..

பெண் உருவில்
பிரம்மன் ....


கசாப்புகடை

இங்கு.....
உயிர்கள் வளர
உயிர்கள் கொல்லப்பட்டும்


Friday, 26 June 2009

நித்திரை ....


தொட்டில் கொண்ட குழந்தை முதல்
கட்டில் தேய கிடப்பில் உள்ள முதியவர் வரை
இப்பொய் உலகம் துறந்து சிறிது நிம்மதி காணும்
அழகிய உலகம் .....நித்திரை ....

நெற்றி வேர்வை நிலம் நனைக்க உழைத்திடும்
பாட்டாளி மக்கள் முதல் ... கோடியில் நனையும்
பணம் கொண்டவனாயினும் வேற்றுமை இல்லா
அனுமதி அளித்திடும் ஒரே உலகம் ....நித்திரை


எனைமறந்து புது உலகத்தில் பயணம் ....
மீண்டும் மீண்டும் ஏனோ நாடுகின்றேன் ... ஏனென்றால்
நித்திரை ....
சொர்கத்தின் திறவுகோல் ...
நுழைவு கட்டணம் இல்லை
அனுமதி இலவசம் ...


"""நித்திரை கொண்டு வாழ்வரே வாழ்வர்
மற்றவர் குற்றம்புரிந்தவராவார் ....""
இது நம்ம நித்திரைஆனந்தா சுவாமிகளின் பொன்வாக்கு ....

( இதை படிச்சிட்டு கண்டிப்பா உங்க கண்ணையும் நித்திரை கொள்ளை கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் நித்திரையை தேடி ......இதோ என் பயணம் ...)


Monday, 22 June 2009

ஹைக்கூ ...

கைக்கும் வாய்க்கும்

இன்று ஊடல்

உண்ணா விரதம் ....

----------------------------------------------------------------------------

ஐந்தே ரூபாய் தான்....

லக்ஷிமி , திருப்தி ஏழுமலையான்

புகைப்படங்கள் ... வெறித்த பார்வையில்

பசிமயக்கத்தில் ஒட்டு துணியுடன்

ஏழை வியாபாரி ..

--------------------------------------------------------------------------

குழந்தை பாக்கியம் வேண்டி

தொட்டில் கட்டிய மரத்தின் அடிவார

குப்பைதொட்டியில் வீசி எறியப்பட்ட

இறந்த ஆண் குழந்தை ....

---------------------------------------------------------------------------------

Wednesday, 17 June 2009

போராளிகள் ..


விரும்பி மனதொன்று பட்டும்


சில நேரம் கடமைக்காகவும் ...


உறவு உருவாகிட உட்சம்


காணும் போராட்டம் நமக்குள்


அவ்வப்போது ........


முத்து விளைவிக்கும் முயற்சியில்


தொடர்ந்து தோல்வி அடைந்தும்


நானும் நீயும் தீவிரமாய் போராடும்


தீவிரவாதிகளாக ....


மூச்சடக்கி என்னுள் செலுத்திய


ஒவ்வொரு துளிகளும் உதிரமாய்


உருமாறி கரைந்து போகும் நேரம்


என் உயிரும் உருகி ஓடும் .....


ஒன்றாய் இருவரும் உருவாக்கிய


(குழந்தை ) கனவை என் அனுமதின்றி


கலைக்கும் கொடூர ஊடகமாக நான்.....



வாரிசு வேண்டி போக இன்னும்


எதாவது ஆலயம் உண்டா என


வரைபடம் தனில் கோலமிடும்


என் விரல்களும் விக்கித்து


ஏதும் இல்லை என்ற முடிவில்


பெருமுச்சு விடும் .



தண்ணீர் கனவுகள் சுமந்த படி


கண்ணீர் வடிக்கும் என் விழிகளும்


தீரா சுமை கொண்ட என் மனதும்


உடன்படிக்கை கொண்டு இந்த


உறவுகள் எல்லாம் தொலைத்து


மோட்சம் அடைய வேண்டி


ஆசை துறந்த துறவியாக மாறிட


சொல்லும் .மெதுவாக எண்ணங்கள்


அவ்வழியே சென்றுவிடும் .....



முடிவுடன் நான் வெளியேறும் வேளையில்


சுவற்றில் புன்னகையுடன் நோக்கும்


குழந்தையின் சித்திரம் கண்டு சுக்கை


போல் சிதைந்து ஓடும் என் சிந்தனைகளும்...


இன்னும் எத்தனை காலம் இந்த


உயிர் பிழியும் சோதனைகள் என்ற


வேதனையுடன்


இதோ மீண்டும் அடுத்த போராட்டத்திற்கு


ஆயுதமனவர்களாக .......




Sunday, 14 June 2009

amma
amma

Friday, 12 June 2009

எதிர்பார்ப்பு ...


பிரிதலால் கொண்ட தேடலின்ஒவ்வொரு

மணித்துளிகளும்எதிர்பர்ப்புகளாய்

என் இதய அறையில்ஒன்றின் மேல் ஒன்றாய் ...

எனையும் அறியாமல் படிந்தும்

அரித்து கொண்டிருக்கும் படிகங்கலாய் .....

தினமும் என் கனவுகளின்

நான் வளர்த்த உன்மீதான காதலின்

நரம்புகளை துளைத்து உயிர்

குடிக்கும் ஒட்டுண்ணிகளாக.......
மரணத்தின் சுகம் தரும் உன்னை நீங்கிய
ஒவ்வொரு நொடிகளும் .....


காத்திருத்தலில் முடிவாக உன்வருகை
பார்த்தவுடன் அன்னையை கண்ட
குழந்தையாய் உன்னில் பரவசமாய்
ஒட்டி உறவாடிட நிமித்தம் .


மனதில் படிந்திருந்த ஒவ்வொரு

எதிர்பார்ப்புகளும் ஒன்றை ஒன்று

முந்தி வெளி வர நினைத்து

தம்முள் போராடும் வேளையில் ...
நீயோ என்னை பார்த்தும் பாராமல்
சுவற்றில் ஒட்டி இருந்த
தொலைக்காட்சியில் மனம் தொலைக்க.....


அமைதி காத்திருந்த என் ஒவ்வொரு
எதிர்பார்ப்புகளும் தயக்கமின்றி
தற்கொலை தீவிரவாதிகளாக
உருமாறி வார்த்தை அனல்
அணுகுண்டுகளை சுமந்தவண்ணம்
உன் மீது மோதி வெடித்து சிதற ....


வலிதாங்காது வேதனையுடன் நீ
அமைதியுடன் என் மீது பார்வைதனை
செலுத்த .....
உன்மீதான என்னுடைய கோபத்தின்
தாக்கம் சில நொடிகள்தான் ...
வலிசுமந்த உன் சுவாசம் பட்டு
பேசாமல் கண்ணீருடன் வழியனுப்பும்
என் கோப அரக்கனையும் தான் ......
போராட்டத்தின் விளிம்பில் நம்முள்
மையான அமைதி நிலவ..
கண்ணீர் சுட்ட என் கன்னங்களில்
ஒத்தடம் கொடுக்கும் நிமித்தம்
உன் இதழ்கள் பட்டதும் ,,,
பீறிட்டு வரும் கண்ணீரில்
என் எதிர்பார்ப்புகளும் சூரியன்
தரிசனம் கொண்ட பனித்துளியாய்
கரைந்து மறைந்து போனது .....
மொழி இருந்தும் மொழி இன்றி பேச

தொடங்கும்உன் எதிர்பார்புகளுடன் என் மனமும்..
இதோ என் கோபத்தின் கல்லறையில்
சிறு மொட்டின் பூக்கும் போராட்டம்.......

Tuesday, 9 June 2009

ஹைக்கூ ....

காதலியின் திருமணம்
காதல் தோல்வியால் உயிர் நீத்தன
பட்டு புழுக்கள்
திருமண பட்டாக மறுபிறவி ...

Monday, 8 June 2009

மனிதாபிமானம் கிலோ எத்தனை ரூபாய்????

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது
அறிந்தோ அறியாமலோ அன்னையும் ஈன்றதால்
மனிதனாக பிறந்து விட்டோம் மண்ணில் ....
மலைஜாதி மக்கள் என பெயரும் பெற்று கொண்டோம் .

பாசியையும் ஊசியையும் விற்கும் எங்கள்
குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் புழுவை
போல் பாவிக்கும் உயர்ந்த மனிதர்கள்
இவர்கள் இகழ்ச்சியால் சிதைந்தது
எங்கள் பிஞ்சுகளின் நெஞ்சங்களும் ....

இயற்கை அன்னை மடியில் ஒன்றி வாழும்
எம்மை அடிக்கடி உரசி பாக்கும் சில
நாகரிக கோட்டான்கள் ...உயிர் பறிக்கும்
முயற்சியில் அயரமால் உழைக்கும்
உத்தம புத்திரர்கள் ..

மலையில் பிறந்ததால் மக்கள் இல்லை
மாக்கள் என நினைத்து சூறையாடும்
செல்வசீமான்கள் ... மாக்களுக்கும்
இதயம் இருக்கின்றதே பசிக்காமல்
புசிக்க எண்ணாதே ...ஆறறிவு படைத்த
மனிதனே இன்னும் எத்தனை உயிர்
குடித்தால் உன் பசி அடங்கும் ???

எங்கள் குடில்கள் எரித்து எங்கள் வாழ்கையை
கொன்று சமாதியாகி எங்கள் கனவு கல்லறையின்
மேலே உங்கள் தொழிற் சாலை கட்டிட அஸ்திவாரம் மிடும்
மனிதன் எனப்படும் கண்ணில் தோன்றும் அசுரர்களே

கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதை
தவறாக நெஞ்சில் கொண்டு எங்கள் மக்களை
கொன்று நட்சத்திர விடுதியில் ஓய்யாரமாய்
விருந்து உண்ணும் மாமிச பிண்டங்களே

நாங்களும் மனிதர்கள் தான் . இன்னும் எத்தனை
நாட்கள்தான் இந்த குருதி குடிக்கும் கொடுர தாகம் ???
உங்களுக்கான எனது ஒரே கேள்வி
மனிதாபிமானம்
எங்கு கிடைக்கும் கிலோ எத்தனை ரூபாய் ???

( நேற்று செய்திகள் பார்த்த போது கொட்டங்கி என்னும் கிராம மலைவாழ்
மக்கள் குடில்கள் தொழிற்சாலை அமைப்தற்காக எரிக்க பட்டது )









Tuesday, 2 June 2009

நானே நான் தான்

உங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா ?
என் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..
பெயரில் என்ன இருக்கிறது ???/
*கடைசியாக அழுதது ?
இன்று சமைக்கும் போது வெங்காயம் uritha நேரம் ..
* உங்க கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா ?
ஆமாம் என் கையெழுத்து நன்றாக இருக்கும் ( நான் இப்படித்தான் என்னில் சொல்லி கொள்வேன்) ஹா ஹா ஹா
*பிடித்த மத்திய உணவு ?
சாம்பார் சாதம் .மோர் சாதம் .( மீன் வறுவல்)
நீங்க வேறு யாருடனாவது உடனே உங்க நட்பை வச்சுக்குவீங்களா ?


யாராக இருந்தாலும் நட்புடனே எனது உரையாடல் தொடங்கும் . பகைவர் என்றாலும் நட்புகொண்டாடி அவர் நட்பை வாங்கிட ஏங்கும் ஒரு ஜீவன் நான் .

கடலில் குளிக்க பிடிக்குமா இல்லை அருவியில் குளிக்க பிடிக்குமா ?
எனக்கு அருவியில் குளிக்க பிடிக்கும் .அதை விட ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும் . ( அதன் சுகமே தனிப்பா)


*முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள் ?
கண்கள் தான் ( கண்கள் மனதின் நிலையை காட்டும் மாய கண்ணாடி ஆச்சே? )

*உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடிச்ச ,பிடிக்காத விஷயம் ?

நாட்டமை ........ கேள்வியை மாற்றி கேளு ( ஹா ஹா ஹா )
இந்த விசயத்துல என்னோட பதில் பாலா பதில்தான் .( பாதி பாதியாக பங்கு போட வேண்டாமே )..

*முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள் ?
கண்கள் தான் ( கண்கள் மனதின் நிலையை காட்டும் மாய கண்ணாடி ஆச்சே? )

*உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடிச்ச ,பிடிக்காத விஷயம் ?
நாட்டமை ........ கேள்வியை மாற்றி கேளு ( ஹா ஹா ஹா )
இந்த விசயத்துல என்னோட பதில் பாலா பதில்தான் .( பாதி பாதியாக பங்கு போட வேண்டாமே )..
*யார் பக்கத்துல இல்லாம இருக்கறதுக்கு வருந்து ரீங்க ?
அம்மா பக்கத்தில் இல்லைன்னு ரொம்ப ஏங்கியது உண்டு .
அப்புறம் நட்பினில் என்னை மகிழ வைத்து பின் ஆழ துயரில் என்னை ஆழ்த்தி புன்னகையுடன் சுவற்றில் புகைப்படமாக மாறிவிட்ட என் தோழி
* இதை எழுதும் போது என்ன ஆடை அணிந்திருக்கிறீர்கள் ?
பிங்க் கலர் டாப்ஸ் , கிரீம் கலர் ஜீன்ஸ் .

* என்ன பார்த்து /கேட்டு கொண்டிருக்கிறீர்கள் ?
யமுனை ஆற்றிலே ..ஈர காற்றிலே.....
( மனதை வருடும் பாட்டுல )
*வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன நிறமாக மாற ஆசை ?
வானவில்லின் நிறம்

பிடித்தமணம்?
மழை வந்தவுடன் வீசும் மண்வாசனை
*நீங்கள் அழைக்கும் பதிவரின் பெயர் அவரிடம் பிடித்த விஷயம் ,அழைக்க காரணம் ?
நான் அழைக்க விரும்பும் பதிவர் சக்தி குமார் .அவர்கிட்ட பிடிச்சது அவரோட கோபம் . அவரோட கவிதைகள் ரொம்ப சிறப்பானதாக இருக்கும் . சமீபத்துல இன்னும் சில நாட்கள் என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு ?
எனக்கு பாலாவோட எல்லா கவிதையும் பிடிக்கும் குறிப்பா'''உயிர் குடித்தல் ''
''கடைக்குறள்(ல்) '' இந்த இரண்டு கவிதையும் என்னை மறக்க செய்த மந்திர பெட்டகங்கள் .
*பிடித்த விளையாட்டு ?
பாண்டி ஆட்டம்.கபடி
இப்பவும் விளையாட நான் ரெடி நீங்க ??? ஹா ஹா ஹா
எப்படிப்பட்ட திரைப்படங்கள் பிடிக்கும் ?
சூர்யவம்சம் ,மனதில் உறுதி வேண்டும் , புவனா ஒரு கேள்விகுறி
முகவரி . பாலசந்தர் படம் எல்லாமே பிடிக்கும்
கடைசியாக பார்த்த திரைப்படம் ?
தாய் மேல் ஆணை .(ஜெயா டிவி ல பார்த்தேன் )
*பிடித்த பருவகாலம் ?
இலை உதிரும் காலம் பூக்கள் கொண்டாடும் வசந்த காலம்
நிழலின் அருமை காட்டும் கோடைகாலம்
பிறவிகொண்ட பலன் உணர நான் நனையும் மழைகாலம்
எல்லாமே எனக்கும் பிடிக்கும் .
*உங்க டெஸ்க்டாப்பில் உள்ள படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள் ?
தினமும் ..
*பிடித்த/ பிடிக்காத சப்தம் ?
குழந்தையின் முனங்கல் .
குயில் கூவும் சத்தம் , காக்காவின் அழைப்பு முதல் குழாயடி சண்டை வரை
எல்லாமே நான் ரசித்ததுண்டு
பிடிகாதது ஆம்புலன்ஸ் சத்தம் தான்
*வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
துபாய் ..
உங்களுக்குள் ஏதாவது தனித்திறமை ?
ஹா ஹா ஹா இருக்கு ..ஆனா நானே சொன்ன நல்லா இருக்காதே
( கண்டுபிடி கண்ணா கண்டுபிடி ..)
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் ?
உண்மைக்கு மாறான அனைத்தும்
உங்களுக்குள் இருக்கும் ஒரு சாத்தான் ?
கோபம் தான் .

இந்த பதிவை தொடர என் நண்பர் சக்திகுமாரை அன்புடன் அழைக்கிறேன்

.மேலும் என்னை அழைத்தமைக்கு என் நண்பர் பாலாவுக்கு நன்றி ...

Monday, 4 May 2009

மீண்டும் அவன் ....

உயிர் துடிக்கும் ஓசை கேட்கும்
நிசப்தமான நேரம் மீண்டும் அவன் ..
உத்திரவாதமில்லா உறவில் கலந்திட
சிலநிமிடங்கள் என்னுயிர் பருகி
என்னில் களவாடும் நோக்கில் இதோ
அவனது லீலைகள் ஆரம்பம் ....

தொடக்கத்தில் தொட்டில் பிள்ளையாய்
எனை பாவித்து சுற்றம் பார்த்து
மெதுவாய் எனை தீண்ட தொடங்கினான் ..
என் மொளனம்அவனை தூண்டி விட
வேகம் அதிகரித்தான்
மீண்டும் சுற்றம் பார்த்து என்
உடைகள் மெதுவாக களைந்து என்னில்

புன்னகை பாச்சி நாக்கில் நீர்வடிய
எச்சில் முழுங்கி என் வளைவுகளில்
கவனமுடன் ஒருகை பதித்தவாறே
மறுகையால் என் கனிதனை தன்
கைக்குள் முற்றுகை இட்டான்
எனை வென்றுவிட்ட திருப்தியில்
படிப்படியாய் அவனது என்னில் அவனது விலகல்
இதோ எனில் அவனை மீட்டு
புறப்பட ஆயுத்தம்.....
எனை வென்றுவிட்ட திருப்தியில்
என்னில் களவாடிய நிறைவில்
கையில் மாங்கனி யை ருசித்தவாறே
செல்லும் அந்த சிறுவனை மீண்டும்
எதிர்பர்தவண்ணம் தாய்மை வழிய
அசைந்தும் அசையாமல் நின்றேன் ...

((((தாய்மை பெண்மைக்குஆண்மைக்கும் மட்டும் அல்ல என்னை போன்ற மரத்திற்கும் உண்டு ..ஹா ஹா ஹா ...இது எப்படி இருக்கு ???)))))

Sunday, 3 May 2009

வல்லமை தாராயோ ....


சுற்றி அடிக்கும் புயல் காற்றில் அகப்பட்ட

சின்னஞ்சிறு பூங்கொடியாய் என் மனம் ..

உருவம் இல்லாத ஒன்று அடிக்கடி

ஓசை இல்லாமல் நடத்தும் யுத்தத்தை

.உறங்கும் கணத்திலும் என் அமைதியை

உருகொலைக்கும் தீவிரவாதியை

ஓய்த்திட நினைத்தும் முடியாமல்

தோற்று போயின என் முயற்சி கணைகள்

நான் கொண்ட நற்சிந்தனைகள் எங்கே??

சிரித்து சிரித்து சிறகடித்த என் வானம் எங்கே ??

அன்பினால் ஆட்சி புரிந்த என் அரசாங்கம் எங்கே??

நட்பினால் நான் சிறைகொண்ட என் உயிர் நண்பர்கள் எங்கே??

உள்ளதோடு உறவாடிய அந்த நாட்களும்

உயிர் அற்று போய்விட்டனவா?...

கள்ளம்கபடம் இல்லா என் மனதை -எங்கே ?

நீ என்னில் புகுந்தமையால் அறிவிப்பின்றி

கருக்கொண்ட மேகம் உதிர்த்த

கண்ணீர் துளியாய் சிதறிப்போனதுவா ???

உயிருடன் என்னை கொஞ்சம் கொஞ்சமாய்

அரிக்கும் மாயை என்னும் பேயை ஒழித்திட

வல்லமை தாராயோ

Tuesday, 28 April 2009

தேர்தல் நையாண்டி


தேர்தல் என்றால் என்ன ?? pathu வரிகளுக்கு மிகாமல் பதில் அளி???

தேர்தல் ஐந்து ஆண்டுக்கொருமுறை
நடைபெறும் குலுக்கல் சீட்டு - இங்கே
வெற்றி பெற்றவர்கள் சூறை ஆட
அனுமதிக்க படுவர்

தேர்தல்-(பதவி ) ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஓடும் மெகா சீரியல் ...இதை போட்ட
மக்களும் கண்ணீர் வடிய வடிய
பார்பார்கள் ஆவலுடன் நல்முடிவை தேடியே

தேர்தல் என்பது பகல் கனவு .... காணும்
நம் கண்களுக்கு நல்லது நடக்கும் என்று
பொய்யாய் தோன்றும் கானல் நீர்

Saturday, 25 April 2009

மோகத்தீ ...




அந்த மழை நாளில் நம் பார்வைகள் உரசி
மனதில் பற்றிய தீ பொறியானது எனது

உணர்வுகளை தோற்கடித்து உணர்ச்சிக்கு

புதிதாய் அடைகலம் கொடுத்ததும் ஏனடா???


என்னில் நீ மூட்டும் மோகதீ தாளாமல் உருகும்

என் இளமையும் சொல்லாமல் மெதுவாக

வேர்வையாக மாறி கொஞ்ச கொஞ்சமாக மாய்கின்றதே ...


உன் மீதான தேடலின் காரணம் உன் காதல் சுமந்த

கடிதம் எடுத்து நெஞ்சோடு வாரி கட்டிக்கொண்டேன்

உன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு

கடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு

காய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா ...


என் மனதிற்கும் உடலிற்கும் உண்டான ஒப்பந்தம்

உன்னால் ஓய்ந்து எல்லை தாண்ட பார்கின்றது

புல்வெளியில் பனித்துளி சேர்த்து கடலாகும் முயற்சி
உன்னில் என் தவிப்பை வித்திட நினைப்பது ....





Wednesday, 22 April 2009

நினைவு ....


தளர்த்தி விட்ட கூந்தலில் அவனது நெடி ...
கண்கள் மூடி முகர்கின்றேன்..என்னுள் நிரப்பும் முயற்சியில் ..
குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்
என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்
மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்
வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்
உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்
வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்
கண்ணீர் துளிகளாய் ...
உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய
கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்
படிந்த கண்ணீரின் கறைகள்...

Tuesday, 21 April 2009

காத்திருகின்றேன்..

காத்திருகின்றேன் ..... உன்
உதாரிசமான பார்வையும் ..உன்
சுடு மொழியையும் உட்கரிக்க
மழைதுளி வாங்கிகொள்ளும்
பூமி போல....


கடிதேறியப்பட்ட என் விரல் நகங்களும்
என் விழி பாச்சிய கடிகார முட்களும்
முறுக்கப்பட்ட என் சுடிதாரின் துப்பட்டாவும்
மறைக்காது முறையிடும் என் மனதவிப்பை ...


உன்னில் நான் செலுத்திய புன்னகைகளை
உன் கோபத்தீயில் போசிக்கிட்ட போதும்
மீண்டும் மீண்டும் உன் கண்கள் நோக்கியே
என்னை தள்ளி விட்டு வெட்கமின்றி
பயணிக்கும்

உன் வருகை எண்ணி எண்ணி என்

இதயமும்துடிக்கும் நிமிடங்களை

கடன் வாங்கியபடியே ....

ஹைக்கூ ...

கிடாய் நேர்ச்சை

வாரிசு பிறந்தது...

வாயில்லா ஜீவன் உயிர் நீத்தது....

(அய்யனார் கோயிலில் நேந்துகிட்ட படி பழி கொடுக்கப்பட்டது )

Monday, 20 April 2009

புலம்பல்

என் நெருங்கிய நண்பர் ஒருத்தர் தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு அழகான
கவிதை போட்டிருந்தார் .அது இதுதான் ....
"இரவு தொலைக்காட்சி செய்தி
இலங்கைப்போர் பொது மக்கள் பலி
" உச்"ரிமோட் உயிர்த்தெழ
"மானாட மயிலாட "இன்னொரு சேனலில்
"
படித்ததும் மனதிற்கு வேதனையாக இருந்தது ..இன்று நம்மில் பலரது நிலைமையும் அதுதானே ?? யாருக்கோ வேதனை என்றால் நமக்கு அது ஒன்றும் பெரிதாக தோன்றுவதில்லையே ??.. வீணான பொழுது போக்கு விஷயங்களில்திருப்பதி கொள்ளும் நாம் ஏன் நம்முள் ஒருவன் மரண வலி அனுபவிக்கும் போது நமக்கு அது சாதாரண நிகழ்ச்சியாகி விடுவதுமேன் ?? நம்முள் மனிதாபிமானம் எங்கே போனது ?..ரோஜாவை பார்க்க பழகி விட்ட நம் கண்களில் முட்கள் தெரியாமல் போய்விட்டதே

இலங்கையில் தினம் தினம் நுற்றுக் கணக்கில் மனிதாபிமானம் இன்றி உயிர் பூக்கள் கரிக்க படுகின்றதே .அவர்கள் செய்த பாவம் தான் என்ன? கொடுர விலங்குகள் கூட பசி எடுத்தால் தான் இன்னொரு விலங்கை வேட்டை ஆடும் .ஆறறிவு கொண்ட விலங்கை விட கேவலமாகி விட்டதே நம் நிலைமை .. " அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது " ஐயோ... எங்களுக்கு என் இந்த மனித பிறவி கொடுத்தாய் இறைவா.. என்பதுதான்இலங்கையில் ....இன்றைய ஒவ்வொரு மனிதனின் புலம்பல் ...புலம்பல்கள் தொடர்கதையாய் இருந்தாலும் எங்கள் காதுகளில் கூத்தாடிகளின் ஒலகுரல் ஒலிக்கும் போது அவர்களின் அவலக்குரல் கேட்பதில்லை கேட்டாலும் அதை நாம் விரும்பவும் இல்லை . என்னாயிற்று ...நாம் மனிதர்கள் என்பது மறந்து மரித்து போனது ஏன்? ..

இளைய சமுதாயமே ..இனியாவது ஏழுவோம்.. பண்பற்று போய்கொண்டிருக்கும்
கேளிக்கைகளில் மதிமயங்கி விடாமல் .. நம்மில் ஒருவன் படும் வேதனை துடைக்க போக்க முயற்சி செய்வோம் ...

Sunday, 19 April 2009

தேர்தல் நாள்

ஓட்டு .....
பகுத்தறிவு இருந்தும் கூட"நாங்கள் ஏமாளிகள் என்று
ஒப்புகொள்வதற்கான அனுமதி சீட்டுதான் எங்கள் ஓட்டு
ஓட்டு போடும் அத்தருணமே விரலில் பூசும் கரியமை
எங்கள் நம்பிக்கை முகத்தில்பூசிய கரியமை என்று நீங்கள்
என்னவோ மறைமுகமாக உணர்த்திட போதிலும்
கள்ளையும் பாலாக எண்ணப் பழகிக்கொண்டோம்
தேர்தல் நாள்
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அரங்கேற்றப்படும்
அழகிய அற்புதமான நாடகத்தின் முதல் நாள்
அரிதாரம் பூசியப்படியே உங்கள் பிரச்சாரம் தொடங்கும்
ஒப்பனைகள் கலைந்துவிடாது ஓய்யாரமாக உங்கள்
வாக்குகளை எங்கள் காதுகளில் தேனிசையாக பாச்சுவீர்கள்


எங்கள் அறிவு கண்களில் உங்கள் ஆசை மொழிகள் கொண்டு
தூவி ..மயக்கம் முறை செய்வீர்கள் ..பின்பு
அழகாக நடைபெறும் உங்கள் மகுடம் சூட்டும் விழா

மதி இருந்தும் இலவசங்களுக்காக மதி மயங்கும்
நாங்கள் இருக்கும் வரை உங்கள் நாடகம்
இன்னும் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் ....
------------------------------------------------------------------------
அம்மாவா? அப்பாவா? இல்லை நீயா? நீங்களே முடிவு செய்யுங்கள்
அரிதாரம் பூசும் நாடக நவரசமணிகள் தான் இன்றையா வேட்பாளர்கள் ..இவர்களது நாடகம் அன்றாட வாழ்கையிலும் தொடர்ந்து வரும் அவல நிலை ?? நான் தெரியாமல் கேட்கின்றேன் ஏன் நம்மில் ஒருவன் முதல்வராக வந்தால் இந்த நாடு அழிந்து விடுமா ??நாம் எல்லோரும் குடிமக்கள் தானே அவர்களுக்கு இருக்கும் உரிமை நமக்கும் இருக்கின்றதே ..எப்போதும் அம்மாவும் அப்பாவும் தான் மாறி மாறி வர வேண்டுமா? இனியாவது யோசித்து பார்க்கலாம் .நெஞ்சில் நேர்மை ..கண்ணில் கருணை கொண்ட ஒரு வாலிபன் கூடவா இல்லை நம்மில் ???புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதி வாக்கின் படி பழமைகள் களைந்து புதிய எண்ணத்திற்கு ஒரு புது வசந்த காலத்திற்கு போக முயல்வோம் ...முடிவு உங்கள் கையில் நண்பர்களே ....
குறிப்பு : என்னிடம் என் நெருங்கிய நண்பர் சொன்னார் தேர்தல் பற்றி எதாவது பதிவு போடுன்னு ...எனக்கு அரசியல் தெரியாதுங்க ..எதோ உளறி விட்டேன் ...

தவறு இருந்தால் மன்னிக்கவும் ..

Saturday, 18 April 2009

தாலி வேலியா?? வேதனையா?

மாலை சூடும் மணநாள் இளம் மங்கையர் நாளில் திருநாள் ...இந்த பாட்டை எப்போதோ கேட்ட நினைவு .. எத்தனை பெண்களின் வாழ்க்கை திருநாள் ஆகி இருக்கின்றது ?..நான் கண்டவரை மணநாள் மரண நாளாக தான் ஆகி உள்ளது .
பெண் பார்க்கும் படலம் முதலே தொடங்கி விடுகின்றது ..இவர்களின் ஆணவ அதிகாரம் .ஏன் என்றால் அவர்கள் மாப்பிளை வீட்டராம் .ஆண் பிள்ளை யை மட்டும் எந்த தாயாவது பதினோரு மதம் சுமந்து இருக்கின்றாளா ??.. இதில் வேதனை க்குரிய விஷயம் என்னவென்றால் பெண்வீட்டரும் எதோ பாவிகள் போல அவர்கள் முன் பல் இளித்து நிற்பதன் காரணம் எனக்கு இன்னும் புரியவில்லை . கூட்டத்தில் ஒருத்தர் ஆரம்பிபார் பொண்ணை வர சொல்லுங்க பார்க்கலாம்னு ஏதோ மாட்டு சந்தையில் மாட்டை பார்க்க வந்தவர் போல ..அப்புறம் பெண்ணிடம் தனியா பேசனும் ..இது மாப்பிளையின் வேண்டுகோள் .அப்புறம் பொண்ணுக்கு
சமைக்க தெரியுமா?? ஏம்மா கொஞ்சம் நடந்து காட்டு இது போன்ற பொதுவான ஆனால் கட்டாயமான கேள்விகள் கேட்கப்படும். அதன் பிறகு மாட்டுக்கு மன்னிக்கவும் பெண்ணிற்கு தொகை பேசி முடிக்கப்படும் .இங்கே மட்டும் பொருளை ஏற்று கொள்பவர்க்கு பணம் கொடுக்கப்படும்.
திருமண நாள் .......
இது பெண்ணிற்கு அதிகார பூர்வமாக விலங்கிடும் நாள். தாலியும் அணிந்திடுவேன் உன்னை தாரமாக ஏற்று கொள்ளுவேனு தாலி கட்டிடுவாங்க ..அது பெண்ணிற்கு பூட்டப்படும் பாதுகாப்பு வேலியா இல்லை ..அது நாசுக்காக கட்டப்படும் மூக்கணாங்கயிரு. அதன் பிடி எப்போதும் அவன் கையில் ..நான் உங்களை கேட்கின்றேன் இந்த தாலி அவசியம் தானா?. பெண்களுக்கு திருமணம் ஆனதின் அடையாளம் தானே அப்படி என்றால் திருமணமான ஆணின் அடையாளம் என்ன ? அவர்களும் தாலி அணிவதுதனே நியாயம் . ஆனால் பெண்ணிற்கு திருமணமாகி விட்டது என்று அடையாளம் இடும் நீங்கள் உங்களை மட்டும் அதிலேருந்து மறைத்து கொள்வதேன்
சொல்லுங்கள் ஆண்வர்க்கமே ??. ஒரு உலோகத்துக்கு கொடுக்கும் மதிப்பு இன்று மனித மனங்களுக்கு எங்கே இருக்கின்றது .
மணவாழ்வில் காலடி வைக்கும் அந்த கணமே மெட்டி என்று ஒரு சிறிய விலங்கு பூட்டுகிறான் . அடி பேதை பெண்ணே ..நாணமுடன் அதையும் சுமந்து கொள்கின்றாயே ..திருமண நாளில் பெண்ணிடம் ஒப்பந்தம் வாங்குவது எதற்கு ?
இன்று முதல் பெண்ணாகிய நான் உன் அடிமை என்று திருமண ஒப்பந்தம் என்ற பேரில் அடிமை சாசனம் எழுதி வாங்கி விடுகின்றனர் .
வரதட்சணை......இதில் மட்டும் சரியாக இருப்பார்கள் பணம் வசூல் செய்பவர்கள் . இஸ்லாமிய சமுகத்தில் ஒரு சட்டம் இருக்கின்றது அதாவது திருமணம் முடிக்க விரும்பும் ஆண் மணபெண்ணிற்கு மஹர் என்று சொல்லக்கூடிய ஒரு தொகை அது பணமாகவோ தங்கமாகவோ இருக்கலாம் அதை கொடுத்து அப்பெண்ணை
மணம் முடிக்கும் சட்டம் இருக்கின்றது .மேலும் இஸ்லாம் வரதட்சணை வாங்குவதை கடுமையாக தண்டிக்கிறது .ஆனால் எத்தனை பேர் அப்படிஇருக்கிறார்கள் ??? வரதட்சணை வேண்டாம் என்று சில பேர் வருவது உண்டு . அட இப்படி கூட மனிதர்கள் உண்டா என்று என்ன தோன்றும் ஆனால் உண்மை என்ன வென்றால் இவர்கள் இப்படி வரதட்சணை வேண்டாம் என்று மொழிவது வசதியான குடும்பத்தில் தான் . வரதட்சணை பேசி ..நேரடியாக
பிச்சை வாங்குவரும் உண்டு இப்படி வேண்டாம் என்று மறை முக பிச்சை வாங்குவரும் இருக்கிறார்கள் . எதற்கு இந்த வேதனை ?? திருமண வாழ்க்கை
மரண வாழ்கையாக மாறியதும் ஏன்? மாந்தர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுதுவோம என்ற பாரதி காலம் முதல் இன்று வரை எங்கள் அடிமை சாசனம் தொடர்கதையாகா...
நீங்கள் சொல்லலாம் பெண்கள் இன்று எட்டாத வெற்றி இல்லை என்று ..அப்படி
வெற்றி பெற்றவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கின்றதா? எத்தனை வேலைக்கு போதும் பெண்கள் எல்லா சுமைகளையும் சுமந்த படி மனதிற்குள் வெந்தபடி வாழ்கின்றனர் .சுமைகள் என்றும் பெண்களுகே ....இதில் இளைப்பாற நிழல் தேடி குடும்பத்திற்குள் வந்தால் அய்யா பெரியோர்களே கொஞ்சம் எங்களை முச்சு விட விடுங்கள் ..உங்கள் பழமை பேசி எங்களை உயிருடன்
சமாதி ஆக்குவதை இனிமேலாவது நிறுத்துங்கள் வாழ விரும்புகின்றோம
எங்களை வாழ அனுமதியுங்கள் இன்னும் வசை பாடி வஞ்சனை செய்வதை நிறுத்துங்கள் ........( புலம்பல் தொடரும் ...)
குறிப்பு : (நான் இந்த பதிவில் எல்லா ஆண்களையும் குற்றம் சாற்ற வில்லை ..ஒரு சில ஆண்கள் நல்லவர்களே .....)

Thursday, 16 April 2009

நாங்கள் ஏழைகள்

சுவரொட்டியில் ஆப்பிள் படம்
ஏக்கத்தில் தடவி பாக்கிறன்
ஏழை சிறுவன் ......

பெருமாளுக்கு பால் அபிசேகம் ...
பட்டினியில் அழுவதற்கும் சக்தி இன்றி
பரிதவிக்கும் குழந்தையின் அவல குரல் ....

பிரபல நடிகையின் பிறந்த நாளாம்
கிழிந்த கோவனமுடன்
தங்க சரிகையில் பட்டு நெய்து கொண்டிருந்தான்
எங்கள் நெசவாளி

இன்று மீனாக்ஷி அம்மன் திரு கல்யாணமாம்
மனதிற்குள் வெம்பி அனல் தெறிக்கும்
பெருமுச்சு விட்டபடி முதிர் கன்னி

குலை தள்ளிய வாழை வெட்டி எறியப்பட்டது
இறுதி நாள் எதிர்பார்த்து கண்ணீருடன்
வாழும் சில பெற்றோரை சுமந்தபடி
முதியோர் இல்லம் ..

"அறியாமையை நீக்கி அறிவு கண் திறப்போம்"
"அனைவருக்கும் கல்வி"
சுவரொட்டி ஓட்டும் குழந்தை தொழிலாளி !!!

இன்று மழை வரக்கூடாது .....
மனதில் ஆயிரம் வேண்டுதலுடன் பீந்த
குடிசை வழியே வானம் நோக்கி
கும்பிட்டபடி ஏழை தாய் ..

பண்ணையார் வீட்டில் புனித நீராட்டு விழா
தெரு அடைத்து பந்தல் ..வீதி எங்கும்
வண்ண ஒளிமய விளக்குகள் ..
சிம்மணி ஒளிக்கும் வழி இன்றி என் வீடு

ஏழை எங்கள் வாழ்கையில் பஞ்சம்
பஞ்சமின்றி எம்மை விட்டு போக
நெஞ்சம் இன்றி கொஞ்சம்
வலியுடன் வாழ அனுமதிக்கும் ...

Wednesday, 15 April 2009

அமிலியா ....

என்ன நண்பர்களே ...அது என்னவா இருக்கும்.. நானே சொல்லுறேன் ..
அவுங்களோட பிறந்த நாளைக்கு அங்கே உள்ள ஒரு ஏழை வீட்டுக்கு போய் அங்கேருந்த குழந்தைக்கு இனிப்பு வழங்கியது மட்டும் இல்லாம அந்த குழந்தையோட படிப்பு செலவையும் ஏத்துகிடாங்க. இது தான் அவுங்க பண்ணிய நல்ல காரியம்

அமிலியா ....


என் நெருங்கிய தோழி அமிலியா.மலேசியால இருகாங்க
அன்பு என்ற சொல்லுக்கு உண்மையான வடிவமானவள். தேன்மொழி கொண்டு பேசும் அழகிய பாவை என்று தான் இது வரை எண்ணி கொண்டிருந்தேன் . சமீபத்துல அவளிடம் அரட்டை அடித்து கொண்டிருக்கும் சமயம் அவளது பிறந்த நாளை அவள் மறக்க முடியாத நாளாக மாற்றியது தெரிய வந்தது .
அவுங்க பண்ணியது நல்ல விஷயம் .. அப்படி என்ன பண்ணி இருப்பானு கேட்கிறேங்க தானே ?. அது என்னவா இருக்கும்னு நீங்க சொல்லுங்க . சஸ்பென்ஸ் தாங்க முடியலையா ..கொஞ்சம் காத்திருங்க என் அடுத்த பதிவு வரை ...(சும்மா கவிதை கதை எழுதினா எப்படி ??கொஞ்சம் புலன் விசாரணை பண்ணி பாருங்க ..) ஹீ... ஹீ ...ஹீ .













Monday, 13 April 2009

கோபம் ஏனடி...?


என்னில் முகம் நீக்கி நீ கோபப்படும் போதுலாம் என்
உயிர் உருகி கண்ணீராய் வழிந்து உதிரம் உறைகின்றது
உன்னில் நான் கொண்ட அன்புசாசனம் எடுத்து உரைத்த பின்
கருணைகாட்டும் அன்னை போல் அணைத்து கொள்கின்றாய்
சிறுபிள்ளை போல் என் மனம் சிதைத்து மணல் வீடு கட்டுகிறாய்
உன் கோப அலை அடித்து துகள் துகளாய் நான் சிதறியதும் அறியாமல்
உயிர் பரிமாறிய நம் காதல் வளர ஊடலும் நல் உரமாகும் என்கின்றாய்
காரணம் அறியாமல் பித்தனாய் நானும் அலைகின்றேன்
கடவுளை காண வேண்டிய பக்தனை போல....

Sunday, 12 April 2009

தாயாவது எப்போது



பூத்தும் காய்க்காத பூவை இவள் என்று

சுற்றவர்கள் வசை பேசுகின்ற நேரம்

கசையடி வாங்குகின்றது என் நெஞ்சம்

கலங்கி நானும் கண்ணீர் கொண்டு

கழுவுகின்றேன் என் மனக்காயங்களை ......


பூத்தும் காய்க்காமல் போனதால் என்

ஒவ்வொறு பூக்களையும் கேட்கின்றேன்
நீயாவது காய்பாயா என்று ...

விடிந்தும் விடியாமல் என் இரவுகள் போனதால் என்

ஒவ்வொறு இரவையும் கேட்கின்றேன்

நீயாவது விடிவாயா என்று ....

கொஞ்சி வளர்த்திட பிள்ளை இல்லை என்பதால்

பிஞ்சு மழாலைகளின் புகைப்படம் கண்டு

மனதிற்குள் கெஞ்சி கெஞ்சி கேட்கின்றேன்

என் அன்பு முத்தத்தை நீயாவது வாங்குவாயா என்று ....


உன்னை சுமந்திட தாகம் கொண்டதால்

தாழ்மையுடன் கேட்கின்றேன் நானும்

தண்ணீர் கொண்டு என் தாகம் நீக்கி

தாயாவது எப்போது.....

Saturday, 11 April 2009

சொல்லாமல் போன காதல்


சொற்கள் தேடி தேடி என் காதல்


சொல்லிட வந்த வேளையில் ஏதும்


சொல்லாமலே உன் ஒற்றை கண் புன்னகையால்


சொல்லாமல் செல்லாமல் செல்லரித்து விட்டதடா


செல்லரித்தும் உன்னிடம் சொல்லிட நினைத்து என் சொற்கள்


செல்வது என்னவோ உன் மனம் நுழைந்து


சொல்லாமல் மெதுவாக என் காதல் சொல்லி


செல்லிட செய்ய தான் .....





Wednesday, 8 April 2009

கார்மேகமே ....


கார்மேகமே ....உனக்கும் காதல் தோல்வியோ..?

கரிய துகில் அணிந்து நீயும் மனம்

கலங்கி அலைவதும் ஏனோ ??..உன்

காதலியை நினைத்து நெஞ்சம்

கசிந்துரிகி நீயும் மழையாகி விட்டாயே ...

கலக்கம் கொள்ளாதே..நிலவவள்

கண் ஈர்ப்பு விசையால் மீண்டும்

காற்றில் ஒன்றாகி வெண்மேகமாக மீண்டும்

காதல் பிறவிகொண்டு...உலவுவாய் ...

கலங்காதே ........

..

சில இரத்த துளிகள் ...

பிரியாவும் கார்த்திக்கும் நெருங்கிய காதலர்கள் ..காதல் வானில் சிறகடிக்கும் சின்ன கிளிகள் .. அவர்களது காதல் அவர்களது பெற்றோர்க்கு தெரிய வந்தது .. இரண்டு பேரு வீட்டிலும் எதிர்ப்பு ..அதனால் பிரியாவும் கார்த்திக்கும் வீட்டை விட்டு வெளியே போயிட்டாங்க.. அதனால் அவமானம் வந்திரும்னு கார்த்திக் வீட்டுல அவுங்க காதலுக்கு சம்மதம் தெரிவிச்சாங்க
இரண்டு வீட்டிலும் சம்மதிச்சு சேர்த்து வச்சாங்க ..
கல்யாணம் ஆனதும் தேன் நிலவு கொண்டாட ..ஊட்டிக்கு போனாங்க ..
அப்போதான் அந்த கொடுரம் நடந்தது ...
கார்த்திக் தன்னோட மனைவிக்கு இளநீர் வாங்க ரோடு கிராஸ் பண்ணிய போது
அவன் மீது லாரி மோதி துடித்து இறந்து விட்டான் .தன் கண் முன்னே நடந்த தன் ஆசை காதலனுக்கு கொடுமையை கண்டு பிரியா உறைந்து போனாள்

நாட்கள் ஓடியது ..பிரியா கார்த்திக் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தாள் . ஒரு நாள் அவளது அம்மாவின் கனவில் ஒரு பெண் வந்தாள் . உன் மகளின் புடைவையில் அவளது கணவன் இறந்த தருணம் அவனது இரத்தம் துளிகள் இருக்கின்றது .உடனே அதை கழுவி விடு என்றாள். அவளது அம்மா அதை பெரிதாக எண்ணவில்லை . அவளது அப்பாக்கும் அதே கனவு அவரும் பெரிதாக எண்ணாமல் இருந்து விட்டார் . அடுத்த நாள் ப்ரியாகும் அதே கனவு ..

ஆனால் ப்ரியாக்கு மனதில் பயமா இருந்தது அதனால அவ அந்த புடவை யை கழுவி போட்டாள் ..ஆனால் சில துளிகள் இருந்தது .. மறுநாளும் அதே கனவு .. ப்ரியா மீண்டும் கழுவி போட்டால் ஆனால் இரத்தம் போகவில்லை ..முன்றாவது முறையாக அதே பெண் வந்து சொன்னாள்.நீ முழுவதுமாக இரத்தம் போக கழுவ வில்லை ..மீண்டும் கழுவி போடு ..இது தான் நான் கடைசியா சொல்லுறேன் ..இனி நடப்பது நடக்கும் என்று சொன்னள்.ப்ரியா எவ்வளவு முயன்றும் அந்த இரத்தம் போகவில்லை .

ஒரு நாள் யாரும் இல்லா நேரம் கதவு தட்டும் ஓசை கேட்டது ..திறந்து பார்த்தள்.. ஏதிரே கனவில் வந்த அந்த பெண் இருந்தாள். அதிர்ச்சியில் நின்ற ப்ரியாவிடம் ஒரு பார்சல் கொடுத்தாள். ப்ரியா அதை திறந்து பார்த்தா உள்ளே வெள்ளை நிறமும் நீல நிறமும் கலந்த பவுடர் இருந்தது ... ஒன்னும் புரியாமல் ப்ரியா அந்த பெண்ணை பார்த்தாள்.அப்போது அந்த பெண் ....

நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா

நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா..

நிர்மாஆஆஆஆஅ

என்று பாட்டு பாடி இதை போட்டு கழுவு இரத்தம் காணாம போய்டும்னு சொல்லிட்டு போய்டுவா...

எப்படி நம்ம கதை ....சுட்ட கதை சுட சுட ...ந அருமை நண்பர் சாய்ரா பாலா வுக்கு

சமர்பனம் செய்றேன்

Tuesday, 7 April 2009

சக்தி

உயிரே .....சக்தி.......

உன்னை பார்த்தாலே வரும் பக்தி.....

உன் பின்னே என் மனமும் சுத்தி ....

உயர பறக்குதே வனையும் எத்தி...

உன் வார்த்தையால் வீசாதே கத்தி....

உன்னை மணந்தால் அடைவேன் முக்தி .

ஹைக்கூ ..

குளிர் மழையில் காதலி ...
என் மனதில் காட்டுத்தீ ...

குழந்தை பேறு இல்லாதவள்
நூறு மழலைகளுக்கு தாய்
(மழலை பள்ளி ஆசாரியை ...)

கைநாட்டு போடுபவன்
கையில் கணினி பற்றிய
விளக்க ஏடு ......
(பேருந்து சிறு புத்தக வியாபாரி ).

Monday, 6 April 2009

நீங்காத நினைவு ....



நிலவுக்கு துணையாக இவன்


நிலத்தில் துயிலாமல் .....உன்னால்


நீங்கா தனிமை துகில் உடுத்தி தவிகின்றேன்


நீண்ட இந்த இரவும் இரக்கம் இன்றி என்


நித்திரையை சுறாடி வென்றேன் உன்னை என


நிம்மதியாக எனை பார்த்து சிரித்தவண்ணம்


நின்று என் உள்ளத்திரையில் தோன்றும் உனது


நிழல் படம் கண்டு உவகையால்


நிழலாடும் உன்னவள் உன் நிஜமாகி


நீடூழி வாழ்க என வாழ்த்தி செல்கின்றதடி ....






Saturday, 4 April 2009

புரிதல்...


புரிதல் கொண்ட பிரியம்
பிரிவை கொள்ளாது.பிரிந்த
பிரியம்கூட புரிதலால்


பிரியாமல் நெஞ்சில் பிரியம் கொள்ளும்


பிரிதல் புரிந்து கொண்டவர்கில்லை


பிரிந்தும் புரியாமல் இருக்கும் பெண்ணே


பிரிவை காட்டிலும் புரிதல் கடினமடி


பிரிந்த பின் புரிந்து கொண்டேன் என் மீதான உன்


பிரியமான புரிதலை .....நீ எனக்கு என்றும்


புரியாத புதிராய் நெஞ்சில் வாழும்


பிரியாமான புரிதலடி ....


(ஹா ஹா ஹா ....என்ன புரிஞ்சுதா?)










Friday, 3 April 2009

பொய்யல்ல ....


கண்ணில் விழுந்த காட்சி பொய்யாகலாம் -நம்
கருத்தில் விளைந்த எண்ணங்கள் பொய்யாகலாம்
காகிதம் கொண்ட நம் எழுத்து பரிமாற்றங்கள் பொய்யாகலாம்
கணினி வழி நம் மனங்கள் சந்தித்த நாட்கள் பொய்யாகலாம்

கருங்குயில் கானம் பொய்யாகலாம் -நம்

கால் தடம் பதித்து நடந்து மகிழ்ந்த அந்த

கடல் கரை கொண்ட அலைகள் பொய்யாகலாம்

காற்று...மனம் கொள்ளை கொண்ட அந்த அழகிய

கானகம் ...எல்லாம் பொய்யாகலாம் ....ஆனால்

களங்கமில்லா என் அன்பு பொய் என்றாயே

களங்கம் நிலவிலும் உண்டு ...ஆனால்

கடவுளுக்கு உண்டோ ???...நான் உன்னில் கொண்ட

கள்ளமில்லா அன்பு அந்த கடவுளுக்கு

காலடியில் தவழும் பூக்கள் போல அன்றோ ?

காயங்கள் கொண்டது என் மனமும் நண்பா உனது

கசையடி கொண்ட வார்த்தைகளால் ....நான்

காற்றில் கரைந்து போஅனாலும் -என்

கல்லறை பூக்கள் மறக்காமல் சொல்லும் உன்னிடம்

கபடம் இல்லா என் அன்பு பொய்யல்ல .....என்று




பாரதி ஒரு கேள்விகுறி (பகுதி நான்கு )

பாரதி உங்கிட்ட இருந்து நான் எதிர் பார்க்கவில்லை இப்படி ஒரு முடிவை ..சரி உனக்கு என்ன நீ மேற்கொண்டு படிக்க விருப்ப படுற தானே ..நீ தாராளமா படி நான் ஏதும் சொல்லல ...உன்னை நான் படிக்க வைக்கிறேன் ஓகே யா .. கண்ணீர் மல்க கேட்டாள்..உண்மையாகவா??? ஆமா பாரதி நீ படி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை சரியா? மென்மையான பிஞ்சு கரங்களை பிடித்தான் ...தீயை தொட்டுவிட்டது போல சட்டென்று கையை எடுத்தவள் இங்கே பாருங்க பிரவீன் ...எனக்கு எந்த விசயத்திலும் விருப்பம் இல்லை . எனக்கு உங்க மேல காதல் வரல .நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுகே தெரியும்என்னை மன்னிச்சிடுங்க பிரவீன் ....
கண் இமைக்காமல் அவளையே நோக்கியவன் சிரித்துக்கொண்டு அநியாயத்துக்கு சின்ன பொண்ணா இருக்கியே... ஓகே இந்த ஆறு வருசமா காத்திருந்தேன் இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்க வேண்டுமோ ???...ஆனா கண்டிப்பா உனக்கு என் மேல விருப்பம் வரும் அது வரை நான் காத்திருபேன் கண்ணே .... மெல்லிய புன்னகை புரிந்தவள் பிரவீன் நான் எப்போ காலேஜ் போகணும் ..அடிபாவி ...முதல் இரவில் கேட்குற கேள்விய இது ??? நம்ம முதல் இரவு வித்யாசமா இருக்கணும்னு நினைத்தேன் இப்படி ஒரு வித்தியாசமா இருக்கும்னு நினைகல ..சரி பாரதி நாளைக்கே காலேஜ் ல சேர ஏற்ப்பாடு செய்றேன் ஓகே யா... இப்போ நிம்மதியா தூங்கு .... ரொம்ப நன்றி பிரவீன்.... நன்றிலாம் மொத்தமா வாங்கிக்குறேன் மேடம் ... சிரித்தான் மனதில் வழியோடு .
ஒன்றும் அறியாதா குழந்தை போல் பாரதி தூங்குவது கண்டு அவள் தலையை தடவி கொடுத்து ஐ ..லவ் யு பாரதி ...நீ எனக்கு குழந்தையடி ...நிட்சயமா என்னை நீ புரிஞ்சுகுவ ..எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதுவரை ஐ வில் வெயிட் பார் யு ....

குறிப்பு :: நண்பர்களே ....இந்த கதை தொடரனுமா ?? வேண்டாமா ?? எல்லாம் உங்க விருப்பதை கொண்டுதான் நானும் உங்க கருத்துக்காக வெயிட் பண்ணுறேன்
ஹா ஹா ஹா ....( என்னை அடிக்கனும்னு தோணுதா ??)

Thursday, 2 April 2009

பாரதி ஒரு கேள்விகுறி (பகுதி- மூன்று)

எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் ...பாரதி .... நீ உள்ள போ அப்பா அதட்ட வார்த்தை இழந்தவளாய் அமைதியாக கண்ணீர் துளிகளை சுமந்தவண்ணம் தன் அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கண்ணீர் வற்றும் வரை அழுதாள். அருகில் இருந்த பாரதியார் படத்தை பார்த்து எனக்கு உங்க பேரு வச்சது நினைச்சு எத்தனை நாள் பெருமை பட்டு இருகேன் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ...இன்னைக்கு நான் ஒரு அடிமை என்னை மீட்க வருவிங்களா பாரதி ???.அழுது அழுது அப்படியே தூங்கி விட்டாள்.

அழகிய மலர்கள் ஒன்று சேர்ந்து மாலையா மாறிவிட மணநாளும் வந்தது.
சுற்றங்கள் மகிழ பாரதி திருமதி ஆனாள். முதல் இரவு அன்று கனவுகள் வந்து கண்ணில் மின்ன பிரவீன் பாரதியின்

வரவை எதிர்பார்த்து இருந்தான். பூவுகே பூக்கள் சூடி அழகு தேவதை போல் அலங்கரித்து இருந்தார்கள் பாரதியை ..அவள் மனதிலோ போன வாரம் அய்யனாருக்கு நேர்ந்து பக்கத்து வட்டில் ஆசையா வளர்த்த கிடா பலிகொடுத்த நினைவு வந்தது. என் நிலைமையும் அதுதானே ..கண்ணீர் துளிகள் ரோஜாபூ கன்னம் அதில் கோலம் இட அறையில் நுழைந்தாள் .

மனதில் பட்டாசு வெடிக்க கண்களில் அந்த பிரகாசம் தெரிய வா பாரதின்னு பிரவீன் வரவேற்றான் .தென்றல் காற்று கூட இன்று அனலாய் அடித்து அவளுக்கு கண்களில் தீ பொறி தெறிக்க பிரவீன் மீது கோப பார்வை விசி பின்பு அமைதியாக

சன்னல் வழியே எட்டி பார்த்த நிலவை நோக்கினால் .பாரதி உனக்கு என் மேல கோபம் இருக்கும் ஆனா எனக்கு வேறு வழி தெரியல நீ எனக்கு வேணும் .உன்னை நான் ரொம்ப விரும்புறேன் பாரதி ..நீ தான் என் மனைவின்னு

என் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உன்னை நெனைச்சிட்டு இருகேன். நிறுத்துங்க ... அது எப்படிங்க உங்க மனசை மட்டும் பார்க்க தெரிஞ்ச உங்களுக்கு எனக்கும் மனசு இருக்கு நு தெரியாம போச்சுதா? நான் உங்ககிட்ட தனியா சொன்ன பிறகும் நீங்க எனக்கு செய்தது துரோகமா இல்லையா ???.பாரதி.... ப்ளீஸ் பிரவீன் என்னை விட்டுருங்க உங்க அனைவராலும் விளையாட பட்ட பொம்மைதான் நான் .. என்னால உங்க கூட குடும்பம் நடத்த முடியாது ..நாம பிரிஞ்சுடலாம் பிரவீன் .....

இப்படி ஒரு வார்த்தையால் தன் இதயம் நொறுங்கும் என நினைகதவனாய் நெஞ்சில் வார்த்தை அம்பு பாய்ந்த வலியோடு பாரதி...என்னைபொறுத்தவரை நீ சந்தோசமா இருக்கணும் அதனால நான் ஒரு முடிவுஎடுத்துட்டேன் .... (மீண்டும் வருவாள்)

Wednesday, 1 April 2009

பாரதி ஒரு கேள்விகுறி ( பகுதி - இரண்டு )

நீளமான கூந்தலை வாரி முடித்தவள் அழகாய் சிரித்து கொண்டிருந்த முல்லை மலர்களை சூடி தன்னை விலை பேச வந்தவன் முன்னே பளிங்கு பொம்மையாய் நின்று கொண்டிருந்தாள் . என்ன பொண்ணு பிடிச்சிருக்கா
இது அத்தையின் கேள்வி . அவளை இன்னைக்கு மட்டும் இல்லை என்றும் பிடிக்கும் எனக்கு ...இது பிரவீன் விசிய வார்த்தை கணைகள். இது பாரதிக்கு மனதில் அமிலம் விசியது போல் இருந்தாலும் அவனது காந்த பார்வைகள் எதோ பண்ண தான் செய்தன அவளுக்கு ... அந்த மின்சார தாக்கத்தை தொடர விரும்பாதவளாய் ..பிரவீன் உங்க கிட்ட கொஞ்சம்

தனியா பேசனும் ..ஓகே பாரதி தாரளமா பேசலாம் .. வண்ண மலர்கள் கேள்வி குறியோடு பாரதியை பார்க்க பிரவீன் எனக்கு உங்களை எனக்கு பிடிச்சிருக்கு .. நான் ரொம்ப கொடுத்து வச்சவன் பாரதி . ஆனா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை பிரவீன்..என்ன சொல்லுற பாரதி புரியல .. ஆமா எனக்கு கல்யாணம் வேண்டாம் ..நான் படிக்கணும் பிரவீன் ..தப்பா எடுத்துக்க வேண்டாம் உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா. ஏதும் பேசதவனாய் அவளை உற்று நோக்கியவன் ..ஓகே ..உன் விருப்பம் ..போலாமா ..எல்லோரும் வெயிட் பண்ணுறாங்க .. என்ன இரண்டு பெரும் என்ன முடிவு பண்ணி இருகிங்க கல்யாண நாள் பார்க்கலாம்னு பிரவீனின் அப்பா கேட்டார் ..ஓகே அப்பா உடனே ஒரு நல்ல நாள் பாருங்க.. நாங்க ரெடி நு சொல்லவும் என்ன பாரதி தனியா என்ன சொன்ன இப்படி அவசரபடுறான் அத்தை கிண்டல் செய்ய ஏதும் பிடிகாதவள் கொஞ்சம் என்னோட முடிவையும் சொல்லலாமா ???... எல்லோரும் புரியாத புதிராய் பாரதியை பார்த்தார்கள் .....( மீண்டும் வருவாள்)

Wednesday, 11 March 2009

பாரதி ஒரு கேள்விகுறி

பால் நிலா வெளிச்சம்..ஜன்னல் வழியே அறையில் அடிக்க அதை ரசித்து கொண்டேருந்தவள் மனதில் ஏதோ பயம் அடிக்கடி வந்து போனது .. தூக்கம் வராமல் தவித்தவள் வெளியே வந்தாள். நிலவின் வெளிச்சத்தில் தன்னை முழுமையாக நனைதவள் அருகில் இருந்த ரோஜா செடியை பார்த்தாள்..தென்றலோடு ஏதோ ரகசியம் பேசும் அந்த மலரை உற்று நோக்கியபடி இருந்தாள் ஆனால் மனதில் அந்த பயம் வந்து வந்து போனது. பயமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்க கடிகாரத்தை விட இவள் மனம் வேகமாக சென்றது .

பின்பு எதோ நினைத்தபடியே...அங்கயே கண் அயர்ந்து போனாள்.

பாரதி.....ஏய் பாரதி ...இன்னும் என்ன தூக்கம் ..என்னமா இங்கேயா தூங்கினா... ஐயோ .. என்ன பொண்ணுமா நீ .சரி ...மணி ஒன்பது வந்து குளிச்சிட்டு ரெடியா இரு சரியானு சொல்லிட்டே போன தன் அம்மாவை பார்த்தாள் ..திடீரென மனதில்

மணி அடிக்க ஐயோ மணி ஒன்பதா ...என்று பதறியபடி மாடி விட்டு இறங்கி...ஓடி சென்றவள் விட்டு வாசலில் இவள் நினைத்த படியே செய்தி தாள் கிடக்க மனதில் பயமும் ஆவலும் அதிகரிக்க பிரிந்து பார்த்தாள் ..எதோ தேடியவள் முகம் அந்த சூரியனை விட பிரகாசிக்க ஹையா ......நான் பாஸ் பண்ணிட்டேன் ....அம்மா

இங்கே வாங்க ...இங்கே பாருங்க நான் பாஸ் பண்ணிட்டேனு குதித்தாள்.

என்ன பாரதி இதுல என்ன அதிசயம் என் பொண்ணு எப்பவும் பாஸ் தானே .சரிமா நேரம் போகுது குளிச்சிட்டு ரெடியா இரு ..இன்னைக்கு உன்னை பாக்க சென்னைல இருந்து நம்ம விசாலம் அத்தையோட சொந்த காரங்க வராங்க . அம்மா அவுங்க எதுக்கு வராங்க நான் பாஸ் பண்ணியதுக்கு மாலை போட வரங்களா ... ஐயோ எனக்கு எதுக்குமா இந்த மாலை மரியாதை...வேண்டாம் வேண்டாம் இதுலாம் பாரதி வாழ்கையிலசகஜம்

என்று விளையாட்டாக சொல்லி சிரித்தவள் அடுத்து ,பாரதி உன்னை அவுங்க பொண்ணு பாக்க வாரங்கமா என்று சொன்ன அவள் அமமா சொன்னதும்

அதிர்ச்சியில் உறைந்து பின்பு எரிமலையாய் மாறி என்ன இது நான் இப்போ தான் பன்னிரண்டு பாஸ் பண்ணி இருக்கேன் இன்னும் நிறைய படிக்கணும் ..நல்ல படிச்சு நல்ல ஒரு வேலைக்கு போகணும் .அப்புறம் பார்த்துக்கலாம். பாரதி இங்கே பாருமா அம்மா சொன்ன கேட்கணும் .அம்மா சொன்ன கேட்பேன் ஆனா ந கிட்ட கேட்காம நீங்க இப்படி ஏன் பன்னுறேங்க . சாரி மா என்னால முடியாது காம்பெல் பண்ண வேண்டாம் . இல்லை பாரதி நீ சின்ன பொண்ணு உன் அப்பா வருவதுக்கு முன்னாடி ரெடியா இருன்னு போன அம்மாவையே பார்த்தவளின்

மனதில் ஏதோ தோன்ற உறுதி கொண்டவளாய் தன் அறை நோக்கி நடந்தவள் கதவை தாளிட்டு படுகையில் சரிந்தாள் .பாரதி ....பாரதின்னு ..யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க மெதுவா கதவை திறந்து விசாலம் அத்தையின் சிரிப்பையும் மலர்ந்த முகமும் என்றும் இல்லாமல் இன்று எரிச்சல் உட்ட அதை வெளி கட்டாமல் வாங்க அத்தை ..நல்ல இருக்கீங்களா மாமா நலமா ? ஆமாமா எல்லோரும் நலம் .நீ ஏன்மா இன்னுமா உன்னை பார்க்க என் அக்காவும் மாமாவும் அப்புறம் அவுங்க பையனும் வந்திருகாங்க சிக்கிரம் ரெடியா இருமா

சரிங்க அத்தை நான் இப்போ ரெடி ஆகிடுறேனு சொல்லி சிரித்தவள் நெஞ்சில் எதோ திட்டம் இருந்தது .......( மீண்டும் வருவாள் ...)

குறிப்பு : நண்பர்களே ...இது வரை என் மொக்கை கவிதையால் உங்களை இம்சை படுத்திய நான் இன்று "பாரதி ஒரு கேள்வி குறி " என்ற கதை போட்டு உங்களை இம்சை படுத்த ஆரம்பித்து விட்டேன் ..எப்போது போல உங்கள் ஒட்டு வேணும் ...நன்றி ..ஹா ஹா ஹா

விடை கொடு நண்பா

பழகிறாத அந்த நாட்களில் சுட்டெரிக்கும்
பாலைவன கள்ளியாய் இருந்தது நம் நட்பு -பின்
பனி துளி சுமந்த சிறு மொட்டு பூப்பது போல
பந்தம் கொண்டு நட்புடன் உறவாடிட யாரும்
பாராமல் சத்தம் இன்றி பூத்தது நம் நட்பு (பூ) நண்பனே...

பார்வைகள் பரிமாறி நம் நட்பு
பயணம் தொடர வில்லையே ...மெய்யான
பாசம் கொண்ட இதயத்திற்கு முன் -பொய்யான
பார்வையால் கிடைக்கும் பிம்பத்திற்கு
பலன் ஒன்றும் இல்லையே நண்பா......

வானம் பாடி போல் நாம் நட்பு கீதம்
வானில் பாடி திரிந்த அந்த அழகிய
வசந்தகாலம் முடிந்தது என்று உன்
வார்த்தையால் என் இதயம் கிழித்து
வன்முறை கொண்டாயே நண்பா

வாழும் காலம் வரை நம் நட்பு
வாடா மலராய் இருக்கும் என்று -என்னில்
வாக்கு மொழிந்தாயே அன்று...ஆனால் இன்று
வாடி போனது உன் நட்பா இல்லை
வதங்கி போன என் இதயமா நண்பா???

காலம் எல்லாம் வர எண்ணி நம் நட்பை
கல்லில் செதுக்கினேன் நான் ---- நீயோ
காற்றி எழுதி வைத்தாயே .... ஏன்
கலைந்து போக நம் நட்பு என்ன
கனவா இல்லை தூரம் தோன்றும்
கானல் நீரா நண்பா????????????

கண்ணில் காவியம் படித்த என்
கண்களும் இன்று ஏனோ
கண்ணீருடன் தீராத காதல் கொண்டு
கரை உடைத்து ஓலமிட்டு ஓடும்
காட்டாறு போல மாறியதும் ஏன்னென்று
காரணம் அறிவாயோ நண்பா

கொஞ்ச கொஞ்சமா பிரிந்து விடு என்கிறாய்
சின்னம் சின்னமாய் என் உயிர் சிதைந்ததும்
தெரியாமல் ...தவணை முறை கொண்டு உறவாட
நான் தயாராகவில்லை நண்பா...
காற்றில் நான் ஒன்றாகும் அந்த காலம் வரை
உன் நட்போடு என் கனவில் உறவாட
இப்போதே விடை கொடு நண்பா



































Tuesday, 3 March 2009

எனக்கு மட்டுமே சொந்தம் ...


உன்னை பூ என்று சொல்ல மாட்டேன் ... ஏன்னென்றால்
பூவில் பல வண்டுகள் மொய்ப்பதால் தான் -- நீ
எனக்கு மட்டுமே சொந்தம் ..
உன்னை நிலவு என்று சொல்ல மாட்டேன் ---ஏன்னென்றால்
அதை சுற்றிபல விண்மின்கள் கண் இமைப்பதால் தான் -நீ
எனக்கு மட்டுமே சொந்தம் ...
உன்னை காற்று என்று சொல்லமாட்டேன் ...ஏன்னென்றால்
உன்னை அனைவரும் சுவாசிக்க கூடும்...நீ
எனக்கு மட்டுமே சொந்தம்.....
உன்னை எதனுடனும் ஒப்பிடமாட்டேன் .... ஏன்னென்றால்

உனக்கு இணை நான் தானடி .... நீ

எனக்கு மட்டுமே சொந்தம் ...









Monday, 2 March 2009

மொக்கை காதல்

உயிரே....
உதடுகள் சேர்த்து நீ " உச் '' கொட்டும் போதெல்லாம்-என்
உள்ளத்தில் ஆசை தேள் '' நச் '' என்று கொட்டுகின்றது
உன்னிடம் என் காதலை ''பச்'' என்று சொல்ல எண்ணியப் போதெல்லாம்
ஊடல் கொண்டு ''கிச் '' என்று சென்று விடுவாயோ என
உறைந்து போகின்றேனடி ......



க‌ண்மூடி நீயும் துயில் கொள்



கனவுகள் தொலைத்து மனதை


கலக்கும் குழப்பங்கள் விரட்டி தென்றல்


காற்று அமைதியாய் உன்னை தழுவ


கருவிழி மூடி உள்ளத்தில் உள்ள


காயங்கள் நீங்க சிறு குழந்தை போல

க‌ண்மூடி நீயும் துயில் கொள்.....

கலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல

காவியம் படைத்திட நீ பிறந்தாய் ஆகையால்

கண்ணே க‌ண்மூடி நீயும் துயில் கொள்.



Sunday, 1 March 2009

பூமகளே...


சின்னஞ்சிறு கைஅசைத்து ..
சிரிக்கும் உன் முகம் பார்க்கும் போது
சிந்தனையும் கொஞ்சம் என்னை விட்டு
சிதறி செல்கின்றது ...
பூமியில் தேடினேன் அழகான
பூ ஏதேனும் உண்டா ஏன்று
புன்னகை புரியும் சின்னஞ்சிறு
பூவே .........நீ தான் இந்த
பூமியில் பிறந்திட்ட ...முதல் உயிர் உள்ள
பூ ஆகும்..... என் மடியில் தவழும்
பூமகளே... என்றும் நம் வீடு உன் வருகையால்
பூக்கோலம் ....காண்கின்றது



Saturday, 28 February 2009

நிலவே ....


நிலவே...

உனக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருகின்றதடி

அன்னை உன்னைக்காட்டி பால் ஊட்டிய

அந்த மழலை காலத்திலும்....

பாட்டி...வடை சுடுகிறாள் என்று உன்னை சுட்டி

காட்டி தோழிகளோடு ..சுற்றி திரிந்த அக்காலத்திலும்

கன்னிப்பருவத்தில் காதல் கொண்டு

உன்னை தூது அனுப்பிய அவ்வேளையிலும்

தலைவனை நான் சேர்கையில் நீ

தாளாத மகிழ்ச்சியில் வளர் பிறையாய்
ஆனா அந்த பொன் வேளையிலும்

தலைவன் வேலைநிமித்தம் எனை பிரிந்தது

தனியே நான் தவித்த நேரத்தில் நீ

எனை போல்உடல் தேய்ந்த சமயத்திலும்

உன்னில் நான் கொண்ட கோபம் காரணம்

நீ வராமல் வானம் போல்என் மனதையும்

அமாவாசையாக ஆக்கிய அந்த நாட்களிலும்

நம்முள் ஏதோ ..... இருக்கின்றது

ஆம் ....உனக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருகின்றதடி ..
( எனக்கு இப்படி தான் தோனுது உங்களுக்கு எப்படி?..சொல்லுங்க ...)





முதிர் கன்னி

அடுத்த வீட்டில் அறுபதாம் கல்யாணம்

கன்னி இவள் மனதில் அக்கினி சுவாலை

Wednesday, 25 February 2009

கானங்கருங்குயிலே.....


கானங்கருங்குயிலே.....
காற்றினில் உன் ராகம் கேட்கையிலே ... என்
கண்மணி அவள் குரல் எந்தன்
காதினில் தேன் கானமாக ..ஒலிகின்றது
கார்மேகமே...... உந்தான்
ருமையான வண்ணம் பார்கையிலே -வஞ்சி அவள்
கார்கூந்தல் காற்றில் பறந்து செல்ல -கொஞ்சி
பேசும் அவள் முக அழகு எந்தன் - நெஞ்சில் வந்து
பேரின்பம் மூட்டுகின்றது........


Tuesday, 24 February 2009

ஹைக்கூ ...

கோபம் ...
கன்னங்கள் ரோஜாபூ என்றேன்
சிவந்தது உன் மூக்கு....





Monday, 23 February 2009

இழப்பு

இழப்பு ........
இவளது வாழ்கையில் பழகி போன ஒன்றுஆனாலும்
ஒவ்வருதடவை சந்திக்கும் போதும்
சுக்காய் உடைந்து போகின்றது நெஞ்சம்
சுதந்திரமாய் சுற்றி திரிந்த காலத்தில்-என்
இறகுகள் பறிக்கபட்டு கூண்டில் அடைப்பட்டேன்
சுவாசிப்பதற்கும் அனுமதிவேண்டி நின்றேன்
புயல் வீசி சென்றபின் வந்த சிறு தென்றலாக
வாழ்வில் மீண்டும் வசந்தம் வர கொஞ்சம்
மகிழ்ந்து தான் இருந்து விட்டேன் - வானில்

பறக்க துடிக்கும் சின்னஞ் சிறு பறவையாய்..
துன்பபுயல் மீண்டும் வீச இதோ...என் சிறக்குகள்

பறிக்கப்பட்டு மீண்டும் துன்ப கூண்டில் இவள்.....

( எவனோ சொன்னான் துன்பம் இன்பம் மாறி மாறி வரும் என்று ..இன்பம் என்றால் ஏன்னங்க?.....)















வாழ்வைத்தோடி

கனவுகள் மூட்டையாய் கட்டிக்கொண்டு
அன்னை நாட்டை விட்டு அன்னியனாட்டுக்கு பயணம்
உறவுகள் துறந்து உயிர் மட்டும் சுமந்து -முற்றும்
துறந்த துறவியாய் வந்து சேர்ந்து விட்டோம்
வாழ்கையில் எதாவது சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில்
ஏதோ பொருளாதார விழ்ச்சியாம் ..இன்று
நீர்க்குமிழியாய் எதிர்காலம் -- இறைவா
விழ்ந்தது பொருளாதாரம் மட்டுமா -எங்கள்
வாழ்கையும் அல்லவா






Friday, 20 February 2009

மழலையாய் இருந்துவிடு

மாதங்கள் பத்து நான் சுமக்கவில்லை -உன்னை
மனதிற்குள் சுமக்கின்றேன் என் பிள்ளையாய்
மாந்தளிர் பாதம் சிவக்க நீ நடப்பதை -என்னை
மறந்து ரசித்து மயங்கிடவில்லை
மாமனை பாரடா என்று சுட்டிக்காட்டி --நானும்
மகிழுந்து கூத்தாடிடவில்லை ஆனாலும்
மனதிற்குள் சுமக்கின்றேன் என் பிள்ளையாய்

கள்ளமில்லா உன் சிரிப்பைக்கண்டு
கள்ளுண்ட வண்டுபோல் கானம் பாடி நின்றேன்
கானக்குயிலாய் உன் மழலைப்பேச்சு-என்
காதினில் தெய்விகமாக ஒலிக்கின்றது - நண்பா
காலமெல்லாம் உன் அன்னையாய் நான் இருக்க
கண்ணா நீயும் என் மழலையாய் இருந்துவிடு

Thursday, 19 February 2009

தேடல்

காலைகதிரவன் , புல்லின் மேல் பனித்துளி ,

காய்ந்திடும் பால் நிலா,மழலையின் மொழி

பாலின் வெண்மை ,அன்னையின் அன்பு

பசித்தவனுக்கு உணவு, இளம் வயது ,

காற்று ,நீர் ,வானம் ,நெருப்பு,பூமி

பூந்தளிர்,பூக்களின் மென்மை -என

எனது தேடலை தொடங்கினேன் உன்

அன்பிற்கு ஒப்பிட்டு பாட நினைத்திட - என்

இறைவா உனக்கு இணையாக இவ்வுலகில்

இன்னும் படைத்திடவில்லை என்று என் தேடலின்

இறுதியில் தெரிந்து தெளிந்து கொண்டேன் .


உனக்காக...

எனக்காக மட்டும் வாழும்
உனக்கா...