Thursday 24 December, 2009

அக்னிக்குஞ்சு --பாகம் 3

அன்னையை பிரிந்த மழலையாய் வாடினான்..பிரவின்..சுவற்றில் கடிகாரம் மணி 8 என்று சொல்லிக்கொண்டிருந்தது..ஐய்யோ இப்பவே மணி 8 ஆச்சே.. 10 மணிக்கு கடைசி ட்ரெயின்..அதை விட்டா நாளைக்கு தானே இருக்கு.. நினைக்கும் போதே உடம்பில் இரத்தம் அதி வேகமாக ஓடுவதுப்போல இருந்தது அவனுக்கு.,,உடனே தன் நண்பனுக்கு போன் செய்தான் டேய் சக்தி நான் உடனே சென்னை போகனும் 10 மணிக்கு இருக்கிற மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணு பிளிஸ்டா.. ஹேய் என்னடா ஆச்சு...ஏன் டென்சனா இருக்க..??பிரவின் சொன்னது கேட்டு என்னடா நீ இப்படி பண்ணிட்டா..சரி பயப்படாதே ..பாரதிக்கு ஒண்ணும் ஆகாது..அவ புத்திசாலி பொண்ணுடா..கவலைப்படாதே நான் டிக்கெட் புக் பண்ணிட்டு உன்னை வந்து கூட்டிட்டு போறேன் ஓகே.. ஓகேடா..தொலைப்பேசி சக்தி இழந்தது..

என்ன செய்வது என்று தோன்றவில்லை பிரவீனுக்கு..அப்படியே படுக்கையில் விழுந்தான்.. கட்டில் அருகே இருந்த புகைப்படத்தில் அவன் பிறந்த நாளைக்கு தனக்கு கேக் ஊட்டியப்படி இருந்த பாரதியின் புன்னகை இவனது மனதில் இன்னும் வழியை ஏற்படுத்தியது.அழுதான்.. பாரதி என்னை மன்னிச்சுடு என்னை விட்டு போய்டாதே... நீ இல்லனா நானும் இல்லை...

வீட்டின் முன்னே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு எழுந்தவன் சன்னல் வழியே பார்த்தான் சக்தி காரிலிருந்து வெளியே இறங்கினான். முகத்தை துடைத்துவிட்டு கதவை திறந்தான். என்னடா நீ இன்னும் புறப்படலையா இப்போ மணி 9 ஆகுது.. 10 மணிக்கு ட்ரெயின்..இதோ இப்போ ரெடி ஆகிடுறேன்.. சரி நீ போய் முகம் கழுவிட்டு ரெடி ஆகு நான் உன் திங்ஸ்லாம் எடுத்து வைக்கிறேன்..

தென்றலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ..... செல்போன் பாடியது..சக்தி எடுத்து ஹேலோ...யாருங்க .. நான் தான் பாரதியோட அப்பா பேசுறேன் ...ஓ.. நீங்களா..பாரதி எப்படி இருக்கா அப்பா.. நான் தான் சக்தி பேசுறேன்... அவர் சொன்னது கேட்டு அதிர்ந்து போனான்.சக்தி.
பிரவின் தயாராகி வந்துக்கொண்டிருந்தான். யாருடா ?? பாரதியோட அப்பாடா.. என்னாச்சு அவளுக்கு என்ன சொன்னார்? இல்ல நீ புறப்பட்டாச்சானு கேட்டார்டா...இன்னும் 3 மணி நேரத்தில் அங்கே இருப்போம்னு சொன்னேன்.. வேறு எதும் சொல்லலையா ??இல்லடா ஓகே போலாமா??சரிடா...


ரெயில் நிலையம் வரை இருவரிடம் மொளனமே நிலவியது. பயணிகள் கவனத்திற்கு சென்னை வழியே மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் தடம் எண் 3 நோக்கி
வந்துகொண்டிருக்கிறது. அழகான குரல் அறிவித்துகொண்டிருந்தது. நல்ல வேளை சரியான நேரத்திற்கு வந்தோம். பிரவின் தனக்கு பதிவு செய்த இருக்கையில் போய் இருந்தான். சக்தியும் அவனருகே போய் இருந்தான்.
ரொம்ப நன்றிடா சக்தி நீ இல்லைனா இன்னைக்கு நான் போகமுடியாது.ஹேய் என்னடா நீ நன்றிலாம் சொல்லிகிட்டு.ட்ரெயின் மெதுவாகா நகர்ந்தது..சரிடா நீ போ சக்தி ..ட்ரெயின் மூவ் ஆகுதுல... உன்னை இப்படி விட்டுட்டு எப்படிடா என்னால போக முடியும் எனக்கும் சேர்த்து தான் டிக்கெட் எடுத்தேன்.பிரவின் மொழியின்றி கண்ணில் நீர் தழும்ப சக்தியை பார்த்தான்..


என்னடா நீ சின்னப்புள்ளப் போல ..ஆபத்துல உன்கூட இல்லைனா நான் என்னடா ஃப்ரெண்ட்..கண்ணை துடைத்து தன் மேல் சாய்த்துக்கொண்டான்.. ட்ரெயின் வேகமாக சென்றுக்கொண்டிருந்த்து. பக்கத்து இருக்கையில் வயதான ஒருவர்..பகவத்க்கீதையில் கண்ணன் அர்ச்சுனன்னுக்கு வழங்கிய கீதா உபதேசம் படித்துக்கொண்டிருந்தார்.

பிரவின் இந்தா காபி சாப்பிடுடா..இல்லை வேண்டாம்டா.. நீ எதும் சாப்பிட்டு இருக்க மாட்டனு தெரியும் அதான் நானே அபிட்ட சொல்லி உனக்கு காபியும் ,தோசையும் செய்து கொண்டு வந்திருக்கேன்..சாப்பிடு..சக்தியின் வற்புறுத்தலில் காபி மட்டும் குடித்தான். உள்ளம் கொண்ட சோர்வு அவனை தூக்கதிற்கு அழைத்து சென்றிருந்தது அவனை எண்ணி வருந்தியவனாக மேலும் வற்புறுத்த விரும்பாமல் மொளனம் காத்தான்

ட்ரெயின் சென்னை ரெயில் நிலையத்தை அடைந்துகொண்டிருந்த்து..பிரவின் வா சென்னை வந்தாச்சு..அவனது படப்படப்பு இன்னும் அதிகமானது..ஏண்டா பாரதிக்கு எதாவது ஆகி இருக்குமா?? ஒண்ணும் இல்லை இப்போ தான் அவ அப்பாக்கு கால் பண்ணுனேன். அவர் இங்கே நம்மை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக கார் அனுப்பி இருக்கேனு சொன்னார்.

அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறினார்கள். ஒரு 20 நிமிடங்களில் G.K ஹாஸ்பிட்டல் முன்பு கார் ஒரு பெருமுச்சுவிட்டப்படி நின்றது. பாரதி இருக்கிறது நம்பர் 405 8வது மாடி நாம லிப்டில் போகலாம் சக்தி. ஓக்கே டா...லிப்டில் ஏறி 8வது மாடியை அடைந்து ரூம் நம்பர் 405 க்கு போனார்கள். அங்கே பாரதியின் அம்மா கண்கள்
கலங்கியப்படி நின்றுக் கொண்டிருந்தாள். என்னாச்சு அத்தை..பாரதி எங்கே??..வாப்பா...பிரவின் என்னை என்ன சொல்ல சொல்லுறிங்க ..இந்த பொண்ணு இப்படி ஒரு முடிவை எடுக்கும்னு யாரும் எதிர்ப்பார்க்கல....


( என்ன நண்பர்களே....அப்படி என்னத்தான் முடிவு எடுத்திருக்கும் அந்த பாரதி பொண்ணு??? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க....தெரியாதவர்களுக்கு விடைச்சொல்ல நாளை வருவாள் பாரதி....)
தொடரும்........

Wednesday 23 December, 2009

அக்னிக்குஞ்சு --பாகம் 2

அன்று மேகத்திற்கும் மனக்கவலை போலும் ப்ரவீனுடன் தானும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது . இன்றோடு இரண்டு நாள் ஆகிறதே ...ஏன் பாரதி ஒரு போன் கால் கூட பண்ணலையே... நான் பண்ணினாலும் போன் சுவிட்ச் ஆப் என்கிறதே ... ஒரு நாள் கூட இப்படி ஆனதில்லையே ...ஒரு வேளை என்னை நிஜமாவே விட்டு போய்விடுவாளோ ??
நான்தான் ஏதோ என்மீது கொண்ட வெறுப்பில் சொன்னேன் என்றால் நீயும் போய்விட்டாயே ...இல்லை நீ என்ன செய்வாய் நீயும் பெண்தானே ...எந்த பெண்ணுக்குத்தான் தான் தாயாகவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கும் . அதிலும் உனக்கு குழந்தைகள் என்றால் உயிராயிற்றே ... ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று இல்லாமல் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்வேன் என்று என்னிடம் அடிக்கடி சொல்வாயே

என்னால் ஒரு குழந்தைக்கூட தர இயலாது என்று டாக்டர் சொன்னது கேட்டு நான் உள்ளம் வெடித்து அழுதப்போது உன் கண்ணில் அரும்பிய ஏமாற்றத்தை உன் புன்னகையால் துடைத்து விட்டு உன்மடியில் எனை சாய்த்து சமாதனம் செய்தாயடி ... மீண்டும் தாய் அன்பை அன்று உன்னில் உணர்ந்தேனடி .. என்னை ஆறுதல் படுத்தி விட்டு நான் தூங்குகிறேன் என்று நினைத்து உன் தலையணையை கண்ணீரால் நனைத்ததும் நான் அறிவேன் .. என் நிலை அறிந்திருந்தும் உன்னை நான் ஏமாற்ற என் மனம் விரும்பவில்லை ...
ஒரு பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று வேறு மணம் புரிந்துகொள்ளும் ஆண்களை இந்த சமுதாயம் ஏற்று கொள்ளும் போது ஒரு ஆனால் குழந்தை பாக்கியம் தர இயலாது என்று அறிந்த பின் அந்த பெண் வேறு மணம் முடிப்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்..எவ்வாறு எண்ணியப்படியே சன்னல் வெளியே பார்வையை செலுத்தினான்
அங்கே ஒரு பெண் மழையில் நனைந்துக்கொண்டு குடையை தன் குழந்தைக்கு பிடித்தப்படி போய் கொண்டிருந்தாள்.. இந்த காட்சி அவனுக்கு மனதிற்கு இதமாக இருந்தது. அப்போது செல் போன் அழைக்கவே ..பாரதியாக தான் இருக்கும் என்று எண்ணி ஆசையுடன் பார்த்தான் .
அவளது போன் நம்பர் வந்ததும் இன்னும் மகிழ்ச்சியுடன் ஹேலொ...பாரதி என்றான். ஆனால் அவனுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. மறுப்பக்கம் பாரதியின் அப்பா நான் மாமா பேசுறேன்பா நம்ம பாரதிக்கு உடம்புக்கு கொஞ்சம் நீங்க உடனே கிளம்பி நம்ம GK Hospital க்கு வாங்க .என்னாச்சு மாமா பாரதிக்கு?? பயப்படுற மாதிரி ஒன்றும் பிரச்சனை இல்லப்பா நீங்க வாங்க .சரிங்க மாமா இப்பவே வாரென்.
மறுமுனையில் துண்டிக்கப்பட்ட்தும் என்னச்சு பாரதிக்கு எதாவது விபரீத முடிவு எடுத்திருப்பாளே...?? துடித்தான்
(தொடரும்)

Thursday 17 December, 2009

அக்னிக்குஞ்சு

காலை பொழுதின் சுறுசுறுப்பில் தொலைப்பேசியின் அழைப்பு ஒலிகளிலும்கணிணியின் தட்டச்சு ஒலிகளிலும் அலுவலகம் தனக்கே உரிய பரபரப்பில் நிரம்பி இருந்தது...அன்றய அலுவலக வேலையில் ஊறியவள் மனதில் திடீரென பிரவின் காலையில் தன்னிடம் சொல்லிய வார்த்தைகள் அலைமோதியது. பாரதி ... நல்ல யோச்சு பாரு....எனக்காக உன் வாழ்க்கையை கெடுத்துகாதே...இதுல எனக்கு வருத்தம் எதும் இல்லை நீ சந்தோஷமா இருக்கனும் அதுதான் உன்கிட்ட நான் வச்சிருக்கிற அன்பிற்க்கு அர்த்தம்னு இனிய அமில வார்த்தைகளை உதிர்த்து சென்ற பிரவினை எண்ணி கலங்கினாள்.....சில நொடிகளில் பட்டு விட்ட செடியில் துளிர்த்த இளம்தளிராய் எண்ணம் உதிக்க ஒரு முடிவுக்கு வந்தாள்..அன்றய வேலைகளை முடித்தவள் ரிப்பேர்ட்டுக்களை தன் மேனெஜரிடம்கொடுத்துவிட்டு அதனுடன் ஒரு காகிததையும் நீட்டினாள். என்ன பாரதி இது?? லீவு அப்பிளிக்கேசன் கொடுத்திருக்க..ஏதாவது பிரச்சனையா??வாட்ஸ் த பிராபளம் ???சிறு புன்னகை உதிர்த்தவள் ஸார் என் ஃபெமிலில ஒரு ப்ராபளம் ...கொஞ்சம் சிவியர்.. நான் கண்டிப்பா ஊருக்கு போய் ஆகனும்வில் யு ப்ளிஸ் அக்செப்ட் மை லீவ்.....ஓகே பட் ஒன்லி 15 டேய்ஸ் என்று கைஒப்பம் இட்டவரிடம் தேங்யூ ஸார் என்று துளிர்த்த கண்ணிரை மறைத்து கொண்டு இருக்கைக்கு விரைந்தாள்....வானம் கரிய உடை மாற்றி கொண்டிருந்தது ...அழைப்பொலியின் சத்தம் கேட்டு கதவை திறந்தவள் குழந்தை புன்முறுவல் உதிர்த்த பிரவினிடம் இருந்து லெப்டாபை வாங்கிகொண்டு என்ன இன்னைக்கும் டிராபிக் தானாஎன்று கிண்டலாக கேட்டு சிரித்த வாறு லெப்டாப்பை மேஜையில் வைத்தாள். அழகிய இள்ம் நீல உடைக்கு மாறி இருந்தான் பிரவீன்.சுவற்றில்மாட்டியிருந்த தொலைக்காட்சிப்பெட்டிக்கு உயிர்க்கொடுத்தவன் பாரதிக்கொடுத்த காபியை வாங்கினான்..என்ன பாரதி இன்னைக்கு ஆபிஸ்ல வேலை அதிகமா?? எப்பவும் போல தாங்க ..உங்களுக்கு எப்படி பிரவீன்?.இன்னைக்கு கொஞ்சம் அதிகம் தான்டா...காபியை உறிஞ்சி தொண்டைக்கு அனுப்பி விட்டு ..சரிமா...மறுபடி அதே பற்றி பேசுறென்னு நினைக்காதே..காலையில சொன்னதை பற்றி என்ன முடிவு எடுத்திருக்க ??? ஓ.அதுவா நான் கூட நல்லா யோசிச்சு பார்த்தேன்..எனக்கும் நிங்க சொல்லுறதுல நியாயம் தோனுது...சோ...நான் ஒரு நல்ல முடிவுக்கு வந்துடேன் ...என்ன முடிவுடா...உங்கள விட்டு உடனே பிரியனும்னா முடியாதுங்க...என் மனசு சரியில்ல பிரவீன்... நான் ஒரு இரண்டு மூனு நாளைக்கு என் வீட்டிற்கு போய்ட்டு வரட்டுமா... வந்தவுடன் இதுக்கு ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்... ஓகே டா.எதுப்பற்றியும் கவலைப்பாடாதே என்றான் நெஞ்சுக்குள் மரணித்தவாறு...... இரவில் தூங்காமல் ...புரண்டவன் அருகே தூங்கும் பாரதியைப் பார்த்தான்என்னை விட்டு போறியா பாரதி...கண்ணீர் துளிகள் நெஞ்சின் வலியை உணர்த்த அப்படியே துங்கினான்...அவள் எடுக்கவிருக்கும் உயிர் பதற வைக்கும் முடிவை அறியாமல்.....

( அது என்னவா இருக்கும் எதுக்கு முடிவு????தொடரும்.....)