Saturday, 28 February, 2009

நிலவே ....


நிலவே...

உனக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருகின்றதடி

அன்னை உன்னைக்காட்டி பால் ஊட்டிய

அந்த மழலை காலத்திலும்....

பாட்டி...வடை சுடுகிறாள் என்று உன்னை சுட்டி

காட்டி தோழிகளோடு ..சுற்றி திரிந்த அக்காலத்திலும்

கன்னிப்பருவத்தில் காதல் கொண்டு

உன்னை தூது அனுப்பிய அவ்வேளையிலும்

தலைவனை நான் சேர்கையில் நீ

தாளாத மகிழ்ச்சியில் வளர் பிறையாய்
ஆனா அந்த பொன் வேளையிலும்

தலைவன் வேலைநிமித்தம் எனை பிரிந்தது

தனியே நான் தவித்த நேரத்தில் நீ

எனை போல்உடல் தேய்ந்த சமயத்திலும்

உன்னில் நான் கொண்ட கோபம் காரணம்

நீ வராமல் வானம் போல்என் மனதையும்

அமாவாசையாக ஆக்கிய அந்த நாட்களிலும்

நம்முள் ஏதோ ..... இருக்கின்றது

ஆம் ....உனக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருகின்றதடி ..
( எனக்கு இப்படி தான் தோனுது உங்களுக்கு எப்படி?..சொல்லுங்க ...)

முதிர் கன்னி

அடுத்த வீட்டில் அறுபதாம் கல்யாணம்

கன்னி இவள் மனதில் அக்கினி சுவாலை

Wednesday, 25 February, 2009

கானங்கருங்குயிலே.....


கானங்கருங்குயிலே.....
காற்றினில் உன் ராகம் கேட்கையிலே ... என்
கண்மணி அவள் குரல் எந்தன்
காதினில் தேன் கானமாக ..ஒலிகின்றது
கார்மேகமே...... உந்தான்
ருமையான வண்ணம் பார்கையிலே -வஞ்சி அவள்
கார்கூந்தல் காற்றில் பறந்து செல்ல -கொஞ்சி
பேசும் அவள் முக அழகு எந்தன் - நெஞ்சில் வந்து
பேரின்பம் மூட்டுகின்றது........


Tuesday, 24 February, 2009

ஹைக்கூ ...

கோபம் ...
கன்னங்கள் ரோஜாபூ என்றேன்
சிவந்தது உன் மூக்கு....

Monday, 23 February, 2009

இழப்பு

இழப்பு ........
இவளது வாழ்கையில் பழகி போன ஒன்றுஆனாலும்
ஒவ்வருதடவை சந்திக்கும் போதும்
சுக்காய் உடைந்து போகின்றது நெஞ்சம்
சுதந்திரமாய் சுற்றி திரிந்த காலத்தில்-என்
இறகுகள் பறிக்கபட்டு கூண்டில் அடைப்பட்டேன்
சுவாசிப்பதற்கும் அனுமதிவேண்டி நின்றேன்
புயல் வீசி சென்றபின் வந்த சிறு தென்றலாக
வாழ்வில் மீண்டும் வசந்தம் வர கொஞ்சம்
மகிழ்ந்து தான் இருந்து விட்டேன் - வானில்

பறக்க துடிக்கும் சின்னஞ் சிறு பறவையாய்..
துன்பபுயல் மீண்டும் வீச இதோ...என் சிறக்குகள்

பறிக்கப்பட்டு மீண்டும் துன்ப கூண்டில் இவள்.....

( எவனோ சொன்னான் துன்பம் இன்பம் மாறி மாறி வரும் என்று ..இன்பம் என்றால் ஏன்னங்க?.....)வாழ்வைத்தோடி

கனவுகள் மூட்டையாய் கட்டிக்கொண்டு
அன்னை நாட்டை விட்டு அன்னியனாட்டுக்கு பயணம்
உறவுகள் துறந்து உயிர் மட்டும் சுமந்து -முற்றும்
துறந்த துறவியாய் வந்து சேர்ந்து விட்டோம்
வாழ்கையில் எதாவது சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில்
ஏதோ பொருளாதார விழ்ச்சியாம் ..இன்று
நீர்க்குமிழியாய் எதிர்காலம் -- இறைவா
விழ்ந்தது பொருளாதாரம் மட்டுமா -எங்கள்
வாழ்கையும் அல்லவா


Friday, 20 February, 2009

மழலையாய் இருந்துவிடு

மாதங்கள் பத்து நான் சுமக்கவில்லை -உன்னை
மனதிற்குள் சுமக்கின்றேன் என் பிள்ளையாய்
மாந்தளிர் பாதம் சிவக்க நீ நடப்பதை -என்னை
மறந்து ரசித்து மயங்கிடவில்லை
மாமனை பாரடா என்று சுட்டிக்காட்டி --நானும்
மகிழுந்து கூத்தாடிடவில்லை ஆனாலும்
மனதிற்குள் சுமக்கின்றேன் என் பிள்ளையாய்

கள்ளமில்லா உன் சிரிப்பைக்கண்டு
கள்ளுண்ட வண்டுபோல் கானம் பாடி நின்றேன்
கானக்குயிலாய் உன் மழலைப்பேச்சு-என்
காதினில் தெய்விகமாக ஒலிக்கின்றது - நண்பா
காலமெல்லாம் உன் அன்னையாய் நான் இருக்க
கண்ணா நீயும் என் மழலையாய் இருந்துவிடு

Thursday, 19 February, 2009

தேடல்

காலைகதிரவன் , புல்லின் மேல் பனித்துளி ,

காய்ந்திடும் பால் நிலா,மழலையின் மொழி

பாலின் வெண்மை ,அன்னையின் அன்பு

பசித்தவனுக்கு உணவு, இளம் வயது ,

காற்று ,நீர் ,வானம் ,நெருப்பு,பூமி

பூந்தளிர்,பூக்களின் மென்மை -என

எனது தேடலை தொடங்கினேன் உன்

அன்பிற்கு ஒப்பிட்டு பாட நினைத்திட - என்

இறைவா உனக்கு இணையாக இவ்வுலகில்

இன்னும் படைத்திடவில்லை என்று என் தேடலின்

இறுதியில் தெரிந்து தெளிந்து கொண்டேன் .


உனக்காக...

எனக்காக மட்டும் வாழும்
உனக்கா...