Saturday 30 January, 2010

சிறு வலம்

வெண்பஞ்சு மேகம் தீண்டும்
நீள் நெடும் மரங்கள் சுமந்த
கானகத்தின் மடியில் தவழ்ந்திடும்
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சியாய்
வனத்தில் ஒரு சிறுவலம்...

கானகத்தாயின் தாய்பாலென வழிந்திடும்
அருவியில் குளித்து பசித்தீர
 பருகிடும் மழலையாய்


விட்டொழிந்த தலைவன் காரணம்
பசலைப்படர் உடல்கொண்ட மரம்
தொட்டு ஆறுதல் சொல்லும் தோழியாய்..

மதுவுண்ட மங்கையென
காற்று காதலன் தீண்ட ராகம் மீட்டி
 நடனமிடும் மூங்கில் கூட்டத்துடன் 
நெஞ்சுவந்துஆடிடும் கூத்தாடியாய்.....


சுவடுகள் மாற்றி அமரும்
பதிவிரத கொள்கைக்கொல்லும்
குழவிகள் தேனுண்டு ரீங்காரமிட்டு
தழுவும் மலர்களை கண்களில்
சிறைக்கொண்டு அதன் எழிலை
மனதில் தீட்டூம் ஓவியனாய்....

இன்னும் பற்பலவாய் மாறி
இயற்கை அழகை இன்னும்
ருசித்து புசிப்பவளாய்
பயணிக்க துடிக்கிறேன்....

Sunday 24 January, 2010

அடியே.....




உனை தேவதை என்று மொழிந்தேன்-ஆனால்

உன் மனமெனும் சொர்க்க நரகக்குழியில்


நித்தம் உயிர் நீத்து,பிறக்கும் சாபம்


கொடுத்த கொடூர மோகினியடி நீ ......






உனை என் செல்லம் என்றேன்- ஆனால்


என் ஒவ்வொறு செல்களையும் உனது


நினைவென்னும் அமிலம் கொண்டு முழுவதுமாய்


அரித்துவிட்ட கருணையில்லா கரையானடி நீ.....






உனை பூவை என இயம்பி இன்புற்றேன் – ஆனால்


பூவின் மென்மைக்கொன்று நான்க்கொண்ட மோகத்தால்


எனை முழுவதுமாய் உன் நெஞ்சத்தில் உட்கரித்து


முழுங்கி விட்ட புதைக்குழியடி நீ....






உனை என் தங்கமே என்றழைத்தேன்.-ஆனால்


என் அங்கங்களை உன் வார்த்தையால்


எனை கொஞ்சம் கொஞ்சமாய்.சிதைத்து கூறுப்போட்டு


ரசிக்கும் கூரிய இரும்பு வாளடி நீ...






நீ சைவம் என்றல்லவா சொன்னாய் – ஆனால்


அமிலம் பூசிய நின் பார்வைக்கதிரால்


என்னில் ஊடூருவி உயிருடன் எனை


புசிக்கிக்கின்ற அகோரியடி நீ.....


( என்று வ ந்த்து..அசைவத்தின் மீது ஆசை??)

Tuesday 19 January, 2010

சுகமா ?? சுமையா ??

விளங்கவில்லை ...

எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ??

கரும்பாறை மனதில் சவ்வூடு பரவலாய்

கசிந்துருகும் நின் காதல் சுகமா ? சுமையா?

சுகமான சுமையா ? இல்லை சுமையாகிவிட்ட சுகமா ?

சுகம் எனில் பிரிவினில் ரத்த நாளங்களில்

உன் நினைவு முடிச்சுகள் முட்டி மோதி

சுமையாய் ஆனது ஏன் ???

சுமை எனில் உன் காதல் கொண்ட முகம்

நெஞ்சுக்குள் வந்து புரியாத சுகம் தருவதேன் ?

எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ???

உன்னை உள்ளத்தில் சுமந்ததால் சுகமா

சுகமான சுமையே ...உன்னை மனதில்

சுகமாய் என்றும் சுமப்பேன் --நீ எனை

சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் .....








Sunday 3 January, 2010

அக்னிக்குஞ்சு

நீங்க போய் உங்க பொண்ணை பார்க்கலாம் என்ற டாக்டரிடம் பிரவீன் டாக்டர் பாரதிக்கு இப்போ எப்படி இருக்கு ?? நீங்க தான் பிரவீனா ?? அவுங்க இப்போ நல்லா இருகாங்க .உங்க கிட்ட கொஞ்சம் சில விஷயங்கள் சொல்லணும் . ஓகே டாக்டர் . இதோ வாரேன் ..டாக்டர் சொன்னது கேட்டு வருந்தியவன் பாரதியை காண ஓடினான் .. அவசர சிகிச்சைப்பிரிவில் வாடிய மலரை போல கிடந்தாள் பாரதி .. அவள் நிலை கண்டு வருந்தினான் அவள் அருகே சென்று பாரதி ..நான் பிரவீன் வந்திருக்கேன் பாரு ..கண்களை மெதுவாக திறந்து பிரவீனை பார்த்தாள்.. என்னை தப்பா..நினைக்காதிங்க பிரவீன் என்றவளின் வாயை தன் கைகளால் மூடினான் இல்ல பாரதி அப்படி ஒன்றும் நீ தப்பு செய்யலையே ..எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல சொல்லப்போனால் உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. எந்த பொண்ணும் செய்ய தயங்குற விசயம் மா.. தன் கணவனுக்கு குழந்தை பிறக்காதுனு தெரிஞ்சா அவன் மேல வெறுப்பு தான் வரும் ஆனால்
எனக்காக உன்னோட கர்ப்பபையை எடுக்க துணிஞ்ச்சிட்டயே மா..?? .
ஆமா பிரவின் நீங்க எனக்கு முக்கியம் வயிற்றுல சுமந்தாதான் பிள்ளையா?? நாம வேறு குழந்தை தத்து எடுத்துக்கலாம் ஆனா நீங்க இல்லனா நான் எப்படி உயிருடன் இருப்பேனு நினைப்பீங்க பிரவீன்??

நான் உங்ககிட்ட இன்னொரு விசயமும் சொல்லனும் .என்ன அந்த அஞ்சலி பற்றி தானே?? டாக்டர் சொன்னார்டா.. அவளால் கரு உண்டாவதிற்கு முடியும் ஆனால்அந்த பொண்ணுக்கு ஒரு குழந்தையை சுமக்கிற அளவுக்கு அவுங்க கர்ப்பபை சக்தி இல்லை அதனால அ ந்த பொண்ணு மனம் உடைஞ்சு தற்கொலை முயற்சி
செய்ய போனதாகவும் நீ அ ந்த பொண்ணுக்கு கர்ப்பபை தானம் செய்ய தாயாராக இருப்பதையும் சொன்னார்டா..உங்க ஆனால் உங்க சம்மததிற்கு தான் காத்திருக்கேன்...பாரதி நான் அப்பவே அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டேன் மா...இது நானல நீ இன்னொரு பொண்ணுக்கும் வாழ்க்கை கொடுத்திருக்க யு வார் கிரேட்
I LOVE YOU BHARATHIII......