பழகிறாத அந்த நாட்களில் சுட்டெரிக்கும்
பாலைவன கள்ளியாய் இருந்தது நம் நட்பு -பின்
பனி துளி சுமந்த சிறு மொட்டு பூப்பது போல
பந்தம் கொண்டு நட்புடன் உறவாடிட யாரும்
பாராமல் சத்தம் இன்றி பூத்தது நம் நட்பு (பூ) நண்பனே...
பார்வைகள் பரிமாறி நம் நட்பு
பயணம் தொடர வில்லையே ...மெய்யான
பாசம் கொண்ட இதயத்திற்கு முன் -பொய்யான
பார்வையால் கிடைக்கும் பிம்பத்திற்கு
பலன் ஒன்றும் இல்லையே நண்பா......
வானம் பாடி போல் நாம் நட்பு கீதம்
வானில் பாடி திரிந்த அந்த அழகிய
வசந்தகாலம் முடிந்தது என்று உன்
வார்த்தையால் என் இதயம் கிழித்து
வன்முறை கொண்டாயே நண்பா
வாழும் காலம் வரை நம் நட்பு
வாடா மலராய் இருக்கும் என்று -என்னில்
வாக்கு மொழிந்தாயே அன்று...ஆனால் இன்று
வாடி போனது உன் நட்பா இல்லை
வதங்கி போன என் இதயமா நண்பா???
காலம் எல்லாம் வர எண்ணி நம் நட்பை
கல்லில் செதுக்கினேன் நான் ---- நீயோ
காற்றி எழுதி வைத்தாயே .... ஏன்
கலைந்து போக நம் நட்பு என்ன
கனவா இல்லை தூரம் தோன்றும்
கானல் நீரா நண்பா????????????
கண்ணில் காவியம் படித்த என்
கண்களும் இன்று ஏனோ
கண்ணீருடன் தீராத காதல் கொண்டு
கரை உடைத்து ஓலமிட்டு ஓடும்
காட்டாறு போல மாறியதும் ஏன்னென்று
காரணம் அறிவாயோ நண்பா
கொஞ்ச கொஞ்சமா பிரிந்து விடு என்கிறாய்
சின்னம் சின்னமாய் என் உயிர் சிதைந்ததும்
தெரியாமல் ...தவணை முறை கொண்டு உறவாட
நான் தயாராகவில்லை நண்பா...
காற்றில் நான் ஒன்றாகும் அந்த காலம் வரை
உன் நட்போடு என் கனவில் உறவாட
இப்போதே விடை கொடு நண்பா
3 comments:
நல்ல நட்பு ...
உங்கள் நட்பு பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
கொஞ்ச கொஞ்சமா பிரிந்து விடு என்கிறாய்
சின்னம் சின்னமாய் என் உயிர் சிதைந்ததும்
தெரியாமல் ...தவணை முறை கொண்டு உறவாட
நான் தயாராகவில்லை நண்பா...///
அருமையான வரிகள்!..
I feel this as writer's feeling (experience) rather than his/her imagination.
Post a Comment