கைகோர்த்து நீயும் நானும்
பள்ளி சென்ற போதும் ...
சிறு மண் வீடு கட்டி
கொட்டன்குச்சியில் வித விதமாக
சமைத்து விளையாடிட்ட போதும்
தேடி தேடி கவனமாய்
பட்டாம்பூச்சி பிடித்து மீண்டும்
பறக்க விட்டு ரசித்திட்ட போதும்
நீயும் நானும் நாம் என்று
இருந்தோமே என்னவளே....
புத்தம் புதிய தாவணி ,கஸ்துரி மஞ்சள் மணக்கும்
உன் முகம் நீ கொண்ட முதல் வெட்கம்
கன்னியென பதவி கொண்ட
அந்த நாளின் அனுபவங்கள் என்னிடம்
சொல்லி ரசித்திடஅந்த பொன்முகம்
இன்னும் அழிய வில்லையடி
கல்லூரி நாட்களில் வகுப்பில்
நீயும் நானும் படிப்பில் மட்டும் அல்லாது
நண்பர்களுடன் கேலி செய்து விளையாடி
களித்திட போதிலும் பிரிய வில்லையடி
ஊரார் கண் பட்டது போலும்
ஓசை இன்றி என்னிடம்
அறிவிப்பு ஒன்றும் இல்லாமல்
உன் உயிரை என்னுள் செலுத்தி
உடல் கொண்டு சென்றாயடி
காலமகள் கையில்
கலந்து கரைந்திட போதும்
நான் ராகம் இல்லா
வீணையாய் உன் நினைவு என்னும்
கம்பிகள் மட்டும் சுமந்து வாழ்கின்றேன்
நீ இன்றி .....
என் சந்தோசம் கூட வர்ணம் இல்லா
வான வில்லாய் சில துளிகள்
மட்டும் சுமக்கும் கரும் மேகமாய் தெரிகின்றது
என் உள்ளம் படித்த என்னவளே
உருகி வடிகின்ற மெழுகாய்
கொஞ்சம் கொஞ்சமாய் உருகும்
என் உயிரும் உன்னை காண்பது
எப்போது?
என் பெண்மை உணர்வுகள்
உன்னில் நான் பகிர்ந்து
கொள்ளவும் , கவலை கொண்ட
பொது சேயாய் மாறி உன் மடியில்
உறங்கிடவும் என்னவளே நீ
மீண்டும் வருவாயா???/
13 comments:
nallaa irukku azee unga unarvugalai prathipalikkuthu kavithai padikkum potthu idhayam kanakirathu
கொட்டன்குச்சியில் வித விதமாக
சமைத்து விளையாடிட்ட போதும்]]
கூட்டாஞ்சோறு என்று நானும் விளையாடி இருக்கேன்.
வர்ணம் இல்லா
வான வில்லாய் சில துளிகள்
மட்டும் சுமக்கும் கரும் மேகமாய் தெரிகின்றது ]]
அருமை.
என் பெண்மை உணர்வுகள்
உன்னில் நான் பகிர்ந்து
கொள்ளவும் ]]
மிகவும் அருமை.
நல்ல புரிதல்
ஓகே இன்னம் வேற ஏதாவது டிரை பண்ணு
சந்தோசம் ங்குற வார்த்தைய பயன் படுத்தாத
அது என்னமோ இந்த கவிதையோட ப்லொவ ஸ்பீடு பிரேக்கர் போட்டு தடுக்குற மாதிரி இருக்கு
நான் ராகம் இல்லா
வீணையாய் உன் நினைவு என்னும்
கம்பிகள் மட்டும் சுமந்து வாழ்கின்றேன்
"வாயில்லா வீணை" ரொம்ப நல்லா இருக்கு
என் சந்தோசம் கூட வர்ணம் இல்லா
வான வில்லாய் சில துளிகள்
மட்டும் சுமக்கும் கரும் மேகமாய்
அருமை
கைகோர்த்து நீயும் நானும்
பள்ளி சென்ற போதும் ...
சிறு மண் வீடு கட்டி
கொட்டன்குச்சியில் வித விதமாக
சமைத்து விளையாடிட்ட போதும்
நாங்க சிட்டுக்குடுவைன்னு சொல்லுவோம். அதுலதான் நம்ம கூட்டாஞ்சோறு
காலமகள் கையில்
கலந்து கரைந்திட போதும்
நான் ராகம் இல்லா
வீணையாய் உன் நினைவு என்னும்
கம்பிகள் மட்டும் சுமந்து வாழ்கின்றேன்
\\
arumai
புத்தம் புதிய தாவணி ,கஸ்துரி மஞ்சள் மணக்கும்
உன் முகம் நீ கொண்ட முதல் வெட்கம்
கன்னியென பதவி கொண்ட
அந்த நாளின் அனுபவங்கள் என்னிடம்
சொல்லி ரசித்திடஅந்த பொன்முகம்
இன்னும் அழிய வில்லையடி
அழகு வரிகள் அசீ
என் பெண்மை உணர்வுகள்
உன்னில் நான் பகிர்ந்து
கொள்ளவும் , கவலை கொண்ட
பொது சேயாய் மாறி உன் மடியில்
உறங்கிடவும் என்னவளே நீ
மீண்டும் வருவாயா???/
வருவாள் வருவாள் வெகு விரைவில்
nandri shakthi kumar
vaanga jamal anna
Rose,shakthi Navastheen
anaivarukum
rompa nandri
comments pottathiruku.
innum neeraiya comments podunga okya
meendum ungalai padutha viraivil varuvaen
hahahahhahahaha
Post a Comment