Wednesday, 23 December 2009

அக்னிக்குஞ்சு --பாகம் 2

அன்று மேகத்திற்கும் மனக்கவலை போலும் ப்ரவீனுடன் தானும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது . இன்றோடு இரண்டு நாள் ஆகிறதே ...ஏன் பாரதி ஒரு போன் கால் கூட பண்ணலையே... நான் பண்ணினாலும் போன் சுவிட்ச் ஆப் என்கிறதே ... ஒரு நாள் கூட இப்படி ஆனதில்லையே ...ஒரு வேளை என்னை நிஜமாவே விட்டு போய்விடுவாளோ ??
நான்தான் ஏதோ என்மீது கொண்ட வெறுப்பில் சொன்னேன் என்றால் நீயும் போய்விட்டாயே ...இல்லை நீ என்ன செய்வாய் நீயும் பெண்தானே ...எந்த பெண்ணுக்குத்தான் தான் தாயாகவேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்கும் . அதிலும் உனக்கு குழந்தைகள் என்றால் உயிராயிற்றே ... ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று இல்லாமல் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்வேன் என்று என்னிடம் அடிக்கடி சொல்வாயே

என்னால் ஒரு குழந்தைக்கூட தர இயலாது என்று டாக்டர் சொன்னது கேட்டு நான் உள்ளம் வெடித்து அழுதப்போது உன் கண்ணில் அரும்பிய ஏமாற்றத்தை உன் புன்னகையால் துடைத்து விட்டு உன்மடியில் எனை சாய்த்து சமாதனம் செய்தாயடி ... மீண்டும் தாய் அன்பை அன்று உன்னில் உணர்ந்தேனடி .. என்னை ஆறுதல் படுத்தி விட்டு நான் தூங்குகிறேன் என்று நினைத்து உன் தலையணையை கண்ணீரால் நனைத்ததும் நான் அறிவேன் .. என் நிலை அறிந்திருந்தும் உன்னை நான் ஏமாற்ற என் மனம் விரும்பவில்லை ...
ஒரு பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று வேறு மணம் புரிந்துகொள்ளும் ஆண்களை இந்த சமுதாயம் ஏற்று கொள்ளும் போது ஒரு ஆனால் குழந்தை பாக்கியம் தர இயலாது என்று அறிந்த பின் அந்த பெண் வேறு மணம் முடிப்பதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்..எவ்வாறு எண்ணியப்படியே சன்னல் வெளியே பார்வையை செலுத்தினான்
அங்கே ஒரு பெண் மழையில் நனைந்துக்கொண்டு குடையை தன் குழந்தைக்கு பிடித்தப்படி போய் கொண்டிருந்தாள்.. இந்த காட்சி அவனுக்கு மனதிற்கு இதமாக இருந்தது. அப்போது செல் போன் அழைக்கவே ..பாரதியாக தான் இருக்கும் என்று எண்ணி ஆசையுடன் பார்த்தான் .
அவளது போன் நம்பர் வந்ததும் இன்னும் மகிழ்ச்சியுடன் ஹேலொ...பாரதி என்றான். ஆனால் அவனுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. மறுப்பக்கம் பாரதியின் அப்பா நான் மாமா பேசுறேன்பா நம்ம பாரதிக்கு உடம்புக்கு கொஞ்சம் நீங்க உடனே கிளம்பி நம்ம GK Hospital க்கு வாங்க .என்னாச்சு மாமா பாரதிக்கு?? பயப்படுற மாதிரி ஒன்றும் பிரச்சனை இல்லப்பா நீங்க வாங்க .சரிங்க மாமா இப்பவே வாரென்.
மறுமுனையில் துண்டிக்கப்பட்ட்தும் என்னச்சு பாரதிக்கு எதாவது விபரீத முடிவு எடுத்திருப்பாளே...?? துடித்தான்
(தொடரும்)

6 comments:

இராகவன் நைஜிரியா said...

என்னங்க ஆச்சு... தலைப்பே இல்லாம போட்டு இருக்கீங்க..

படு வேகமா கதைப் போகுது.. சரியான நேரத்தில் தொடரும் போட்டு இருக்கீங்க.

அண்ணே கொஞ்சம் அலைன் பண்ணிக் கொடுங்களேன்... படிக்க இன்னும் சுவாரசியம் கூடும்.

நட்புடன் ஜமால் said...

டெம்ப்ளேட் மாற்றியாச்சு போல

வாழ்க்கையில் மாற்றங்கள் தேவைப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றது.

அண்ணன் சொன்னது போல் கொஞ்சம் அலைன்மெண்ட் பாருங்க.

மற்றபடி நல்ல ஸ்பீடு.

S.A. நவாஸுதீன் said...

தலைப்பில்லாமல் இருந்தாலும் கதை நன்றாக நகர்கிறது. மேலே பெரியவங்க சொன்னதை நானும் ரிப்பீட்டிக்கிறேன்

Anu said...

இராகவன் நைஜிரியா said...
என்னங்க ஆச்சு... தலைப்பே இல்லாம போட்டு இருக்கீங்க..

படு வேகமா கதைப் போகுது.. சரியான நேரத்தில் தொடரும் போட்டு இருக்கீங்க.

அண்ணே கொஞ்சம் அலைன் பண்ணிக் கொடுங்களேன்... படிக்க இன்னும் சுவாரசியம் கூடும்.


எதோ அவசரத்துல போட்டுட்டேங்க...
நீங்க சொன்னதுப்போல அலைன் பண்ணிடேன்..ரொம்ப நன்றிங்க..
என்னோட மொக்கை கதையை பாரடியதிற்கு
அப்புறமா நான் அண்ணன் இல்ல தங்கை பா....

Anu said...

நட்புடன் ஜமால் said...
டெம்ப்ளேட் மாற்றியாச்சு போல

வாழ்க்கையில் மாற்றங்கள் தேவைப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றது.

அண்ணன் சொன்னது போல் கொஞ்சம் அலைன்மெண்ட் பாருங்க.

மற்றபடி நல்ல ஸ்பீடு.


ஆமா பின்ன மாற்றங்கள் வேணும்ல... நன்றி பா என்னையும்
மதித்து கருத்து போட்டமைக்கு...

Anu said...

S.A. நவாஸுதீன் said...
தலைப்பில்லாமல் இருந்தாலும் கதை நன்றாக நகர்கிறது. மேலே பெரியவங்க சொன்னதை நானும் ரிப்பீட்டிக்கிறேன்

மிக்க நன்றி நவாஸ்...
வாழ்த்துகள் கவிதை போட்டியில்
வெற்றி பெற