Monday 4 May, 2009

மீண்டும் அவன் ....

உயிர் துடிக்கும் ஓசை கேட்கும்
நிசப்தமான நேரம் மீண்டும் அவன் ..
உத்திரவாதமில்லா உறவில் கலந்திட
சிலநிமிடங்கள் என்னுயிர் பருகி
என்னில் களவாடும் நோக்கில் இதோ
அவனது லீலைகள் ஆரம்பம் ....

தொடக்கத்தில் தொட்டில் பிள்ளையாய்
எனை பாவித்து சுற்றம் பார்த்து
மெதுவாய் எனை தீண்ட தொடங்கினான் ..
என் மொளனம்அவனை தூண்டி விட
வேகம் அதிகரித்தான்
மீண்டும் சுற்றம் பார்த்து என்
உடைகள் மெதுவாக களைந்து என்னில்

புன்னகை பாச்சி நாக்கில் நீர்வடிய
எச்சில் முழுங்கி என் வளைவுகளில்
கவனமுடன் ஒருகை பதித்தவாறே
மறுகையால் என் கனிதனை தன்
கைக்குள் முற்றுகை இட்டான்
எனை வென்றுவிட்ட திருப்தியில்
படிப்படியாய் அவனது என்னில் அவனது விலகல்
இதோ எனில் அவனை மீட்டு
புறப்பட ஆயுத்தம்.....
எனை வென்றுவிட்ட திருப்தியில்
என்னில் களவாடிய நிறைவில்
கையில் மாங்கனி யை ருசித்தவாறே
செல்லும் அந்த சிறுவனை மீண்டும்
எதிர்பர்தவண்ணம் தாய்மை வழிய
அசைந்தும் அசையாமல் நின்றேன் ...

((((தாய்மை பெண்மைக்குஆண்மைக்கும் மட்டும் அல்ல என்னை போன்ற மரத்திற்கும் உண்டு ..ஹா ஹா ஹா ...இது எப்படி இருக்கு ???)))))

Sunday 3 May, 2009

வல்லமை தாராயோ ....


சுற்றி அடிக்கும் புயல் காற்றில் அகப்பட்ட

சின்னஞ்சிறு பூங்கொடியாய் என் மனம் ..

உருவம் இல்லாத ஒன்று அடிக்கடி

ஓசை இல்லாமல் நடத்தும் யுத்தத்தை

.உறங்கும் கணத்திலும் என் அமைதியை

உருகொலைக்கும் தீவிரவாதியை

ஓய்த்திட நினைத்தும் முடியாமல்

தோற்று போயின என் முயற்சி கணைகள்

நான் கொண்ட நற்சிந்தனைகள் எங்கே??

சிரித்து சிரித்து சிறகடித்த என் வானம் எங்கே ??

அன்பினால் ஆட்சி புரிந்த என் அரசாங்கம் எங்கே??

நட்பினால் நான் சிறைகொண்ட என் உயிர் நண்பர்கள் எங்கே??

உள்ளதோடு உறவாடிய அந்த நாட்களும்

உயிர் அற்று போய்விட்டனவா?...

கள்ளம்கபடம் இல்லா என் மனதை -எங்கே ?

நீ என்னில் புகுந்தமையால் அறிவிப்பின்றி

கருக்கொண்ட மேகம் உதிர்த்த

கண்ணீர் துளியாய் சிதறிப்போனதுவா ???

உயிருடன் என்னை கொஞ்சம் கொஞ்சமாய்

அரிக்கும் மாயை என்னும் பேயை ஒழித்திட

வல்லமை தாராயோ