விளங்கவில்லை ...
எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ??
கரும்பாறை மனதில் சவ்வூடு பரவலாய்
கசிந்துருகும் நின் காதல் சுகமா ? சுமையா?
சுகமான சுமையா ? இல்லை சுமையாகிவிட்ட சுகமா ?
சுகம் எனில் பிரிவினில் ரத்த நாளங்களில்
உன் நினைவு முடிச்சுகள் முட்டி மோதி
சுமையாய் ஆனது ஏன் ???
சுமை எனில் உன் காதல் கொண்ட முகம்
நெஞ்சுக்குள் வந்து புரியாத சுகம் தருவதேன் ?
எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ???
உன்னை உள்ளத்தில் சுமந்ததால் சுகமா
சுகமான சுமையே ...உன்னை மனதில்
சுகமாய் என்றும் சுமப்பேன் --நீ எனை
சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் .....
8 comments:
:)
முயற்சிகள் தொடரட்டும்
சொல் தன்னிலை எய்துவதும் கவித்துவம்
ஒரு முதிர்ந்த இலை என தரை சேர்வதும் பருவம் சார்ந்தது மட்டுமல்ல நிறம் மாறுவதும் தானே !
நீ எனை சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் ...]]
அட ...
சுகமான சுமைகள். சுமையான சுகங்கள். நல்லா இருக்கு கவிதை. ஆமா இது யாருக்கு?.
@நேசன்
நீங்க ஏன் மக்கா நான் தான் ஃபர்ஸ்ட் சொல்லலை.
வாழ்த்துகள் தங்கத்தின் தங்கம்
நேசமித்ரன் said...
:)
முயற்சிகள் தொடரட்டும்
சொல் தன்னிலை எய்துவதும் கவித்துவம்
ஒரு முதிர்ந்த இலை என தரை சேர்வதும் பருவம் சார்ந்தது மட்டுமல்ல நிறம் மாறுவதும் தானே !
//ஏற்றுக்கொள்கிறேன்//
நட்புடன் ஜமால் said...
நீ எனை சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் ...]]
அட ...
// ஹா ஹா ஹா//
நன்றி ஜமால் அண்ணா..
S.A. நவாஸுதீன் said...
சுகமான சுமைகள். சுமையான சுகங்கள். நல்லா இருக்கு கவிதை. ஆமா இது யாருக்கு?.
@நேசன்
நீங்க ஏன் மக்கா நான் தான் ஃபர்ஸ்ட் சொல்லலை.
// யாருக்கும் இல்லை....
இல்லை யாருக்கோ...//
@நேசன்
நீங்க ஏன் மக்கா நான் தான் ஃபர்ஸ்ட் சொல்லலை.
குசும்பா... நடத்துங்க...
நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் தங்கத்தின் தங்கம்
நன்றி அண்ணா...
Post a Comment