வெண்பஞ்சு மேகம் தீண்டும்
நீள் நெடும் மரங்கள் சுமந்த
கானகத்தின் மடியில் தவழ்ந்திடும்
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சியாய்
வனத்தில் ஒரு சிறுவலம்...
கானகத்தாயின் தாய்பாலென வழிந்திடும்
அருவியில் குளித்து பசித்தீர
பருகிடும் மழலையாய்
விட்டொழிந்த தலைவன் காரணம்
பசலைப்படர் உடல்கொண்ட மரம்
தொட்டு ஆறுதல் சொல்லும் தோழியாய்..
மதுவுண்ட மங்கையென
காற்று காதலன் தீண்ட ராகம் மீட்டி
நடனமிடும் மூங்கில் கூட்டத்துடன்
நெஞ்சுவந்துஆடிடும் கூத்தாடியாய்.....
சுவடுகள் மாற்றி அமரும்
பதிவிரத கொள்கைக்கொல்லும்
குழவிகள் தேனுண்டு ரீங்காரமிட்டு
தழுவும் மலர்களை கண்களில்
சிறைக்கொண்டு அதன் எழிலை
மனதில் தீட்டூம் ஓவியனாய்....
இன்னும் பற்பலவாய் மாறி
இயற்கை அழகை இன்னும்
ருசித்து புசிப்பவளாய்
பயணிக்க துடிக்கிறேன்....
13 comments:
வெண்பஞ்சு மேகம் தீண்டும்
நீள் நெடும் மரங்கள் சுமந்த
கானகத்தின் மடியில் தவழ்ந்திடும்
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சியாய்
வனத்தில் ஒரு சிறுவலம்...
wow arputhamaana arambam
azhagaana varigal azeez
கானகத்தாயின் தாய்பாலென வழிந்திடும்
அருவியில் குளித்து பசித்தீர
பருகிடும் மழலையாய்
inayatra varigal intha kavithaila enakku rombaaaaaaaa pidicha lines
kavithaikku poruthamaana
azhagaana padangal kalakareenga azeez hahaha
வாழ்த்துகள் அனு
நல்ல முயற்சி
:)
shakthikumar said...
வெண்பஞ்சு மேகம் தீண்டும்
நீள் நெடும் மரங்கள் சுமந்த
கானகத்தின் மடியில் தவழ்ந்திடும்
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சியாய்
வனத்தில் ஒரு சிறுவலம்...
wow arputhamaana arambam
azhagaana varigal
/// ரொம்ப நன்றி சக்தி//
shakthikumar said...
kavithaikku poruthamaana
azhagaana padangal kalakareenga
/// நாங்களும் போடுவோம்ல...
ஹா ஹா ஹா///
நேசமித்ரன் said...
வாழ்த்துகள் அனு
நல்ல முயற்சி
// எல்லாம் தங்கள் பிராத்தனை குருவே...///
நன்றி மித்ரா...
நல்ல துடிப்பு பயணம் நலவாய் அமைய வாழ்த்துகள்.
வன வலம் நல்லா இருக்கு. படங்களைப் பார்த்தபின் தோன்றிய கவிதையோ.
kalakkare anu
நட்புடன் ஜமால் said...
நல்ல துடிப்பு பயணம் நலவாய் அமைய வாழ்த்துகள்.
// ரொம்ப நன்றி அண்ணாச்சி.எல்லாம் உங்க பிராத்தனை பா//
S.A. நவாஸுதீன் said...
வன வலம் நல்லா இருக்கு. படங்களைப் பார்த்தபின் தோன்றிய கவிதையோ.
// ஹா ஹா ஹா //
Vani said...
kalakkare anu
வாங்க வாணி.... ரொம்ப நன்றி
Post a Comment