Sunday 27 June, 2010

மௌனம்




உன் கண்ணில் வடியும் ஒற்றை கண்ணீர்
என் உயிரின் துளி என அறியாயோ ...

மௌனமாய் நீ செல்கையில் சிக்குண்டு

சிதறும் மனதின் மரண ஓலத்தை கேளாயோ ...

சில நேரம் எச்சில் இலை என எறிவதும்

சில நேரம் மயில் இறகாய் எனை போகிப்பதும்

என் மீதான உன் ராஜ்யத்தில் எனகென்ன

நிரந்திர பதவி என மொழியாயோ ??



---------------------------------------------------------------------


உன்னை அகிம்சைவாதி என்றதன் அர்த்தம்

இன்று புரிகின்றது ஆம் நீ அகிம்சைவாதிதான்

வார்த்தையின்றி மௌனமாய் எனது

அகத்தில் இம்சை செய்யும் வாதி நீ

----------------------------------------------------------------------

உன் வார்த்தைகளால் எனை உயிர்பிப்பதும்

வார்த்தையின்றி மௌனமாய் கொல்வதும்

உனக்கென்ன கடவுள் அவதாரமென நினைவோ ??

--------------------------------------------------------------------------



தேடி தேடி பார்கிறேன் வாஞ்சையாய்

எந்த அகராதியிலும் கிடைக்கவில்லை

உன் மௌனமொழிக்கான அர்த்தம்

---------------------------------------------------------------------------

உன் நெஞ்சில் வாழும் பாக்கியம் இல்லை ...

உயிர் நீத்திட விரும்புகிறேன் -அதனால்

என்னவனே மௌனமாய் இரு-ஏன் எனில்

தற்கொலை கோழையின் முடிவாம் !!!!!!!!!

7 comments:

சென்ஷி said...

ஆஹா மொளனம்!!!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ANU said...

சென்ஷி said...
ஆஹா மொளனம்!!!!

/// ஹி ஹி ஹி

ANU said...

Anonymous said...
உன்னை இப்படி படுத்துன பாவி யாரும்மா?
///யாரும் இல்லைங்கோ....//

ANU said...

Anonymous said...
ஐயோ பாவம் :(
,,,யாரு நீங்களா???

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Thamarai Selvan said...

தற்கொலை கோழையின் முடிவாம்

Aam un "மௌனம்" yennai koolai aakkivittadhu...