Saturday, 28 February 2009

நிலவே ....


நிலவே...

உனக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருகின்றதடி

அன்னை உன்னைக்காட்டி பால் ஊட்டிய

அந்த மழலை காலத்திலும்....

பாட்டி...வடை சுடுகிறாள் என்று உன்னை சுட்டி

காட்டி தோழிகளோடு ..சுற்றி திரிந்த அக்காலத்திலும்

கன்னிப்பருவத்தில் காதல் கொண்டு

உன்னை தூது அனுப்பிய அவ்வேளையிலும்

தலைவனை நான் சேர்கையில் நீ

தாளாத மகிழ்ச்சியில் வளர் பிறையாய்
ஆனா அந்த பொன் வேளையிலும்

தலைவன் வேலைநிமித்தம் எனை பிரிந்தது

தனியே நான் தவித்த நேரத்தில் நீ

எனை போல்உடல் தேய்ந்த சமயத்திலும்

உன்னில் நான் கொண்ட கோபம் காரணம்

நீ வராமல் வானம் போல்என் மனதையும்

அமாவாசையாக ஆக்கிய அந்த நாட்களிலும்

நம்முள் ஏதோ ..... இருக்கின்றது

ஆம் ....உனக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருகின்றதடி ..
( எனக்கு இப்படி தான் தோனுது உங்களுக்கு எப்படி?..சொல்லுங்க ...)





5 comments:

sakthi said...

தலைவனை நான் சேர்கையில் நீ

தாளாத மகிழ்ச்சியில் வளர் பிறையாய்
azee alagana varthaigal
arumayaga ullathu da

Anu said...

நன்றி சக்தி

நட்புடன் ஜமால் said...

சிறப்பா சொல்லி இருக்கீங்க‌

நாங்களும் பிறகு முயற்சிக்கிறோம்

ராம்.CM said...

நிலவே...

உனக்கும் azeeக்கும் ஏதோ பந்தம் இருகின்றதடி..
அவர் மனதை போன்றே உன் நிறம்.!

Anu said...

ஹா ஹா ஹா அது தான் உண்மை ராம் .நன்றி பா