Tuesday, 13 April 2010
ஒரு புன்னகையின் சிறு விசும்பல்
கண்ணீர் கொள்ள உன் கன்னத்தின் குழி கொடு
அங்கே தான் தொலைத்தேன் நம் உள்ளத்தின்
உறவுகளுக்கான வரையறைகளை...
உன்னால் பட்ட காயங்களை கண்ணீர் விட்டு கழுவ
என் கண்ணீர் ஒன்றும் புனிதம் அல்லவே ???
மஞ்சள் கயிறு ..நெற்றியில் குங்குமம்
ஒரு புடவை ...புனிதமென்றாலும்
உயிரற்ற இவைகள் எனக்குக்கொடுத்து
என்னுள் உயிர் புதைத்து சென்றாய் ..
கட்டிய கையிற்றை கேட்கின்றேன்
நீ எனக்கு மாங்கல்யமா ? இல்லை இழைத்த
துரோகத்தின் ஆசை முடிச்சுகள் சுமக்கும்
தூண்டில் கயிறா??
குங்குமத்தின் சிவப்பில் என்னால் ..
உறிஞ்சப்பட எனக்காக வாழும் உயிரின்
நம்பிக்கை குருதியின் சிவப்பை பார்கிறேன் ......
என்னால் எனது உறவுகளின் முகத்தில்
பூசப்பட்ட நம்பிக்கைதுரோக வர்ணங்களை
எப்படி போக்குவேன் ???என் உயிர் வடித்து
கழுவினாலும் போய்விடுமா ???
சுடும் நெருப்பு என அறிந்தும் உன்னில்
கொண்ட காதலில் விட்டில் பூச்சியாய் நான்,,
விட்டு ஒழிந்திட நினைத்தும் என்
வயிற்றில் ஒட்டிவிட்ட உன் ஒற்றை
உயிரை என்ன செய்வேன் ???
தவமின்றி தவறுதலாக தானாக வந்ததென
தயவின்றி கருகலைக்க நான்
தாடகை அல்லவே ....தயங்காமல் நிற்கின்றேன்
உன்னால் நான் தாரமாக ஏற்றுகொண்ட பின்னரே
தாயாகினேன் என்று ....
உறவுகள் தொலைத்து உயிர்ப்பித்த
நம் உறவு மலரும் முன்னே கருகிட்டதேன் ??
நின் கருசுமக்கும் வரம் கொடுத்து காற்றாக
நீ மறைந்திட்டதேன்??இனி எங்கணம்
நின்னை சேர்வேன் என் கணவா??
உலகம் நாளை பழிக்குமே??? சுமக்கும்
நின் சிசு நாளை நின்னை கேட்டால்
எங்கணம் பதிலுரைப்பேன் ???
துரோகத்தின் இரட்டை பிறவியென
என் பிறப்பு மண்ணில் இன்னும் பாரமே ??
உன்னை நித்தம் நினைத்துருக நான் பனித்துளி அல்லவே ...
காற்றில் கலந்து நின் சுவாசம் கலக்கும் கற்பூரம் .....
அங்ஙனமே விரும்புகின்றேன் ...நின்னோடு
நானும் காற்றாய் கலந்திடவே நின் மழலையை
என்னோடு அழைத்தபடியே ........
குறிப்பு : என்னுள் உயிராக வாழ்ந்து மறைந்த என் தோழிக்கு சமர்ப்பணம் ,,,
காதல் எந்த சாட்சியும் பார்ப்பதில்லை . .மனசாட்சி தவிர... சரியோ தவறோ
மனசுக்கு பிடித்து விட்டால் தராதரம் பார்க்க மறுத்து விடுகிறது ..அவளது காதலும் ஒரு முரண்பாடுதான் ...காற்றோடு கலந்து விட்டபின் காயங்கள் தோண்டுதல் நியாயமில்லை .....
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
:(
வாழ்வு சுடுகாட்டு சாம்பலில் குழைத்த மசியால் எழுதுகிறது சில நேரத்து விதிகளை
கனாப் பிழைத்த திருப்தியில் பருவம் இழந்து பின் நினைவுக் கூப்பாடுகளுடன்
நிகழுலகின் திராவகத்தெறிப்பில் நிறமிழக்கும் வண்ணத்துப் பூச்சிகள்
ஆன்மா அமைதி கொள்ளட்டும்
பிறகான வாழ்வை பிதற்றி அழித்தல்
பிரியத்திற்கான துரோகம். அணுகும் தூரத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் ஆன்மா கண்ணீரிலா அமைதியுறும் நட்சத்திரம் இறைத்தாற்போல் நகையொலி பரவ வாழ்ந்து காட்டுதல்
இன்னும் இங்கே இருந்து களித்த நெகிழ்வைத்தாராதா?!
கொண்டதுயர் தொடர்ந்து சுமக்கும் சுமைதாங்கிகளால் இந்த பூமியின் பாரம் கூடுமே ஒழிய
திரளும் கண்ணீர்ல் கடலுப்பில் பிறக்கும் மேகங்களில் ஒன்றும் கூடுமே ஒழிய
சின்ரெல்லாக்களின் ஆன்மா சிலிர்க்காது
:)
வருந்துகிறேன்...
aruthal solla varthai illai kanmani
amaithi kol
Yennudaya aalndha anuthabangal,
Post a Comment