கல்லரையில் பூத்த மலரொன்று
கன்னி அவள் கூந்தல் சேரக்கொண்ட மோகம்
இங்கனமே.உன்னூடான என்
காதலும்.......
கடல் நீரில் கலந்து விட்ட என்
ஒற்றை கண்ணீர் துளி தேடி
தர சொல்கிறாய்..உன் மனதை
அறிந்து கொள்வதை காட்டிலும்
அது எனக்கு எளிதென்பதை அறியாமல்..
உனக்கென நான் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடிகளும் உன்னோடான
நினைவுவிதைகளை பதியம் போடும்
நெஞ்சமதில்..என் கண்களும்
நீரை வார்க்கும் சொட்டு பாசனமாய்.....
நீங்காத காயமாய் நீ கொடுத்த அந்த
ஒற்றை முத்தம்..கனவென்றாலும்
என் உதடுகளில் ஒட்டிவிட்ட உன்
இதழ்களின் சிவப்பு சொல்லும் உன்மீதான
காதலதை......
உறவுகளை சுட்டிக்காட்டி என் காதலதை
நீ நிராகரிக்கும் வேளைகளில் என் உயிர்
வேரை உன் சொற்கள் அறுத்தெடுப்பதை
நீ அறிவாயா?....
உன் மீது மதம் கொண்ட என் காதல்
உன்மதமதை பார்க்கவில்லையே..
அங்கனம் பார்த்து வர அது வியாபாரம்
இல்லையடி தோழியே.....சாதி காட்டி
சாகும் வரம் கொடுத்தாய்..
சுடும் பாலையில் பாரிஜாதமாய்
உன் நட்பு...உப்பு நீரின் மீதுக்கொண்ட
தாகத்தினால் என் கண்ணீரை பருகும்
முலைபால் பருகும் மழலை போல...
உனக்கென நான் வளர்த்த என் சுவாசமும்
மெல்ல முதுமை அடைந்து மரணத்தை
சுவாசிக்கும் நீ எனை நீங்கும் அக்கணமே...
10 comments:
nallaa irukku anu sogam thaanga mudiyalai varigalil....
வாசிக்கும் போது வலி தொற்றிக் கொள்கிறது...காதல் வலி விரைவில் கரைந்து விடும் கவலைவேண்டாம்...
ரொம்ப சோகமா இருக்கு...
அச்சோ பாவம் யார் பெத்த புள்ளையோ
இப்படி அழறாளே!!!!!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா
முடியலடி உன் சோகம்
Kadhalil uruguvathu sugamthan -neengal.
Athan vali kodumai - avan.
வலிகள் பகிர்தலில் பரிசத்தின் உணர்வை பெற்றுக்கொள்கிறது
கருத்துரைத்தமைக்கு நன்றி அனைவருக்கும்
இயற்பெயர் இப்படி வைப்பவர்கள் காதலிக்கதெரியாதவர்கள்
அல்லது
காதல் என்பதை தெரியாதவர்கள்
Post a Comment