Thursday 27 August, 2009

நிழல் துறந்து நிஜம் நாடி.....

சுற்றிலும் சுகந்தம் நிறைந்த அறை
மனம் ஒத்தும் ஒப்பனைக்ககாவும்
வெளிவந்த சொந்தங்களின் கண்ணீர் துளிகள்
பேசதுடித்தும் முடியாமல் ஊமையாகிவிட்ட
வார்த்தைகளின் சுவடுகள் ..
வர்ணம் கலைந்த வானவில்லாய்
உருக்குலைந்து விட்ட என்னவளின்
வழிந்தொழுகும் உயிர் துளிகள்


இறுதியாய் அணிவிக்கப்பட்ட
புத்தம் புதிய வெண்ணிறாடை மட்டும்
உடைமையாய் கொண்டு இதோ ..
என் பயணம் புதிய உலகை நோக்கி
வழி நெடுகிலும் சுற்றார் உற்றாரும்
நண்பரும் பகைவரும் சூழ்ந்து வர
எழுத்அறிவித்து அறிவு புகட்டிய
பள்ளிகூடம்,நண்பர்களுடன் அரட்டை
அடித்த பசுமை நிறைந்த இடங்கள் ,
உயிர் அசைத்த என்னவளின் சிரிப்பலைகள்
நிறைந்த பேருந்துதடம் எல்லாம்
இன்று என்னை வழியனுப்பும் அமைதியாய்

இதோ வந்து விட்டது ஆண்டியும்
அரசனும் ஒன்று கலந்து விட்ட சமுத்துவபுறம் .
சுற்றிலும் இருள் சூழ தனிமையையே
சுவாசமாய் கொண்டு இருக்க
எனக்காய் எந்த ஒப்புதலும் இன்றி அளிக்கப்பட்ட
ஆறடி நிலம் ...மனதில் எதோ எதிர்பார்புடன்
அமைதியாய் என் நித்திரை ஆரம்பம் ....








7 comments:

sakthi said...

ஏன் இத்தனை சோகமாய் ஒரு கவிதை

sakthi said...

ஆண்டியும் அரசனும் ஒன்று கலந்து விட்ட சமுத்துவபுறம் .
சுற்றிலும் இருள் சூழ தனிமையையே சுவாசமாய் கொண்டு இருக்க எனக்காய் எந்த ஒப்புதலும் இன்றி அளிக்கப்பட்ட ஆறடி நிலம் .

இதானே எல்லாருக்கும் சொந்தம்

நட்புடன் ஜமால் said...

படங்களைப்போலவே

வரிகளிலும் ஒரு கருமை தெரிகின்றது

மரணம் பற்றிய வரிகள் - நல்ல ஒரு சிந்தனை.

பாலா said...

"சுற்றிலும் சுகந்தம் நிறைந்த அறை"





சாவு வீட்டுக்குள்ள சுகந்தம்லாம் வீசுமா?
என்னதான் ஊது பத்தி , மாலை,பன்னீர் எல்லாம் போட்டு வச்சாலும்
ஒருவித துர்நாற்றம் இருந்துட்டுதான் இருக்கும்



நல்லா இருக்கு மா

S.A. நவாஸுதீன் said...

போன வாரத்திலேர்ந்து எல்லாரும் ஒரே சோகமாவே எழுதுறீங்களே என்ன விஷயம்? இருந்தாலும் கவிதை நல்லா இருக்கு

shakthikumar said...

அற்புதம் அஸீஸ் ஏமனிடம் யாசிகிரேன் எனக்கும் இந்த வரம் தா.
இன்பம் என்பார் சிலர், துன்பம் என்பார் பலர், இம்மயும் மருமயும்
எனை நீங்க துன்பம் என்பார் சிலர் விழித்தெழ மனமில்லா கனவுகளின்
காதலராய் உறங்கி விட ஆசைதான் காலம் நிறைவேற்றும் எல்லா
மனிதர்க்கும்.

Anu said...

vanga nanbarkale ....

enathu kavithayai padithu comments potta anaivarukum nandripa ..

sorry konjam late achuthu reply panna vaelai