அவனும் அவளுமாய் நிறைந்த உலகில்
அவனும் அவளும் ஒன்றாய் மாறிவிட்ட
அர்த்தநாரியின் மனித உருவங்கள்
கருணைகொண்டு அழைத்திடும் தாய் அன்பு
தொலைத்து தடுமாறும் மழலைகள் .
உணர்வுகள் மறுத்து உணர்ச்சிகளுக்கு
பலியாகும் பாவைகள் ..
இறைவன் படைப்பில் விளங்க முடியா
புதிரான புதிராய் மாறிவிட்ட
புதுமை மனிதர்கள் ..
சிறகுகள் தொலைத்து விட்டு
திசைகள் அற்ற உலகில் பாதை
தேடி பறந்திடும் வண்ண பறவைகள்
எந்த மொழி கொண்டும் கவி புனைந்து
நிரப்ப முடியா சோகம் சுமந்த
வெற்றிடங்கள்....
அன்பு மழை பொழிந்திட நாளும்
தவம் செய்யும் கரிசக் காடுகள்
மனிதம் மறந்த உருவங்களில்
மனிதம் தேடும் முயற்சியில் தன்னை
தொலைத்திட்ட துருவமற்ற காந்தங்கள் ...
(தொடரும் )