யார் நீ
யார் இவள்??
என்னுள்ளே எனை அறியாமல் நுழைந்திட்டவள்
என்னுடல் சுமக்கும் மனம் பறித்து நீ
நானாகிய எனை நீக்கி நீயாகினாய்-எனினும்
நீயாகிய உனை சுமப்பது என்னுடலாயிற்றே ..
நீயாகிய நான் தேடியது அன்பு உறவுகளை
அங்கனம் பழகிய உறவுகளுக்குள் சிறிதும்
இரக்கமின்றி உண்மைதனை புதைக்க
கற்றுக்கொடுத்தது நானாகிய நீ ...
சில நேரம் நானாகவும் பல நேரம் நீயாகவும்
என்னுடல் நீ ஆட்கொள்ளும் நாடக மேடையென
நித்தம் நீ ஆடினாய் ஆனந்த கூத்து ....
நானாகிய நான் உடல் தொலைத்து ஓலமிடுதல்
உன் நடனத்தின் இசை கூட்டுவதாய் ஒப்பனை செய்தாய் ..
அந்த ஒற்றை நள்ளிரவில் தான் மெல்ல
வீறுகொண்டது நானாகிய நான் ...
நீயாகிய நானை என்னுடல் நீக்கி
அடிப்பெயர்த்து வீசி எரிந்தது...
சொட்டும் குருதியுடன் நீ மெல்ல
உயிர் நீக்குவது கண்டு நான் கண்ணிருடன்
வழி அனுப்பி வைக்கிறது ,,,,,,
மீண்டும் நானாகிய நான் என்னுளே
புகுந்து நான் நானகினேன் ...நீயாகிய நான்
விட்டு சென்ற கால்தடங்களை என் மனதில்
இருந்து அழிக்கும் நோக்கில் அதன் பக்கம்
நெருங்கி பார்க்கின்றேன் ஒவ்வொரு கால் தடங்களின்
அடியிலும் ஒட்டி கொண்டிருக்கின்றது சில நேச உள்ளங்களின்
உண்மையான அன்பும் ,பரிமாற்றங்களும் ..உன்னால்
இழந்த அவ்வுள்ளங்களுக்காக கரைகின்றது என் உயிரும் ...
எனை இழந்து நீயாகிய நான் வாழ்ந்த நாட்களின்
கல்லறையின் மேல் கண்ணீர் வடிகின்றது
நானாகிய நான் !!!!!!!!!!!!!
14 comments:
romba nalla iruku... onkala elam touch pana mudiyathu pa too great...
நல்லா இருக்குங்க.. :)
thanks mouse
சிவாஜி சங்கர் said...
நல்லா இருக்குங்க.. :)
ரொம்ப நன்றி சிவாஜி
வருகைக்கும் கருத்துக்கும்
/அந்த ஒற்றை நள்ளிரவில் தான் மெல்ல
வீறுகொண்டது நானாகிய நான் ...
நீயாகிய நானை என்னுடல் நீக்கி
அடிப்பெயர்த்து வீசி எரிந்தது...
சொட்டும் குருதியுடன் நீ மெல்ல
உயிர் நீக்குவது கண்டு நான் கண்ணிருடன்
வழி அனுப்பி வைக்கிறது ,,,,,,//
அழகான ஆழமான வரிகள்...
good one.. rendu murai padichathan puriythu
சங்கவி said...
/அந்த ஒற்றை நள்ளிரவில் தான் மெல்ல
வீறுகொண்டது நானாகிய நான் ...
நீயாகிய நானை என்னுடல் நீக்கி
அடிப்பெயர்த்து வீசி எரிந்தது...
சொட்டும் குருதியுடன் நீ மெல்ல
உயிர் நீக்குவது கண்டு நான் கண்ணிருடன்
வழி அனுப்பி வைக்கிறது ,,,,,,//
அழகான ஆழமான வரிகள்...
.... nandri sangavi ,,unga varuakikkum karuththukkum
LK said...
good one.. rendu murai padichathan puriythu
//// Thanks a lot for u r comments LK & welcome
அருமைங்க அனு நல்லாயிருக்குங்க!!!
sakthi said...
அருமைங்க அனு நல்லாயிருக்குங்க!!!
//// rompa nandringa shakthi ma ///
வந்தேன் அந்த படத்தை பார்த்தவுடன் கவிதை படிக்கும் தைரியத்தை இழந்துவிட்டேன் இதயத்தில் மெலிதான நடுக்கத்தோடு இந்த கமெண்ட்..கவிதை படிக்கலை அனு..
அய்யோ என்ன தமிழரசி அக்கா நான் நீங்க பயபடுற மாதிரி எழுதவில்லை ..
தைரியமா படிங்க
Post a Comment