Monday, 29 June 2009
சிரிக்கமட்டும்
Friday, 26 June 2009
நித்திரை ....
எனைமறந்து புது உலகத்தில் பயணம் ....
மீண்டும் மீண்டும் ஏனோ நாடுகின்றேன் ... ஏனென்றால்
நித்திரை ....
சொர்கத்தின் திறவுகோல் ...
நுழைவு கட்டணம் இல்லை
அனுமதி இலவசம் ...
"""நித்திரை கொண்டு வாழ்வரே வாழ்வர்
மற்றவர் குற்றம்புரிந்தவராவார் ....""
இது நம்ம நித்திரைஆனந்தா சுவாமிகளின் பொன்வாக்கு ....
( இதை படிச்சிட்டு கண்டிப்பா உங்க கண்ணையும் நித்திரை கொள்ளை கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் நித்திரையை தேடி ......இதோ என் பயணம் ...)
Monday, 22 June 2009
ஹைக்கூ ...
கைக்கும் வாய்க்கும்
இன்று ஊடல்
உண்ணா விரதம் ....
----------------------------------------------------------------------------
ஐந்தே ரூபாய் தான்....
லக்ஷிமி , திருப்தி ஏழுமலையான்
புகைப்படங்கள் ... வெறித்த பார்வையில்
பசிமயக்கத்தில் ஒட்டு துணியுடன்
ஏழை வியாபாரி ..
--------------------------------------------------------------------------
குழந்தை பாக்கியம் வேண்டி
தொட்டில் கட்டிய மரத்தின் அடிவார
குப்பைதொட்டியில் வீசி எறியப்பட்ட
இறந்த ஆண் குழந்தை ....
---------------------------------------------------------------------------------
Wednesday, 17 June 2009
போராளிகள் ..
விரும்பி மனதொன்று பட்டும்
சில நேரம் கடமைக்காகவும் ...
உறவு உருவாகிட உட்சம்
காணும் போராட்டம் நமக்குள்
அவ்வப்போது ........
முத்து விளைவிக்கும் முயற்சியில்
தொடர்ந்து தோல்வி அடைந்தும்
நானும் நீயும் தீவிரமாய் போராடும்
தீவிரவாதிகளாக ....
மூச்சடக்கி என்னுள் செலுத்திய
ஒவ்வொரு துளிகளும் உதிரமாய்
உருமாறி கரைந்து போகும் நேரம்
என் உயிரும் உருகி ஓடும் .....
ஒன்றாய் இருவரும் உருவாக்கிய
(குழந்தை ) கனவை என் அனுமதின்றி
கலைக்கும் கொடூர ஊடகமாக நான்.....
வாரிசு வேண்டி போக இன்னும்
எதாவது ஆலயம் உண்டா என
வரைபடம் தனில் கோலமிடும்
என் விரல்களும் விக்கித்து
ஏதும் இல்லை என்ற முடிவில்
பெருமுச்சு விடும் .
தண்ணீர் கனவுகள் சுமந்த படி
கண்ணீர் வடிக்கும் என் விழிகளும்
தீரா சுமை கொண்ட என் மனதும்
உடன்படிக்கை கொண்டு இந்த
உறவுகள் எல்லாம் தொலைத்து
மோட்சம் அடைய வேண்டி
ஆசை துறந்த துறவியாக மாறிட
சொல்லும் .மெதுவாக எண்ணங்கள்
அவ்வழியே சென்றுவிடும் .....
முடிவுடன் நான் வெளியேறும் வேளையில்
சுவற்றில் புன்னகையுடன் நோக்கும்
குழந்தையின் சித்திரம் கண்டு சுக்கை
போல் சிதைந்து ஓடும் என் சிந்தனைகளும்...
இன்னும் எத்தனை காலம் இந்த
உயிர் பிழியும் சோதனைகள் என்ற
வேதனையுடன்
இதோ மீண்டும் அடுத்த போராட்டத்திற்கு
ஆயுதமனவர்களாக .......
Sunday, 14 June 2009
Friday, 12 June 2009
எதிர்பார்ப்பு ...
பிரிதலால் கொண்ட தேடலின்ஒவ்வொரு
மணித்துளிகளும்எதிர்பர்ப்புகளாய்
என் இதய அறையில்ஒன்றின் மேல் ஒன்றாய் ...
எனையும் அறியாமல் படிந்தும்
அரித்து கொண்டிருக்கும் படிகங்கலாய் .....
தினமும் என் கனவுகளின்
நான் வளர்த்த உன்மீதான காதலின்
நரம்புகளை துளைத்து உயிர்
குடிக்கும் ஒட்டுண்ணிகளாக.......
மரணத்தின் சுகம் தரும் உன்னை நீங்கிய
ஒவ்வொரு நொடிகளும் .....
காத்திருத்தலில் முடிவாக உன்வருகை
பார்த்தவுடன் அன்னையை கண்ட
குழந்தையாய் உன்னில் பரவசமாய்
ஒட்டி உறவாடிட நிமித்தம் .
மனதில் படிந்திருந்த ஒவ்வொரு
எதிர்பார்ப்புகளும் ஒன்றை ஒன்று
முந்தி வெளி வர நினைத்து
தம்முள் போராடும் வேளையில் ...
நீயோ என்னை பார்த்தும் பாராமல்
சுவற்றில் ஒட்டி இருந்த
தொலைக்காட்சியில் மனம் தொலைக்க.....
அமைதி காத்திருந்த என் ஒவ்வொரு
எதிர்பார்ப்புகளும் தயக்கமின்றி
தற்கொலை தீவிரவாதிகளாக
உருமாறி வார்த்தை அனல்
அணுகுண்டுகளை சுமந்தவண்ணம்
உன் மீது மோதி வெடித்து சிதற ....
வலிதாங்காது வேதனையுடன் நீ
அமைதியுடன் என் மீது பார்வைதனை
செலுத்த .....
உன்மீதான என்னுடைய கோபத்தின்
தாக்கம் சில நொடிகள்தான் ...
வலிசுமந்த உன் சுவாசம் பட்டு
பேசாமல் கண்ணீருடன் வழியனுப்பும்
என் கோப அரக்கனையும் தான் ......
போராட்டத்தின் விளிம்பில் நம்முள்
மையான அமைதி நிலவ..
கண்ணீர் சுட்ட என் கன்னங்களில்
ஒத்தடம் கொடுக்கும் நிமித்தம்
உன் இதழ்கள் பட்டதும் ,,,
பீறிட்டு வரும் கண்ணீரில்
என் எதிர்பார்ப்புகளும் சூரியன்
தரிசனம் கொண்ட பனித்துளியாய்
கரைந்து மறைந்து போனது .....
மொழி இருந்தும் மொழி இன்றி பேச
தொடங்கும்உன் எதிர்பார்புகளுடன் என் மனமும்..
இதோ என் கோபத்தின் கல்லறையில்
சிறு மொட்டின் பூக்கும் போராட்டம்.......
Tuesday, 9 June 2009
ஹைக்கூ ....
காதல் தோல்வியால் உயிர் நீத்தன
பட்டு புழுக்கள்
திருமண பட்டாக மறுபிறவி ...
Monday, 8 June 2009
மனிதாபிமானம் கிலோ எத்தனை ரூபாய்????
அறிந்தோ அறியாமலோ அன்னையும் ஈன்றதால்
மனிதனாக பிறந்து விட்டோம் மண்ணில் ....
மலைஜாதி மக்கள் என பெயரும் பெற்று கொண்டோம் .
பாசியையும் ஊசியையும் விற்கும் எங்கள்
குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் புழுவை
போல் பாவிக்கும் உயர்ந்த மனிதர்கள்
இவர்கள் இகழ்ச்சியால் சிதைந்தது
எங்கள் பிஞ்சுகளின் நெஞ்சங்களும் ....
இயற்கை அன்னை மடியில் ஒன்றி வாழும்
எம்மை அடிக்கடி உரசி பாக்கும் சில
நாகரிக கோட்டான்கள் ...உயிர் பறிக்கும்
முயற்சியில் அயரமால் உழைக்கும்
உத்தம புத்திரர்கள் ..
மலையில் பிறந்ததால் மக்கள் இல்லை
மாக்கள் என நினைத்து சூறையாடும்
செல்வசீமான்கள் ... மாக்களுக்கும்
இதயம் இருக்கின்றதே பசிக்காமல்
புசிக்க எண்ணாதே ...ஆறறிவு படைத்த
மனிதனே இன்னும் எத்தனை உயிர்
குடித்தால் உன் பசி அடங்கும் ???
எங்கள் குடில்கள் எரித்து எங்கள் வாழ்கையை
கொன்று சமாதியாகி எங்கள் கனவு கல்லறையின்
மேலே உங்கள் தொழிற் சாலை கட்டிட அஸ்திவாரம் மிடும்
மனிதன் எனப்படும் கண்ணில் தோன்றும் அசுரர்களே
கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதை
தவறாக நெஞ்சில் கொண்டு எங்கள் மக்களை
கொன்று நட்சத்திர விடுதியில் ஓய்யாரமாய்
விருந்து உண்ணும் மாமிச பிண்டங்களே
நாங்களும் மனிதர்கள் தான் . இன்னும் எத்தனை
நாட்கள்தான் இந்த குருதி குடிக்கும் கொடுர தாகம் ???
உங்களுக்கான எனது ஒரே கேள்வி
மனிதாபிமானம்
எங்கு கிடைக்கும் கிலோ எத்தனை ரூபாய் ???
( நேற்று செய்திகள் பார்த்த போது கொட்டங்கி என்னும் கிராம மலைவாழ்
மக்கள் குடில்கள் தொழிற்சாலை அமைப்தற்காக எரிக்க பட்டது )
Tuesday, 2 June 2009
நானே நான் தான்
உங்களுக்கு ஏன்இந்த பெயர் வந்தது ,உங்கள் பெயர் உங்களுக்கு பிடிக்குமா ?
என் பெயர் மட்டும் இல்ல எல்லா பெயரும் எனக்கு பிடிக்கும் ..
பெயரில் என்ன இருக்கிறது ???/
*கடைசியாக அழுதது ?
இன்று சமைக்கும் போது வெங்காயம் uritha நேரம் ..
* உங்க கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா ?
ஆமாம் என் கையெழுத்து நன்றாக இருக்கும் ( நான் இப்படித்தான் என்னில் சொல்லி கொள்வேன்) ஹா ஹா ஹா
*பிடித்த மத்திய உணவு ?
சாம்பார் சாதம் .மோர் சாதம் .( மீன் வறுவல்)
நீங்க வேறு யாருடனாவது உடனே உங்க நட்பை வச்சுக்குவீங்களா ?
யாராக இருந்தாலும் நட்புடனே எனது உரையாடல் தொடங்கும் . பகைவர் என்றாலும் நட்புகொண்டாடி அவர் நட்பை வாங்கிட ஏங்கும் ஒரு ஜீவன் நான் .
கடலில் குளிக்க பிடிக்குமா இல்லை அருவியில் குளிக்க பிடிக்குமா ?
எனக்கு அருவியில் குளிக்க பிடிக்கும் .அதை விட ஓடுகிற ஆற்றில் எதிர்நீச்சல் அடிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும் . ( அதன் சுகமே தனிப்பா)
*முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள் ?
கண்கள் தான் ( கண்கள் மனதின் நிலையை காட்டும் மாய கண்ணாடி ஆச்சே? )
*உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடிச்ச ,பிடிக்காத விஷயம் ?
நாட்டமை ........ கேள்வியை மாற்றி கேளு ( ஹா ஹா ஹா )
இந்த விசயத்துல என்னோட பதில் பாலா பதில்தான் .( பாதி பாதியாக பங்கு போட வேண்டாமே )..
*முதலில் ஒருவரை பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள் ?
கண்கள் தான் ( கண்கள் மனதின் நிலையை காட்டும் மாய கண்ணாடி ஆச்சே? )
*உங்க சரி பாதிகிட்ட உங்களுக்கு பிடிச்ச ,பிடிக்காத விஷயம் ?
நாட்டமை ........ கேள்வியை மாற்றி கேளு ( ஹா ஹா ஹா )
இந்த விசயத்துல என்னோட பதில் பாலா பதில்தான் .( பாதி பாதியாக பங்கு போட வேண்டாமே )..
*யார் பக்கத்துல இல்லாம இருக்கறதுக்கு வருந்து ரீங்க ?
அம்மா பக்கத்தில் இல்லைன்னு ரொம்ப ஏங்கியது உண்டு .
அப்புறம் நட்பினில் என்னை மகிழ வைத்து பின் ஆழ துயரில் என்னை ஆழ்த்தி புன்னகையுடன் சுவற்றில் புகைப்படமாக மாறிவிட்ட என் தோழி
* இதை எழுதும் போது என்ன ஆடை அணிந்திருக்கிறீர்கள் ?
பிங்க் கலர் டாப்ஸ் , கிரீம் கலர் ஜீன்ஸ் .
* என்ன பார்த்து /கேட்டு கொண்டிருக்கிறீர்கள் ?
யமுனை ஆற்றிலே ..ஈர காற்றிலே.....
( மனதை வருடும் பாட்டுல )
*வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன நிறமாக மாற ஆசை ?
வானவில்லின் நிறம்
பிடித்தமணம்?
மழை வந்தவுடன் வீசும் மண்வாசனை
*நீங்கள் அழைக்கும் பதிவரின் பெயர் அவரிடம் பிடித்த விஷயம் ,அழைக்க காரணம் ?
நான் அழைக்க விரும்பும் பதிவர் சக்தி குமார் .அவர்கிட்ட பிடிச்சது அவரோட கோபம் . அவரோட கவிதைகள் ரொம்ப சிறப்பானதாக இருக்கும் . சமீபத்துல இன்னும் சில நாட்கள் என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.
உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்கு பிடித்த பதிவு ?
எனக்கு பாலாவோட எல்லா கவிதையும் பிடிக்கும் குறிப்பா'''உயிர் குடித்தல் ''
''கடைக்குறள்(ல்) '' இந்த இரண்டு கவிதையும் என்னை மறக்க செய்த மந்திர பெட்டகங்கள் .
*பிடித்த விளையாட்டு ?
பாண்டி ஆட்டம்.கபடி
இப்பவும் விளையாட நான் ரெடி நீங்க ??? ஹா ஹா ஹா
எப்படிப்பட்ட திரைப்படங்கள் பிடிக்கும் ?
சூர்யவம்சம் ,மனதில் உறுதி வேண்டும் , புவனா ஒரு கேள்விகுறி
முகவரி . பாலசந்தர் படம் எல்லாமே பிடிக்கும்
கடைசியாக பார்த்த திரைப்படம் ?
தாய் மேல் ஆணை .(ஜெயா டிவி ல பார்த்தேன் )
*பிடித்த பருவகாலம் ?
இலை உதிரும் காலம் பூக்கள் கொண்டாடும் வசந்த காலம்
நிழலின் அருமை காட்டும் கோடைகாலம்
பிறவிகொண்ட பலன் உணர நான் நனையும் மழைகாலம்
எல்லாமே எனக்கும் பிடிக்கும் .
*உங்க டெஸ்க்டாப்பில் உள்ள படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள் ?
தினமும் ..
*பிடித்த/ பிடிக்காத சப்தம் ?
குழந்தையின் முனங்கல் .
குயில் கூவும் சத்தம் , காக்காவின் அழைப்பு முதல் குழாயடி சண்டை வரை
எல்லாமே நான் ரசித்ததுண்டு
பிடிகாதது ஆம்புலன்ஸ் சத்தம் தான்
*வீட்டை விட்டு சென்ற அதிகபட்ச தொலைவு ?
துபாய் ..
உங்களுக்குள் ஏதாவது தனித்திறமை ?
ஹா ஹா ஹா இருக்கு ..ஆனா நானே சொன்ன நல்லா இருக்காதே
( கண்டுபிடி கண்ணா கண்டுபிடி ..)
உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் ?
உண்மைக்கு மாறான அனைத்தும்
உங்களுக்குள் இருக்கும் ஒரு சாத்தான் ?
கோபம் தான் .
இந்த பதிவை தொடர என் நண்பர் சக்திகுமாரை அன்புடன் அழைக்கிறேன்
.மேலும் என்னை அழைத்தமைக்கு என் நண்பர் பாலாவுக்கு நன்றி ...