Wednesday, 22 April 2009

நினைவு ....

தளர்த்தி விட்ட கூந்தலில் அவனது நெடி ...
கண்கள் மூடி முகர்கின்றேன்..என்னுள் நிரப்பும் முயற்சியில் ..
குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்
என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்
மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்
வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்
உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்
வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்
கண்ணீர் துளிகளாய் ...
உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய
கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்
படிந்த கண்ணீரின் கறைகள்...

10 comments:

shakthikumar said...

உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய
கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்
படிந்த கண்ணீரின் கறைகள்...
azhagaana karpanai azeez

Anonymous said...

கண்ணீர் புரிந்த அளவு காதலை வேறு யார் புரிய முடியும் உள்ளம் திருடியவர் உயிரையும் திருடி இருந்தால் தெரியாதே இந்த விழி நீர் வலி.....தலையணையே துணை இல்லையேல் இங்கு பல கண்ணீர் ஆறுகள் அல்லவா ஒடும்...காதலின் நிறைவு வழிந்தேடியதை சொன்ன விதம் எதார்த்தம்...உங்கள் கவிதை எல்லாம் உள்ளத்தில் ஊடுருவி என் வலியும் உணர்த்தி உயிர் தந்து விடுகிறது,,,உண்மை காதல்

பாலா said...

தளர்த்தி விட்ட கூந்தலில் அவனது நெடி ...
கண்கள் மூடி முகர்கின்றேன்..என்னுள் நிரப்பும் முயற்சியில் ..
குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்
என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்
மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்
வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்
உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்
வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்
கண்ணீர் துளிகளாய் ...
உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய
கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்
படிந்த கண்ணீரின் கறைகள்...

அனு

இதவிட காதல வேற சிறப்பா சொல்லிட முடியாதும்மா
பின்னீட்ட போ
யப்பா முடியல

பாலா

Anu said...

shakthi kumar said...
உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய
கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்
படிந்த கண்ணீரின் கறைகள்...
azhagaana karpanai azeez

22 April, 2009 1:16 PM

roampa nandri shakthi kumar

Anu said...

தமிழரசி said...
கண்ணீர் புரிந்த அளவு காதலை வேறு யார் புரிய முடியும் உள்ளம் திருடியவர் உயிரையும் திருடி இருந்தால் தெரியாதே இந்த விழி நீர் வலி.....தலையணையே துணை இல்லையேல் இங்கு பல கண்ணீர் ஆறுகள் அல்லவா ஒடும்...காதலின் நிறைவு வழிந்தேடியதை சொன்ன விதம் எதார்த்தம்...உங்கள் கவிதை எல்லாம் உள்ளத்தில் ஊடுருவி என் வலியும் உணர்த்தி உயிர் தந்து விடுகிறது,,,உண்மை காதல்

THAMILRAZI ....N KAVITHAIKU KAVITHAYAI PARISU THANTHAMAIKU NANDRI ....

Anu said...

sayrabala said...

இதவிட காதல வேற சிறப்பா சொல்லிட முடியாதும்மா
பின்னீட்ட போ
யப்பா முடியல
sonnathu nee thaana..soll soll soll n bala????..
thanks bala

ராம்.CM said...

மனதைத் தொடுகிறது....

வாழ்த்துக்கள்.

RAMYA said...

நல்லா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!

காதலின் வெளிப்பாடு மிகவும் சிறப்பா இருக்கு உங்களின் எழுத்துக்களில்!

cheena (சீனா) said...

அன்பின் அசீஸ்

அருமை அருமை - காதலைக் கவிதையாக்கிய விதம் அருமை
நல்வாழ்த்துகள்

MaximImages said...

Close-up of tears coming from woman eyes stock photo © MaximImages - stock photos in style