Tuesday, 28 April 2009
தேர்தல் நையாண்டி
தேர்தல் என்றால் என்ன ?? pathu வரிகளுக்கு மிகாமல் பதில் அளி???
தேர்தல் ஐந்து ஆண்டுக்கொருமுறை
நடைபெறும் குலுக்கல் சீட்டு - இங்கே
வெற்றி பெற்றவர்கள் சூறை ஆட
அனுமதிக்க படுவர்
தேர்தல்-(பதவி ) ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து
ஓடும் மெகா சீரியல் ...இதை போட்ட
மக்களும் கண்ணீர் வடிய வடிய
பார்பார்கள் ஆவலுடன் நல்முடிவை தேடியே
தேர்தல் என்பது பகல் கனவு .... காணும்
நம் கண்களுக்கு நல்லது நடக்கும் என்று
பொய்யாய் தோன்றும் கானல் நீர்
Saturday, 25 April 2009
மோகத்தீ ...
அந்த மழை நாளில் நம் பார்வைகள் உரசி
மனதில் பற்றிய தீ பொறியானது எனது
உணர்வுகளை தோற்கடித்து உணர்ச்சிக்கு
புதிதாய் அடைகலம் கொடுத்ததும் ஏனடா???
என்னில் நீ மூட்டும் மோகதீ தாளாமல் உருகும்
என் இளமையும் சொல்லாமல் மெதுவாக
வேர்வையாக மாறி கொஞ்ச கொஞ்சமாக மாய்கின்றதே ...
உன் மீதான தேடலின் காரணம் உன் காதல் சுமந்த
கடிதம் எடுத்து நெஞ்சோடு வாரி கட்டிக்கொண்டேன்
உன்னில் கொண்ட ஆசைக்காரணம் என் முச்சு அனல்பட்டு
கடிதம் கொண்ட வரிகளும் வலி தாளாமல் ஓலமிட்டு
காய்ந்த சருகுகளாய் உதிர்ந்து விட்டதடா ...
என் மனதிற்கும் உடலிற்கும் உண்டான ஒப்பந்தம்
உன்னால் ஓய்ந்து எல்லை தாண்ட பார்கின்றது
புல்வெளியில் பனித்துளி சேர்த்து கடலாகும் முயற்சி
உன்னில் என் தவிப்பை வித்திட நினைப்பது ....
Wednesday, 22 April 2009
நினைவு ....
கண்கள் மூடி முகர்கின்றேன்..என்னுள் நிரப்பும் முயற்சியில் ..
குளிரூட்டபட்ட அறையில் நினைவு தீயின் கதகதப்பில்
என்னுளே கொஞ்சம் கொஞ்சமாக அவனது ஊடுருவல்
மீள தெரிந்தும் மீளவிருப்பம் இன்றி என் மனமும்
வெட்கமின்றி இசைந்து வரவேற்கும் ... பின் உட்சத்தில்
உன் நினைவு என்னில் நிறைந்து முட்டியதால்
வழி இன்றி என்னை விட்டு வழிந்து ஓடும்
கண்ணீர் துளிகளாய் ...
உறக்கம் இன்றி உன் நினைவில் இரவோடு உறவாடிய
கதைகள் விடிந்த பின் சொல்லும் என் தலையணையில்
படிந்த கண்ணீரின் கறைகள்...
Tuesday, 21 April 2009
காத்திருகின்றேன்..
காத்திருகின்றேன் ..... உன்
உதாரிசமான பார்வையும் ..உன்
சுடு மொழியையும் உட்கரிக்க
மழைதுளி வாங்கிகொள்ளும்
பூமி போல....
கடிதேறியப்பட்ட என் விரல் நகங்களும்
என் விழி பாச்சிய கடிகார முட்களும்
முறுக்கப்பட்ட என் சுடிதாரின் துப்பட்டாவும்
மறைக்காது முறையிடும் என் மனதவிப்பை ...
உன்னில் நான் செலுத்திய புன்னகைகளை
உன் கோபத்தீயில் போசிக்கிட்ட போதும்
மீண்டும் மீண்டும் உன் கண்கள் நோக்கியே
என்னை தள்ளி விட்டு வெட்கமின்றி
பயணிக்கும்
உன் வருகை எண்ணி எண்ணி என்
இதயமும்துடிக்கும் நிமிடங்களை
கடன் வாங்கியபடியே ....
ஹைக்கூ ...
கிடாய் நேர்ச்சை
வாரிசு பிறந்தது...
வாயில்லா ஜீவன் உயிர் நீத்தது....
(அய்யனார் கோயிலில் நேந்துகிட்ட படி பழி கொடுக்கப்பட்டது )
Monday, 20 April 2009
புலம்பல்
என் நெருங்கிய நண்பர் ஒருத்தர் தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு அழகான
கவிதை போட்டிருந்தார் .அது இதுதான் ....
"இரவு தொலைக்காட்சி செய்தி
இலங்கைப்போர் பொது மக்கள் பலி
" உச்"ரிமோட் உயிர்த்தெழ
"மானாட மயிலாட "இன்னொரு சேனலில்"
படித்ததும் மனதிற்கு வேதனையாக இருந்தது ..இன்று நம்மில் பலரது நிலைமையும் அதுதானே ?? யாருக்கோ வேதனை என்றால் நமக்கு அது ஒன்றும் பெரிதாக தோன்றுவதில்லையே ??.. வீணான பொழுது போக்கு விஷயங்களில்திருப்பதி கொள்ளும் நாம் ஏன் நம்முள் ஒருவன் மரண வலி அனுபவிக்கும் போது நமக்கு அது சாதாரண நிகழ்ச்சியாகி விடுவதுமேன் ?? நம்முள் மனிதாபிமானம் எங்கே போனது ?..ரோஜாவை பார்க்க பழகி விட்ட நம் கண்களில் முட்கள் தெரியாமல் போய்விட்டதே
இலங்கையில் தினம் தினம் நுற்றுக் கணக்கில் மனிதாபிமானம் இன்றி உயிர் பூக்கள் கரிக்க படுகின்றதே .அவர்கள் செய்த பாவம் தான் என்ன? கொடுர விலங்குகள் கூட பசி எடுத்தால் தான் இன்னொரு விலங்கை வேட்டை ஆடும் .ஆறறிவு கொண்ட விலங்கை விட கேவலமாகி விட்டதே நம் நிலைமை .. " அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது " ஐயோ... எங்களுக்கு என் இந்த மனித பிறவி கொடுத்தாய் இறைவா.. என்பதுதான்இலங்கையில் ....இன்றைய ஒவ்வொரு மனிதனின் புலம்பல் ...புலம்பல்கள் தொடர்கதையாய் இருந்தாலும் எங்கள் காதுகளில் கூத்தாடிகளின் ஒலகுரல் ஒலிக்கும் போது அவர்களின் அவலக்குரல் கேட்பதில்லை கேட்டாலும் அதை நாம் விரும்பவும் இல்லை . என்னாயிற்று ...நாம் மனிதர்கள் என்பது மறந்து மரித்து போனது ஏன்? ..
இளைய சமுதாயமே ..இனியாவது ஏழுவோம்.. பண்பற்று போய்கொண்டிருக்கும்
கேளிக்கைகளில் மதிமயங்கி விடாமல் .. நம்மில் ஒருவன் படும் வேதனை துடைக்க போக்க முயற்சி செய்வோம் ...
Sunday, 19 April 2009
தேர்தல் நாள்
பகுத்தறிவு இருந்தும் கூட"நாங்கள் ஏமாளிகள் என்று
ஒப்புகொள்வதற்கான அனுமதி சீட்டுதான் எங்கள் ஓட்டு
ஓட்டு போடும் அத்தருணமே விரலில் பூசும் கரியமை
எங்கள் நம்பிக்கை முகத்தில்பூசிய கரியமை என்று நீங்கள்
என்னவோ மறைமுகமாக உணர்த்திட போதிலும்
கள்ளையும் பாலாக எண்ணப் பழகிக்கொண்டோம்
தேர்தல் நாள்
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை அரங்கேற்றப்படும்
அழகிய அற்புதமான நாடகத்தின் முதல் நாள்
அரிதாரம் பூசியப்படியே உங்கள் பிரச்சாரம் தொடங்கும்
ஒப்பனைகள் கலைந்துவிடாது ஓய்யாரமாக உங்கள்
வாக்குகளை எங்கள் காதுகளில் தேனிசையாக பாச்சுவீர்கள்
எங்கள் அறிவு கண்களில் உங்கள் ஆசை மொழிகள் கொண்டு
தூவி ..மயக்கம் முறை செய்வீர்கள் ..பின்பு
அழகாக நடைபெறும் உங்கள் மகுடம் சூட்டும் விழா
மதி இருந்தும் இலவசங்களுக்காக மதி மயங்கும்
நாங்கள் இருக்கும் வரை உங்கள் நாடகம்
இன்னும் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் ....
------------------------------------------------------------------------
அம்மாவா? அப்பாவா? இல்லை நீயா? நீங்களே முடிவு செய்யுங்கள்
அரிதாரம் பூசும் நாடக நவரசமணிகள் தான் இன்றையா வேட்பாளர்கள் ..இவர்களது நாடகம் அன்றாட வாழ்கையிலும் தொடர்ந்து வரும் அவல நிலை ?? நான் தெரியாமல் கேட்கின்றேன் ஏன் நம்மில் ஒருவன் முதல்வராக வந்தால் இந்த நாடு அழிந்து விடுமா ??நாம் எல்லோரும் குடிமக்கள் தானே அவர்களுக்கு இருக்கும் உரிமை நமக்கும் இருக்கின்றதே ..எப்போதும் அம்மாவும் அப்பாவும் தான் மாறி மாறி வர வேண்டுமா? இனியாவது யோசித்து பார்க்கலாம் .நெஞ்சில் நேர்மை ..கண்ணில் கருணை கொண்ட ஒரு வாலிபன் கூடவா இல்லை நம்மில் ???புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதி வாக்கின் படி பழமைகள் களைந்து புதிய எண்ணத்திற்கு ஒரு புது வசந்த காலத்திற்கு போக முயல்வோம் ...முடிவு உங்கள் கையில் நண்பர்களே ....
குறிப்பு : என்னிடம் என் நெருங்கிய நண்பர் சொன்னார் தேர்தல் பற்றி எதாவது பதிவு போடுன்னு ...எனக்கு அரசியல் தெரியாதுங்க ..எதோ உளறி விட்டேன் ...
தவறு இருந்தால் மன்னிக்கவும் ..
Saturday, 18 April 2009
தாலி வேலியா?? வேதனையா?
பெண் பார்க்கும் படலம் முதலே தொடங்கி விடுகின்றது ..இவர்களின் ஆணவ அதிகாரம் .ஏன் என்றால் அவர்கள் மாப்பிளை வீட்டராம் .ஆண் பிள்ளை யை மட்டும் எந்த தாயாவது பதினோரு மதம் சுமந்து இருக்கின்றாளா ??.. இதில் வேதனை க்குரிய விஷயம் என்னவென்றால் பெண்வீட்டரும் எதோ பாவிகள் போல அவர்கள் முன் பல் இளித்து நிற்பதன் காரணம் எனக்கு இன்னும் புரியவில்லை . கூட்டத்தில் ஒருத்தர் ஆரம்பிபார் பொண்ணை வர சொல்லுங்க பார்க்கலாம்னு ஏதோ மாட்டு சந்தையில் மாட்டை பார்க்க வந்தவர் போல ..அப்புறம் பெண்ணிடம் தனியா பேசனும் ..இது மாப்பிளையின் வேண்டுகோள் .அப்புறம் பொண்ணுக்கு
சமைக்க தெரியுமா?? ஏம்மா கொஞ்சம் நடந்து காட்டு இது போன்ற பொதுவான ஆனால் கட்டாயமான கேள்விகள் கேட்கப்படும். அதன் பிறகு மாட்டுக்கு மன்னிக்கவும் பெண்ணிற்கு தொகை பேசி முடிக்கப்படும் .இங்கே மட்டும் பொருளை ஏற்று கொள்பவர்க்கு பணம் கொடுக்கப்படும்.
திருமண நாள் .......
இது பெண்ணிற்கு அதிகார பூர்வமாக விலங்கிடும் நாள். தாலியும் அணிந்திடுவேன் உன்னை தாரமாக ஏற்று கொள்ளுவேனு தாலி கட்டிடுவாங்க ..அது பெண்ணிற்கு பூட்டப்படும் பாதுகாப்பு வேலியா இல்லை ..அது நாசுக்காக கட்டப்படும் மூக்கணாங்கயிரு. அதன் பிடி எப்போதும் அவன் கையில் ..நான் உங்களை கேட்கின்றேன் இந்த தாலி அவசியம் தானா?. பெண்களுக்கு திருமணம் ஆனதின் அடையாளம் தானே அப்படி என்றால் திருமணமான ஆணின் அடையாளம் என்ன ? அவர்களும் தாலி அணிவதுதனே நியாயம் . ஆனால் பெண்ணிற்கு திருமணமாகி விட்டது என்று அடையாளம் இடும் நீங்கள் உங்களை மட்டும் அதிலேருந்து மறைத்து கொள்வதேன்
சொல்லுங்கள் ஆண்வர்க்கமே ??. ஒரு உலோகத்துக்கு கொடுக்கும் மதிப்பு இன்று மனித மனங்களுக்கு எங்கே இருக்கின்றது .
மணவாழ்வில் காலடி வைக்கும் அந்த கணமே மெட்டி என்று ஒரு சிறிய விலங்கு பூட்டுகிறான் . அடி பேதை பெண்ணே ..நாணமுடன் அதையும் சுமந்து கொள்கின்றாயே ..திருமண நாளில் பெண்ணிடம் ஒப்பந்தம் வாங்குவது எதற்கு ?
இன்று முதல் பெண்ணாகிய நான் உன் அடிமை என்று திருமண ஒப்பந்தம் என்ற பேரில் அடிமை சாசனம் எழுதி வாங்கி விடுகின்றனர் .
வரதட்சணை......இதில் மட்டும் சரியாக இருப்பார்கள் பணம் வசூல் செய்பவர்கள் . இஸ்லாமிய சமுகத்தில் ஒரு சட்டம் இருக்கின்றது அதாவது திருமணம் முடிக்க விரும்பும் ஆண் மணபெண்ணிற்கு மஹர் என்று சொல்லக்கூடிய ஒரு தொகை அது பணமாகவோ தங்கமாகவோ இருக்கலாம் அதை கொடுத்து அப்பெண்ணை
மணம் முடிக்கும் சட்டம் இருக்கின்றது .மேலும் இஸ்லாம் வரதட்சணை வாங்குவதை கடுமையாக தண்டிக்கிறது .ஆனால் எத்தனை பேர் அப்படிஇருக்கிறார்கள் ??? வரதட்சணை வேண்டாம் என்று சில பேர் வருவது உண்டு . அட இப்படி கூட மனிதர்கள் உண்டா என்று என்ன தோன்றும் ஆனால் உண்மை என்ன வென்றால் இவர்கள் இப்படி வரதட்சணை வேண்டாம் என்று மொழிவது வசதியான குடும்பத்தில் தான் . வரதட்சணை பேசி ..நேரடியாக
பிச்சை வாங்குவரும் உண்டு இப்படி வேண்டாம் என்று மறை முக பிச்சை வாங்குவரும் இருக்கிறார்கள் . எதற்கு இந்த வேதனை ?? திருமண வாழ்க்கை
மரண வாழ்கையாக மாறியதும் ஏன்? மாந்தர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுதுவோம என்ற பாரதி காலம் முதல் இன்று வரை எங்கள் அடிமை சாசனம் தொடர்கதையாகா...
நீங்கள் சொல்லலாம் பெண்கள் இன்று எட்டாத வெற்றி இல்லை என்று ..அப்படி
வெற்றி பெற்றவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கின்றதா? எத்தனை வேலைக்கு போதும் பெண்கள் எல்லா சுமைகளையும் சுமந்த படி மனதிற்குள் வெந்தபடி வாழ்கின்றனர் .சுமைகள் என்றும் பெண்களுகே ....இதில் இளைப்பாற நிழல் தேடி குடும்பத்திற்குள் வந்தால் அய்யா பெரியோர்களே கொஞ்சம் எங்களை முச்சு விட விடுங்கள் ..உங்கள் பழமை பேசி எங்களை உயிருடன்
சமாதி ஆக்குவதை இனிமேலாவது நிறுத்துங்கள் வாழ விரும்புகின்றோம
எங்களை வாழ அனுமதியுங்கள் இன்னும் வசை பாடி வஞ்சனை செய்வதை நிறுத்துங்கள் ........( புலம்பல் தொடரும் ...)
குறிப்பு : (நான் இந்த பதிவில் எல்லா ஆண்களையும் குற்றம் சாற்ற வில்லை ..ஒரு சில ஆண்கள் நல்லவர்களே .....)
Thursday, 16 April 2009
நாங்கள் ஏழைகள்
சுவரொட்டியில் ஆப்பிள் படம்
ஏக்கத்தில் தடவி பாக்கிறன்
ஏழை சிறுவன் ......
பெருமாளுக்கு பால் அபிசேகம் ...
பட்டினியில் அழுவதற்கும் சக்தி இன்றி
பரிதவிக்கும் குழந்தையின் அவல குரல் ....
பிரபல நடிகையின் பிறந்த நாளாம்
கிழிந்த கோவனமுடன்
தங்க சரிகையில் பட்டு நெய்து கொண்டிருந்தான்
எங்கள் நெசவாளி
இன்று மீனாக்ஷி அம்மன் திரு கல்யாணமாம்
மனதிற்குள் வெம்பி அனல் தெறிக்கும்
பெருமுச்சு விட்டபடி முதிர் கன்னி
குலை தள்ளிய வாழை வெட்டி எறியப்பட்டது
இறுதி நாள் எதிர்பார்த்து கண்ணீருடன்
வாழும் சில பெற்றோரை சுமந்தபடி
முதியோர் இல்லம் ..
"அறியாமையை நீக்கி அறிவு கண் திறப்போம்"
"அனைவருக்கும் கல்வி"
சுவரொட்டி ஓட்டும் குழந்தை தொழிலாளி !!!
இன்று மழை வரக்கூடாது .....
மனதில் ஆயிரம் வேண்டுதலுடன் பீந்த
குடிசை வழியே வானம் நோக்கி
கும்பிட்டபடி ஏழை தாய் ..
பண்ணையார் வீட்டில் புனித நீராட்டு விழா
தெரு அடைத்து பந்தல் ..வீதி எங்கும்
வண்ண ஒளிமய விளக்குகள் ..
சிம்மணி ஒளிக்கும் வழி இன்றி என் வீடு
ஏழை எங்கள் வாழ்கையில் பஞ்சம்
பஞ்சமின்றி எம்மை விட்டு போக
நெஞ்சம் இன்றி கொஞ்சம்
வலியுடன் வாழ அனுமதிக்கும் ...
Wednesday, 15 April 2009
அமிலியா ....
அவுங்களோட பிறந்த நாளைக்கு அங்கே உள்ள ஒரு ஏழை வீட்டுக்கு போய் அங்கேருந்த குழந்தைக்கு இனிப்பு வழங்கியது மட்டும் இல்லாம அந்த குழந்தையோட படிப்பு செலவையும் ஏத்துகிடாங்க. இது தான் அவுங்க பண்ணிய நல்ல காரியம்
அமிலியா ....
அன்பு என்ற சொல்லுக்கு உண்மையான வடிவமானவள். தேன்மொழி கொண்டு பேசும் அழகிய பாவை என்று தான் இது வரை எண்ணி கொண்டிருந்தேன் . சமீபத்துல அவளிடம் அரட்டை அடித்து கொண்டிருக்கும் சமயம் அவளது பிறந்த நாளை அவள் மறக்க முடியாத நாளாக மாற்றியது தெரிய வந்தது . அவுங்க பண்ணியது நல்ல விஷயம் .. அப்படி என்ன பண்ணி இருப்பானு கேட்கிறேங்க தானே ?. அது என்னவா இருக்கும்னு நீங்க சொல்லுங்க . சஸ்பென்ஸ் தாங்க முடியலையா ..கொஞ்சம் காத்திருங்க என் அடுத்த பதிவு வரை ...(சும்மா கவிதை கதை எழுதினா எப்படி ??கொஞ்சம் புலன் விசாரணை பண்ணி பாருங்க ..) ஹீ... ஹீ ...ஹீ .
Monday, 13 April 2009
கோபம் ஏனடி...?
Sunday, 12 April 2009
தாயாவது எப்போது
Saturday, 11 April 2009
சொல்லாமல் போன காதல்
Wednesday, 8 April 2009
கார்மேகமே ....
சில இரத்த துளிகள் ...
இரண்டு வீட்டிலும் சம்மதிச்சு சேர்த்து வச்சாங்க ..
கல்யாணம் ஆனதும் தேன் நிலவு கொண்டாட ..ஊட்டிக்கு போனாங்க ..
அப்போதான் அந்த கொடுரம் நடந்தது ...
கார்த்திக் தன்னோட மனைவிக்கு இளநீர் வாங்க ரோடு கிராஸ் பண்ணிய போது
அவன் மீது லாரி மோதி துடித்து இறந்து விட்டான் .தன் கண் முன்னே நடந்த தன் ஆசை காதலனுக்கு கொடுமையை கண்டு பிரியா உறைந்து போனாள்
நாட்கள் ஓடியது ..பிரியா கார்த்திக் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தாள் . ஒரு நாள் அவளது அம்மாவின் கனவில் ஒரு பெண் வந்தாள் . உன் மகளின் புடைவையில் அவளது கணவன் இறந்த தருணம் அவனது இரத்தம் துளிகள் இருக்கின்றது .உடனே அதை கழுவி விடு என்றாள். அவளது அம்மா அதை பெரிதாக எண்ணவில்லை . அவளது அப்பாக்கும் அதே கனவு அவரும் பெரிதாக எண்ணாமல் இருந்து விட்டார் . அடுத்த நாள் ப்ரியாகும் அதே கனவு ..
ஆனால் ப்ரியாக்கு மனதில் பயமா இருந்தது அதனால அவ அந்த புடவை யை கழுவி போட்டாள் ..ஆனால் சில துளிகள் இருந்தது .. மறுநாளும் அதே கனவு .. ப்ரியா மீண்டும் கழுவி போட்டால் ஆனால் இரத்தம் போகவில்லை ..முன்றாவது முறையாக அதே பெண் வந்து சொன்னாள்.நீ முழுவதுமாக இரத்தம் போக கழுவ வில்லை ..மீண்டும் கழுவி போடு ..இது தான் நான் கடைசியா சொல்லுறேன் ..இனி நடப்பது நடக்கும் என்று சொன்னள்.ப்ரியா எவ்வளவு முயன்றும் அந்த இரத்தம் போகவில்லை .
ஒரு நாள் யாரும் இல்லா நேரம் கதவு தட்டும் ஓசை கேட்டது ..திறந்து பார்த்தள்.. ஏதிரே கனவில் வந்த அந்த பெண் இருந்தாள். அதிர்ச்சியில் நின்ற ப்ரியாவிடம் ஒரு பார்சல் கொடுத்தாள். ப்ரியா அதை திறந்து பார்த்தா உள்ளே வெள்ளை நிறமும் நீல நிறமும் கலந்த பவுடர் இருந்தது ... ஒன்னும் புரியாமல் ப்ரியா அந்த பெண்ணை பார்த்தாள்.அப்போது அந்த பெண் ....
நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா
நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா..
நிர்மாஆஆஆஆஅ
என்று பாட்டு பாடி இதை போட்டு கழுவு இரத்தம் காணாம போய்டும்னு சொல்லிட்டு போய்டுவா...
எப்படி நம்ம கதை ....சுட்ட கதை சுட சுட ...ந அருமை நண்பர் சாய்ரா பாலா வுக்கு
சமர்பனம் செய்றேன்
Tuesday, 7 April 2009
சக்தி
உயிரே .....சக்தி.......
உன்னை பார்த்தாலே வரும் பக்தி.....
உன் பின்னே என் மனமும் சுத்தி ....
உயர பறக்குதே வனையும் எத்தி...
உன் வார்த்தையால் வீசாதே கத்தி....
உன்னை மணந்தால் அடைவேன் முக்தி .
ஹைக்கூ ..
என் மனதில் காட்டுத்தீ ...
குழந்தை பேறு இல்லாதவள்
நூறு மழலைகளுக்கு தாய்
(மழலை பள்ளி ஆசாரியை ...)
கைநாட்டு போடுபவன்
கையில் கணினி பற்றிய
விளக்க ஏடு ......
(பேருந்து சிறு புத்தக வியாபாரி ).
Monday, 6 April 2009
நீங்காத நினைவு ....
நிலவுக்கு துணையாக இவன்
நிலத்தில் துயிலாமல் .....உன்னால்
நீங்கா தனிமை துகில் உடுத்தி தவிகின்றேன்
நீண்ட இந்த இரவும் இரக்கம் இன்றி என்
நித்திரையை சுறாடி வென்றேன் உன்னை என
நிம்மதியாக எனை பார்த்து சிரித்தவண்ணம்
நின்று என் உள்ளத்திரையில் தோன்றும் உனது
நிழல் படம் கண்டு உவகையால்
நிழலாடும் உன்னவள் உன் நிஜமாகி
நீடூழி வாழ்க என வாழ்த்தி செல்கின்றதடி ....
Saturday, 4 April 2009
புரிதல்...
புரிதல் கொண்ட பிரியம்
பிரிவை கொள்ளாது.பிரிந்த
பிரியம்கூட புரிதலால்
பிரியாமல் நெஞ்சில் பிரியம் கொள்ளும்
பிரிதல் புரிந்து கொண்டவர்கில்லை
பிரிந்தும் புரியாமல் இருக்கும் பெண்ணே
பிரிவை காட்டிலும் புரிதல் கடினமடி
பிரிந்த பின் புரிந்து கொண்டேன் என் மீதான உன்
பிரியமான புரிதலை .....நீ எனக்கு என்றும்
புரியாத புதிராய் நெஞ்சில் வாழும்
பிரியாமான புரிதலடி ....
(ஹா ஹா ஹா ....என்ன புரிஞ்சுதா?)
Friday, 3 April 2009
பொய்யல்ல ....
கருத்தில் விளைந்த எண்ணங்கள் பொய்யாகலாம்
காகிதம் கொண்ட நம் எழுத்து பரிமாற்றங்கள் பொய்யாகலாம்
கணினி வழி நம் மனங்கள் சந்தித்த நாட்கள் பொய்யாகலாம்
பாரதி ஒரு கேள்விகுறி (பகுதி நான்கு )
கண் இமைக்காமல் அவளையே நோக்கியவன் சிரித்துக்கொண்டு அநியாயத்துக்கு சின்ன பொண்ணா இருக்கியே... ஓகே இந்த ஆறு வருசமா காத்திருந்தேன் இன்னும் எத்தனை வருஷம் காத்திருக்க வேண்டுமோ ???...ஆனா கண்டிப்பா உனக்கு என் மேல விருப்பம் வரும் அது வரை நான் காத்திருபேன் கண்ணே .... மெல்லிய புன்னகை புரிந்தவள் பிரவீன் நான் எப்போ காலேஜ் போகணும் ..அடிபாவி ...முதல் இரவில் கேட்குற கேள்விய இது ??? நம்ம முதல் இரவு வித்யாசமா இருக்கணும்னு நினைத்தேன் இப்படி ஒரு வித்தியாசமா இருக்கும்னு நினைகல ..சரி பாரதி நாளைக்கே காலேஜ் ல சேர ஏற்ப்பாடு செய்றேன் ஓகே யா... இப்போ நிம்மதியா தூங்கு .... ரொம்ப நன்றி பிரவீன்.... நன்றிலாம் மொத்தமா வாங்கிக்குறேன் மேடம் ... சிரித்தான் மனதில் வழியோடு .
ஒன்றும் அறியாதா குழந்தை போல் பாரதி தூங்குவது கண்டு அவள் தலையை தடவி கொடுத்து ஐ ..லவ் யு பாரதி ...நீ எனக்கு குழந்தையடி ...நிட்சயமா என்னை நீ புரிஞ்சுகுவ ..எனக்கு நம்பிக்கை இருக்கு.. அதுவரை ஐ வில் வெயிட் பார் யு ....
குறிப்பு :: நண்பர்களே ....இந்த கதை தொடரனுமா ?? வேண்டாமா ?? எல்லாம் உங்க விருப்பதை கொண்டுதான் நானும் உங்க கருத்துக்காக வெயிட் பண்ணுறேன்
ஹா ஹா ஹா ....( என்னை அடிக்கனும்னு தோணுதா ??)
Thursday, 2 April 2009
பாரதி ஒரு கேள்விகுறி (பகுதி- மூன்று)
அழகிய மலர்கள் ஒன்று சேர்ந்து மாலையா மாறிவிட மணநாளும் வந்தது.
சுற்றங்கள் மகிழ பாரதி திருமதி ஆனாள். முதல் இரவு அன்று கனவுகள் வந்து கண்ணில் மின்ன பிரவீன் பாரதியின்
வரவை எதிர்பார்த்து இருந்தான். பூவுகே பூக்கள் சூடி அழகு தேவதை போல் அலங்கரித்து இருந்தார்கள் பாரதியை ..அவள் மனதிலோ போன வாரம் அய்யனாருக்கு நேர்ந்து பக்கத்து வட்டில் ஆசையா வளர்த்த கிடா பலிகொடுத்த நினைவு வந்தது. என் நிலைமையும் அதுதானே ..கண்ணீர் துளிகள் ரோஜாபூ கன்னம் அதில் கோலம் இட அறையில் நுழைந்தாள் .
மனதில் பட்டாசு வெடிக்க கண்களில் அந்த பிரகாசம் தெரிய வா பாரதின்னு பிரவீன் வரவேற்றான் .தென்றல் காற்று கூட இன்று அனலாய் அடித்து அவளுக்கு கண்களில் தீ பொறி தெறிக்க பிரவீன் மீது கோப பார்வை விசி பின்பு அமைதியாக
சன்னல் வழியே எட்டி பார்த்த நிலவை நோக்கினால் .பாரதி உனக்கு என் மேல கோபம் இருக்கும் ஆனா எனக்கு வேறு வழி தெரியல நீ எனக்கு வேணும் .உன்னை நான் ரொம்ப விரும்புறேன் பாரதி ..நீ தான் என் மனைவின்னு
என் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உன்னை நெனைச்சிட்டு இருகேன். நிறுத்துங்க ... அது எப்படிங்க உங்க மனசை மட்டும் பார்க்க தெரிஞ்ச உங்களுக்கு எனக்கும் மனசு இருக்கு நு தெரியாம போச்சுதா? நான் உங்ககிட்ட தனியா சொன்ன பிறகும் நீங்க எனக்கு செய்தது துரோகமா இல்லையா ???.பாரதி.... ப்ளீஸ் பிரவீன் என்னை விட்டுருங்க உங்க அனைவராலும் விளையாட பட்ட பொம்மைதான் நான் .. என்னால உங்க கூட குடும்பம் நடத்த முடியாது ..நாம பிரிஞ்சுடலாம் பிரவீன் .....
இப்படி ஒரு வார்த்தையால் தன் இதயம் நொறுங்கும் என நினைகதவனாய் நெஞ்சில் வார்த்தை அம்பு பாய்ந்த வலியோடு பாரதி...என்னைபொறுத்தவரை நீ சந்தோசமா இருக்கணும் அதனால நான் ஒரு முடிவுஎடுத்துட்டேன் .... (மீண்டும் வருவாள்)
Wednesday, 1 April 2009
பாரதி ஒரு கேள்விகுறி ( பகுதி - இரண்டு )
இது அத்தையின் கேள்வி . அவளை இன்னைக்கு மட்டும் இல்லை என்றும் பிடிக்கும் எனக்கு ...இது பிரவீன் விசிய வார்த்தை கணைகள். இது பாரதிக்கு மனதில் அமிலம் விசியது போல் இருந்தாலும் அவனது காந்த பார்வைகள் எதோ பண்ண தான் செய்தன அவளுக்கு ... அந்த மின்சார தாக்கத்தை தொடர விரும்பாதவளாய் ..பிரவீன் உங்க கிட்ட கொஞ்சம்
தனியா பேசனும் ..ஓகே பாரதி தாரளமா பேசலாம் .. வண்ண மலர்கள் கேள்வி குறியோடு பாரதியை பார்க்க பிரவீன் எனக்கு உங்களை எனக்கு பிடிச்சிருக்கு .. நான் ரொம்ப கொடுத்து வச்சவன் பாரதி . ஆனா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை பிரவீன்..என்ன சொல்லுற பாரதி புரியல .. ஆமா எனக்கு கல்யாணம் வேண்டாம் ..நான் படிக்கணும் பிரவீன் ..தப்பா எடுத்துக்க வேண்டாம் உங்களுக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைப்பா. ஏதும் பேசதவனாய் அவளை உற்று நோக்கியவன் ..ஓகே ..உன் விருப்பம் ..போலாமா ..எல்லோரும் வெயிட் பண்ணுறாங்க .. என்ன இரண்டு பெரும் என்ன முடிவு பண்ணி இருகிங்க கல்யாண நாள் பார்க்கலாம்னு பிரவீனின் அப்பா கேட்டார் ..ஓகே அப்பா உடனே ஒரு நல்ல நாள் பாருங்க.. நாங்க ரெடி நு சொல்லவும் என்ன பாரதி தனியா என்ன சொன்ன இப்படி அவசரபடுறான் அத்தை கிண்டல் செய்ய ஏதும் பிடிகாதவள் கொஞ்சம் என்னோட முடிவையும் சொல்லலாமா ???... எல்லோரும் புரியாத புதிராய் பாரதியை பார்த்தார்கள் .....( மீண்டும் வருவாள்)