என்னுடன்
நீ இருந்தாய் கவிதையானது
எனை பிரிந்தாய் கதையாகியது
Monday, 21 June 2010
Thursday, 27 May 2010
தற்(கரு)க்கொலை
எனக்காக உன்
உயிர் கொடுப்பேன் என்றாய் அங்கனமே
என் வயிற்றில் உயிர் கொடுத்தாய் ..
கொடுத்திட்ட உயிரை தொலைக்க சொல்கிறாயே
பிழை என்று அழித்திட கருவறை ஒன்றும்
கரும்பலகை அல்லவே??
தாய் பால் குடிக்கும் முன் கள்ளிப்பால்
கொடுக்க சொல்லும் நின் கருணை என்ன சொல்வேன்
என்னுடல் சுவைத்திட்ட நின் காதல் பொய்யாகலாம்
என்னுள் சுவாசிக்கும் நின் மழலை மெய்யன்றோ?
ஜீவன் கொன்று என் ஜீவிதம் காண சொல்கிறாய்
மழலைக்கு ஏங்கியவளிடம் கருவறுக்க சொல்லுதல்
எங்கனம் நியாயம் ???நின் வாழ்வு எண்ணி எனை
பாவியாக்குதல் முறைதானோ?
உரிமையாய் கேட்டிட என்கொன்றும் இல்லை
முறையான முகவரி ....நின்னிடத்தில்
முறையின்றி வந்ததால் முத்தாய் தவழ்ந்திடும்
நின் மழலையின் மூச்சடுக்குதல் என்னால்
முடிந்துடுமோ ??
ஊரார் பலித்திடும் முன்னே என் ஜீவன்
உறைந்திடும் மண்ணில் நிம்மதியை நாடி
தவறொன்றும் செய்திடவில்லை நாங்கள்...
எனினும் விரைவில்
மரணத்தின் வாசம் சுவாசிக்கும்
ஆசையில் நொடிகளை கடக்கும்
என்னுடன் என் மழலையும்
Tuesday, 13 April 2010
ஒரு புன்னகையின் சிறு விசும்பல்
கண்ணீர் கொள்ள உன் கன்னத்தின் குழி கொடு
அங்கே தான் தொலைத்தேன் நம் உள்ளத்தின்
உறவுகளுக்கான வரையறைகளை...
உன்னால் பட்ட காயங்களை கண்ணீர் விட்டு கழுவ
என் கண்ணீர் ஒன்றும் புனிதம் அல்லவே ???
மஞ்சள் கயிறு ..நெற்றியில் குங்குமம்
ஒரு புடவை ...புனிதமென்றாலும்
உயிரற்ற இவைகள் எனக்குக்கொடுத்து
என்னுள் உயிர் புதைத்து சென்றாய் ..
கட்டிய கையிற்றை கேட்கின்றேன்
நீ எனக்கு மாங்கல்யமா ? இல்லை இழைத்த
துரோகத்தின் ஆசை முடிச்சுகள் சுமக்கும்
தூண்டில் கயிறா??
குங்குமத்தின் சிவப்பில் என்னால் ..
உறிஞ்சப்பட எனக்காக வாழும் உயிரின்
நம்பிக்கை குருதியின் சிவப்பை பார்கிறேன் ......
என்னால் எனது உறவுகளின் முகத்தில்
பூசப்பட்ட நம்பிக்கைதுரோக வர்ணங்களை
எப்படி போக்குவேன் ???என் உயிர் வடித்து
கழுவினாலும் போய்விடுமா ???
சுடும் நெருப்பு என அறிந்தும் உன்னில்
கொண்ட காதலில் விட்டில் பூச்சியாய் நான்,,
விட்டு ஒழிந்திட நினைத்தும் என்
வயிற்றில் ஒட்டிவிட்ட உன் ஒற்றை
உயிரை என்ன செய்வேன் ???
தவமின்றி தவறுதலாக தானாக வந்ததென
தயவின்றி கருகலைக்க நான்
தாடகை அல்லவே ....தயங்காமல் நிற்கின்றேன்
உன்னால் நான் தாரமாக ஏற்றுகொண்ட பின்னரே
தாயாகினேன் என்று ....
உறவுகள் தொலைத்து உயிர்ப்பித்த
நம் உறவு மலரும் முன்னே கருகிட்டதேன் ??
நின் கருசுமக்கும் வரம் கொடுத்து காற்றாக
நீ மறைந்திட்டதேன்??இனி எங்கணம்
நின்னை சேர்வேன் என் கணவா??
உலகம் நாளை பழிக்குமே??? சுமக்கும்
நின் சிசு நாளை நின்னை கேட்டால்
எங்கணம் பதிலுரைப்பேன் ???
துரோகத்தின் இரட்டை பிறவியென
என் பிறப்பு மண்ணில் இன்னும் பாரமே ??
உன்னை நித்தம் நினைத்துருக நான் பனித்துளி அல்லவே ...
காற்றில் கலந்து நின் சுவாசம் கலக்கும் கற்பூரம் .....
அங்ஙனமே விரும்புகின்றேன் ...நின்னோடு
நானும் காற்றாய் கலந்திடவே நின் மழலையை
என்னோடு அழைத்தபடியே ........
குறிப்பு : என்னுள் உயிராக வாழ்ந்து மறைந்த என் தோழிக்கு சமர்ப்பணம் ,,,
காதல் எந்த சாட்சியும் பார்ப்பதில்லை . .மனசாட்சி தவிர... சரியோ தவறோ
மனசுக்கு பிடித்து விட்டால் தராதரம் பார்க்க மறுத்து விடுகிறது ..அவளது காதலும் ஒரு முரண்பாடுதான் ...காற்றோடு கலந்து விட்டபின் காயங்கள் தோண்டுதல் நியாயமில்லை .....
Sunday, 11 April 2010
காதலின் இயற்பெயர் மரணமாம்.....
கல்லரையில் பூத்த மலரொன்று
கன்னி அவள் கூந்தல் சேரக்கொண்ட மோகம்
இங்கனமே.உன்னூடான என்
காதலும்.......
கடல் நீரில் கலந்து விட்ட என்
ஒற்றை கண்ணீர் துளி தேடி
தர சொல்கிறாய்..உன் மனதை
அறிந்து கொள்வதை காட்டிலும்
அது எனக்கு எளிதென்பதை அறியாமல்..
உனக்கென நான் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடிகளும் உன்னோடான
நினைவுவிதைகளை பதியம் போடும்
நெஞ்சமதில்..என் கண்களும்
நீரை வார்க்கும் சொட்டு பாசனமாய்.....
நீங்காத காயமாய் நீ கொடுத்த அந்த
ஒற்றை முத்தம்..கனவென்றாலும்
என் உதடுகளில் ஒட்டிவிட்ட உன்
இதழ்களின் சிவப்பு சொல்லும் உன்மீதான
காதலதை......
உறவுகளை சுட்டிக்காட்டி என் காதலதை
நீ நிராகரிக்கும் வேளைகளில் என் உயிர்
வேரை உன் சொற்கள் அறுத்தெடுப்பதை
நீ அறிவாயா?....
உன் மீது மதம் கொண்ட என் காதல்
உன்மதமதை பார்க்கவில்லையே..
அங்கனம் பார்த்து வர அது வியாபாரம்
இல்லையடி தோழியே.....சாதி காட்டி
சாகும் வரம் கொடுத்தாய்..
சுடும் பாலையில் பாரிஜாதமாய்
உன் நட்பு...உப்பு நீரின் மீதுக்கொண்ட
தாகத்தினால் என் கண்ணீரை பருகும்
முலைபால் பருகும் மழலை போல...
உனக்கென நான் வளர்த்த என் சுவாசமும்
மெல்ல முதுமை அடைந்து மரணத்தை
சுவாசிக்கும் நீ எனை நீங்கும் அக்கணமே...
கன்னி அவள் கூந்தல் சேரக்கொண்ட மோகம்
இங்கனமே.உன்னூடான என்
காதலும்.......
கடல் நீரில் கலந்து விட்ட என்
ஒற்றை கண்ணீர் துளி தேடி
தர சொல்கிறாய்..உன் மனதை
அறிந்து கொள்வதை காட்டிலும்
அது எனக்கு எளிதென்பதை அறியாமல்..
உனக்கென நான் காத்திருக்கும்
ஒவ்வொரு நொடிகளும் உன்னோடான
நினைவுவிதைகளை பதியம் போடும்
நெஞ்சமதில்..என் கண்களும்
நீரை வார்க்கும் சொட்டு பாசனமாய்.....
நீங்காத காயமாய் நீ கொடுத்த அந்த
ஒற்றை முத்தம்..கனவென்றாலும்
என் உதடுகளில் ஒட்டிவிட்ட உன்
இதழ்களின் சிவப்பு சொல்லும் உன்மீதான
காதலதை......
உறவுகளை சுட்டிக்காட்டி என் காதலதை
நீ நிராகரிக்கும் வேளைகளில் என் உயிர்
வேரை உன் சொற்கள் அறுத்தெடுப்பதை
நீ அறிவாயா?....
உன் மீது மதம் கொண்ட என் காதல்
உன்மதமதை பார்க்கவில்லையே..
அங்கனம் பார்த்து வர அது வியாபாரம்
இல்லையடி தோழியே.....சாதி காட்டி
சாகும் வரம் கொடுத்தாய்..
சுடும் பாலையில் பாரிஜாதமாய்
உன் நட்பு...உப்பு நீரின் மீதுக்கொண்ட
தாகத்தினால் என் கண்ணீரை பருகும்
முலைபால் பருகும் மழலை போல...
உனக்கென நான் வளர்த்த என் சுவாசமும்
மெல்ல முதுமை அடைந்து மரணத்தை
சுவாசிக்கும் நீ எனை நீங்கும் அக்கணமே...
Friday, 26 March 2010
குட்டி புலம்பல் --2
1.உன்னால் அடிக்கடி
குழந்தை பெறும்
யோகம் எனக்கு ..
உணர்ச்சிகளின் குழந்தை
கவிதை தானே ..
2.வானவில்லின் விதவை கோலம் ...
கண்ணீர் சிந்தும் மேகம் .....
( காதல் தோல்வி )
குழந்தை பெறும்
யோகம் எனக்கு ..
உணர்ச்சிகளின் குழந்தை
கவிதை தானே ..
2.வானவில்லின் விதவை கோலம் ...
கண்ணீர் சிந்தும் மேகம் .....
( காதல் தோல்வி )
Friday, 19 March 2010
kutty kutty pulampal
நீ என்னிடம் பேசாதே
ஊடலில் தான் நீ இன்னும்
உறைகின்றாய் உயிருக்குள்
உனக்கு பிடித்த பாவை
என்பதால் என் உணர்ச்சிகளின்
கயிறு என்றும் உன் கைவசம்
கண்முன் வராதே என்கின்றாய்
உன்கருவிழிக்குள் எனை
ஒளித்து வைத்துக்கொண்டு....
சுருக்கு பைக்குள் ஒளிந்துக்கொள்ளும்
சில சில்லறைகளை போல் ரகசியமாய்
ஒளித்துக்கொண்டேன் உன் சிரிப்பொலிகளை
மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ...
ஊடலில் தான் நீ இன்னும்
உறைகின்றாய் உயிருக்குள்
உனக்கு பிடித்த பாவை
என்பதால் என் உணர்ச்சிகளின்
கயிறு என்றும் உன் கைவசம்
கண்முன் வராதே என்கின்றாய்
உன்கருவிழிக்குள் எனை
ஒளித்து வைத்துக்கொண்டு....
சுருக்கு பைக்குள் ஒளிந்துக்கொள்ளும்
சில சில்லறைகளை போல் ரகசியமாய்
ஒளித்துக்கொண்டேன் உன் சிரிப்பொலிகளை
மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ...
Thursday, 18 February 2010
தனிமை--2
நின்னை கண்ணன் என நினைத்தனயோ??
என் துயில் உருவி துகிலென
நின் மேனி போர்த்திக்கொள்வதில்
அப்படி ஒரு மோகமோ???
தூக்கம் ஆவியாகி இரவோடு கலந்திட
காயும் வெண்ணிலவுக்கும்
வாட்டும் உன் நினைவிற்கும் துணையாக
இதோ இவள்.....
பச்சையம் இழந்த பூந்தளிர் என
நம் வார்த்தைகள் பரிமாறிடாத
இவ்விரவுகளும் தனிமையை
காதலிக்க பழகிவிட்டன......
Subscribe to:
Posts (Atom)


